காசி தமிழ் சங்கமம் பேரானந்த அனுபவம்

அழகான கங்கையில் சூரிய உதயத்தை பார்த்தபடி முன்னோர்களை நினைத்து குளித்து வழிபட்டோம். அங்கிருந்து காஞ்சி சங்கர மடத்தில் தேநீர், பிஸ்கட் அளித்தனர் அங்கு வெங்கட்ரமண கனபாடிகளைப் பார்த்து பேசி அறிமுகம் செய்து கொண்டோம். பாரதி நான்கு வருடங்கள் மூன்று மாதங்கள் வாழ்ந்த சிவமடம் கிருஷ்ண சிவன்- குப்பம்மாள் இல்லம் சென்றோம். அங்கு விரைவில் ஒரு நூலகமும் பாரதி சிலையும் அமைவதற்காக கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. கே. வி. கிருஷ்ணன் அவர்களின் மகன், மகள் ஆகியோரை பார்த்துப் பேசினேன். கோவில் அருகில் உள்ள பாரதி சிலையை தற்போது நாட்டுக்கோட்டை நகரத்தார் பராமரித்து வருகிறார்கள்.