மலைகள்

அந்த மலைகள் என்னை என்னவோ செய்தன. தினம் தினம் செய்து கொண்டிருக்கின்றன. அவைகளை தூரத்திலிருந்து பார்க்கும் போதெல்லாம் ராம லட்சுமணர்கள் மாதிரி, இரட்டையானைக் குட்டிகள் மாதிரி, வானை முட்டிக் கொண்டு நிற்கும் காளைக் கொம்புகள் மாதிரி இன்னும் என்னவெல்லாமோ தோன்றி மறையும். சில சமயங்களில் அவைகள் மனதில் விபரீதமான பாலுணர்ச்சிகளைக் கிளறி விடுவதையும் நான் உணர்கிறேன்.