நேற்று இரண்டு யானைகள் துண்டுச் சோலைக்குள் இருந்தன. மாலை வெளியே வரும் என எதிர்பார்த்தேன், வரவில்லை. காலை வெளியே வந்து தோட்டத்திற்குள் சென்று அடுத்த மலைமேட்டைக் கடந்து சென்றிருப்பதற்கான காலடித் தடங்களோ, உடைந்த மரக்கிளைகளோ எதுவும் காணவில்லை. கண்டிப்பாக இரண்டு யானைகளும் இப்பொழுதும் சோலைக்குள் தான் இருக்க வேண்டும். வெளியே வருவதென்றால் காலை 6, 7 மணிக்குள் வெளியே வந்திருக்கவேண்டும், அப்படித் தெரியவில்லை.
