பிஸினஸ் கூட்டாளியின் நம்பிக்கைத் துரோகம், அதனால் வந்த பொருளாதாரச் சிக்கல்கள், வளரும் குடும்பம் எனப் பல பிரச்னைகள். 2005 -இல் மறுபடியும் எழுதத் தொடங்கினேன். என் மனத்துக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ளவோ, ஏனோ, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் எழுதினேன். முதல் கட்டுரையை ‘ராமகிருஷ்ண விஜயம்’ வெளியிட்டது. அதன் ஆசிரியர் மகாராஜ் விமூர்த்தானந்தாஜி தொடர்ந்து எழுத ஊக்கம் தந்தார். சுமார் இருபது கட்டுரைகளை வெளியிட்டார்.
