அஞ்ஞாத வாசம்

“ஹா! ஹியர் கம் த த்ரீ மஸ்கிடியர்ஸ்” என்று ஜூல்ஸ் அருகிலிருந்த மோகனாவிடம் சொல்ல, பதிலுக்கு “டிட் யூ மீன் டு சே த த்ரீ ஸ்டூஜஸ்?” என்றபடி புன்னகைத்துக் கொண்டே வந்து உட்கார்ந்து கொண்டான் ராஜன். கூடவே வந்த வின்சென்ட்டும், சின்டியும் ஆளுக்கொரு நாற்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு அமர்ந்தனர். அந்த காஃபெடேரியாவில் அத்தனை கூட்டம் இல்லை. அங்குமிங்குமாக சிலர் சிதறிக் கிடந்தனர். அவர்கள் மேசைகளில் எல்லாம் பண்டங்கள் இருந்ததோ இல்லையோ, மடிக்கணினிகள் இருந்தன…

இயலாமை

என்னுள் உண்டான மாற்றங்களின் நீட்சியான மனிதன் இன்று என்னையே அழிக்கிறான். வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளாக இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அதீதமான வளர்ச்சியாலும், வலிமையாலும், நான்கு கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஒரு இனத்தின் இருத்தல் இன்று அபாயத்தில் இருக்கிறது.

உருகும் நொடிகள்

ஓவியமோ பல கடிகாரங்களைக் காட்டியது. நிதானமாகப் பார்த்தான். மூன்று கடிகாரங்கள் இருந்தன… வட்டமாக, நீல நிறத்தில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டிக் கொண்டு. ஆனால் ஏனோ எல்லாம் மடங்கி இருந்தன. ஒன்று மேஜை மேல், இன்னொன்று ஒரு மரக் கிளையின் மீது, மூன்றாவது மீன் போல தரையில் கிடக்கும் ஒன்றின் முதுகுப்பகுதி மீது. உற்றுப் பார்த்த போது தான் தெரிந்தது. அந்த கடிகாரங்கள் எல்லாம் உருகிக் கொண்டிருந்தன. அதுவும் மூன்றில்லை. நான்கு. ஆனால் அந்த நான்காவது நீல நிறத்திலும் இல்லை, வட்டமாகவுமில்லை, உருகுவதாகவும் தெரியவில்லை.

ஷ்ரோடிங்கரின் பூனை

வீட்டுச் சாப்பாட்டின் ருசி இன்னமும் நாக்கிலிருந்து விலகாத முதல் செமஸ்டரின் ஓர் இரவு. ரூம்மேட் செந்திலுடன் எதைப்பற்றியோ பேசிக்கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்து செல்கையில், திடீரென்று எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக் கொண்டான் அவன். வந்தவன் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தான். அவனை நான் அப்போது இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். அதற்கு முன்பு, ஏ விங் சீனியர்களின் ராகிங் பொழுதில் நாங்களெல்லாம் இடுப்பால் காற்றில் உயிர் எழுத்துக்களை எழுதிக் கொண்டிருக்க, இவன் மட்டும் கிதார் வாசித்துக் கொண்டிருந்தான்.

ஆடுகளம்

முரளிக்கு பொதுவாகவே விளையாட்டுகளில் ஆர்வமில்லை. சிறுபிள்ளையிலிருந்த அப்படித்தான். நாடே கொண்டாடும் கிரிக்கெட்டைக் கூட அவன் அதிகம் பார்த்ததில்லை; விளையாடியதுமில்லை. இதுவரை அவன் வாழ்க்கையில் மூன்றே முறை தான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறான். மற்ற விஷயங்களில் எல்லாம் சகஜமாக பழகுபவன், விளையாட்டு என்று வரும் போது ஒதுங்கிவிடுவான். சில நேரங்களில் ஒதுக்கிவிடுவார்கள். அப்போது மட்டும் கொஞ்சமாய் வலிக்கும்.

தேடல்

நிச்சயமற்ற தருணங்களால் நிரம்பிய இந்த வாழ்க்கையில் நம்மால் எவ்வளவு திட்டமிட முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. திட்டமிட்டா எல்லாமும் இங்கே நிகழ்கிறது? பொறியியல் சேர்ந்ததிலிருந்து, அமெரிக்கா வந்து, பர்ஸ் போனது வரை எதுவுமே அவன் திட்டமிடவில்லை. யாரோ பி.ஈ. படி என்றார்கள். ஈ.சி.ஈ.க்கு நல்ல மதிப்பு என்றார்கள். ஜி.ஆர்.ஈ. எழுது என்றார்கள். வி.எல்.எஸ்.ஐ.க்கு உடனே வேலை என்றார்கள். இவன் இங்கே இருக்கிறான்… ஆம்பிளிபியரோடும், டெலிவரி பொருட்களோடும், தொலைந்த பர்சோடும் போராடிக்கொண்டு!