மார்ச் 2026ல், இந்தியாவும், ஐக்கிய அமீரகமும் இதன் தொழில் நுட்ப சாத்தியங்களையும், அதற்குத் தேவையான நிதிகளையும் பற்றிய தீவிரமான கட்டுரைகளை விவாதித்து ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியா பகல் நேரத்தில் சூர்ய சக்தியை ஐக்கிய அமீரகத்திற்கு அனுப்பும்; அந்திப் போதில், சூரியன் இந்தியாவில் மறையும் நேரத்தில், சூரியன் மேற்கிலிருப்பதால் ஐக்கிய அமீரகம் சக்தியை அனுப்பும். 2025ல் சவுதி அரேபியாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளது. அது இந்த ‘ஆற்றல் பெட்டகத்தை’ யூரோப் வரை எடுத்துச் செல்ல உதவும்.
