கண்ணாடி வில்லைகளிலிருந்து உலோகப் பிரதிபலிப்பான்கள் வரை

சிறிய கண்ணாடித் துண்டானது, ஜன்னலாக இருந்தபோது வெளி உலகை மனிதனுடைய கண்களுக்கு அருகில் கொண்டு வந்தது. ஆனால் அதன் வடிவத்தையும் மேற்பரப்பையும் கட்டுப்படுத்தத் தெரிந்தபோது அது அறிவியல் கருவியாக மாறியது. இங்குதான் ஒளியியல் அறிவியலின் உண்மையான தொடக்கம் எனக் கூறலாம். சாதாரண கண்ணாடித் துண்டை விட சற்று வளைந்த கண்ணாடியால் ஒளியை குறிப்பிட்ட விதத்தில் திருப்ப முடியும்எனக் கற்றுக் கொண்ட மனிதன், அதன் வளைவு சரியாக அமைந்தால் தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை சிறிய பகுதியில் ஒன்றுகூட்ட முடியும் என்பதை உணர்ந்து, லென்ஸை உருவாக்கினான்.