பெருவெளிக் காற்று

யசோதரா, அவளுக்கு என்ன குறை? அழகு இல்லையா? அறிவு இல்லையா? நளின நாசூக்கு இல்லையா… எல்லாமே இருந்தன. எல்லாமே முழுமையாக இருந்தன. அவனை அவள் எத்தனை நேசித்தாள், அதிலும் குறை சொல்ல என்று ஒன்றுமில்லை. அவன் இரவுகளை அவள் அலங்கரித்தாள். அந்த இருளிலும் அவளது அருகாமை, பெண்வாசனை எத்தனை இதம். எல்லாவற்றையும் மூடி மறைத்தது இருள். வாசனையை மூட முடியுமா? யசோதராவின் வாசனையை அந்த இருளிலும் அவன் அறிவான். எந்த இருளிலும் அறிவான். அவள் அருகே இல்லாவிட்டாலும் கூட அறிவான் நன்றாக. செயற்கையை விட இயற்கையை நேசிக்கிறவன் அவன். வணங்குகிறவன் அவன்… தலையணை மேலே விரிந்து பரந்து கிடந்த கூந்தல். அவள் தலை நிறைய சூடியிருந்த மல்லிகை மலர்கள், இருளில் நட்சத்திரங்களாய்க் கண்டன. மலர்களை விலக்கி கூந்தலை முகர்ந்தான் அவன். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டோ? பெண்ணே, மொத்த பெண் அம்சமுமே, ஆணுக்கு மணம் தான்.

திருமதி

அந்த இன்ஸ்பெக்டர் கிராதகன். அந்தப் பெண் மலங்க மலங்க விழிக்கிறது… அவளை நிற்கவைத்து என்னவெல்லாம் கேட்கிறான். அவருக்கு வேறபெண் யார்கூடயாவது தொடர்பு உண்டா?… என்கிறான். “உனக்கு?…” என்று அடுத்த கேள்வி. யார்கிட்டயாவது கடன் வாங்கித் திருப்பித் தராமல் வீட்டாண்ட தகராறு எதும் நடந்ததா? கெட்ட சகவாசம் எதும் உண்டா? யார் மேலயாவது சந்தேகப் படறீங்களா? உங்க வீட்ல நகை நட்டு எல்லாம் பத்திரமா இருக்கா? அதை அவன் எடுத்துக்கிட்டுப் போயிட்டானா… சிலருக்கு சில ஆட்களை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடுகிறது. இன்ஸ்பெக்டர் கன்னாபின்னாவென்று கற்பனைகள் செய்தான். “என்னய்யா, இந்தாளு பத்தாம் தேதியில யிருந்து காணம்… அதே தேதியில பக்கத்து ஊர்ல யாரும் பொம்பளை காணாமல் போயிருக்கான்னு விசாரிச்சிப் பாரு” …

ஈரிதழ் வால்வுகள்

தொலைபேசி அருகிலேயே அப்படியே கிடந்தார் மாதவன். கண்மூடி அயர்ந்து கிடந்தார். நெஞ்சு மாத்திரம் நடுக்கடல் அலை என பொங்கித் தணிகிறது. விளக்கில் முட்டிய பூச்சியாய்த் தவிக்கிறது மூச்சு. உடனே டாக்சி சொல்லி… அவரை எழுப்பி உட்கார்த்தினார். இட்லிக் கொப்பரையைத் திறந்தாப்போல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார், தெளிவித்தார் அண்ணா. “என்னாச்சி மாது?” சுரணை மெல்ல மீள்கிறது. மாதவன் என்னவோ சொல்ல வந்தார். முடியல்ல… என்று சொல்ல வந்தார்.

மயில் குன்றம்

ஊரில் ரெண்டு கோஷ்டி உண்டு. அந்தப் பகுதி எம் எல் ஏ இதே ஊர்க்காரர் தான். தேரடி தெரு. எப்பவும் வாசலில் நாலு வண்டியாவது அங்கே நிற்கும். அவர் சொல்லும் ஏவல்களை எடுத்துச் செய்ய. குத்து வெட்டு அடிதடி ரகளை. கேட்டால் மாவீரர்கள் என்பார்கள். அடுத்தவன் செல்வன். கொஞ்சம் ஆஸ்திதி பூஸ்திதி உண்டு. பிதுரார்ஜிதம். மாடுகள் வைத்திருக்கிறான். கடவுள் எதிர்ப்பு கொள்கைக்காரன். முன்னோர் சொத்து வேணும். அவர் சொல் வேணாம்… பேச உற்சாகமா இருக்கிறதா இல்லியா? கோவில் உண்டியல்ல போடற பணத்தை எதாவது ஏழை பாழைகளுக்கு உதவி செய்யுங்கள், என்று மேடையேறி சத்தமாய்ப் பேசுவான். சிலருக்கு சாமி வந்தாப் போல ஆவேசமாய் எடுப்பு எடுத்தால்தான் பேசினாப் போல இருக்கிறது. நான் தமிழன்னு சொல்லவே ஆவேசப் பட வேண்டிய அவசியம் என்னவோ? பெரிய லோட்டாவில் காபி கேட்கிற ரகம். இவனுக்கும் சமூகப் பணி என்று சொல்லி பேர் வாங்க கொள்ளை ஆசை. நீங்க எல்லாம் முட்டாள்கள், என்று சொல்லி புகழ் பெற ஆரம்பித்த பின், தேர்தல், வாக்கு என்று போணியாகுமா? என்றாலும் மனுசன் என்றால் ஆசை இல்லாமல் எப்படி?

பன்னீர்

பொழுது போகாத சமயம் அவள் இரும்புப் பெட்டியைத் திறந்து அந்தப் பட்டுப்புடவையை கையில் எடுத்துப் பார்ப்பாள். ஒருமாதிரி பாச்சா உருண்டை மணத்துக் கிடக்கும் அது. அல்சேஷன் நாய் வழிதப்பி சேரிக்குள் வந்தா மாதிரி… அற்புதங்கள் எப்பவாவது நிகழ்கின்றன. பிரத்யேகமாய் அதைக் கட்டிக்கொண்டு அவள் எடுத்துக்கொண்ட புகைப்படம் பெட்டியில் வைத்திருந்தாள். கொஞ்சம் அவ்ட் ஆஃப் ஃபோகஸ் படம் தான். கலரில் எடுக்கச் சொன்னால் கறுப்பு வெள்ளை மாதிரி யிருந்தது, அவளே கறுப்பு என்பதால்.