“எம்.எஸ்.வி. காலத்தில் ஆங்காங்கே பெரிய குழுவிசை, அதாவது orchestra அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ராஜா காலத்தில், விஸ்வரூபம் எடுத்து, ஸ்டூடியோக்கள் நிரம்பி வழிந்தன. இன்று, வாத்திய இசை என்பது திரையிசையில் மிகவும் குறைந்து போய்விட்டது. ராஜாவும் ரஹ்மானும் மேற்கத்திய வாத்தியக் குழுக்களுடன் உறவு வைத்திருந்தாலும், இந்தியத் திரையிசையில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்டது”