கணியான் கூத்து

“வாரானே சுடைலைக் கண்ணு, சுடலைக் கண்ணு….நாங்குநேரி தான் கடந்து, தான் கடந்து” “பக்கத்திலே முண்டனுமாம் முண்டனுமாம்” என்று உடையும் குரலில் கம்மலுடன் மத்திம காலத்தில் அப்பாடல் ஒலிக்கும். அதற்கு ஒத்திசைந்து வாசிக்கப்படும் மகுடம் (கையால் வாசிக்கப்படும் தப்பு). பாடலைப் பாடும் அண்ணாவி அதே வரிகளைத் துரித காலத்தில் பாடும் போது, சர்வலகுவாக மிருதங்கம் வாசிப்பதைப் போல் சொற்களை விளாசித் தள்ளுவார்கள் மகுடம் வாசிப்பவர்கள்.ஏதோ ஒன்று நம்மைப் போட்டு உலுக்கியது போன்ற உணர்வுடன், ஒலி வரும் பாதையை நோக்கி செல்வதற்கு ஆசை எழும்.