ஆழம்

கிணற்றில் இறங்கச் சொல்லி அப்பாதான் பழக்கப்படுத்தியது,சின்னக் கிணறில் ஒரு நாள் குளிக்கத் தண்ணி மொள்ளும் போது வாளி அறுந்து விட்டது அப்போது எனக்கு ஒரு பத்து பன்னிரண்டு வயசு இருக்கும் அருகில் இருந்த மற்ற வாளியில் என்னை அமரச் சொல்லி பயந்த என்னிடம் சத்ரபதி சிவாஜி புலி நகம் அணிந்து தப்பி வந்த கதையச் சொல்லி உள்ளே இறக்கியது.
நான் பயத்தில் வாளியில் அமர்ந்து கொண்டு கயிறையும் பிடித்து கொண்டேன். அமர்ந்து இருந்த வாளி கிணற்றில் கிடந்த வாளி அருகே சென்றதும் யானை தும்பிக்கையை நீட்டி வாங்குவது போல் வாளியை ஏந்திக் கொண்டு ஏற்றம் போல் மேலே வந்தேன் சிரித்துக்கொண்டு.