மைசூர்ப் பட்டணத்து மல்லர்கள்

குஸ்திக் கலை மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு காலத்தில் தாம் மல்லராக இருந்ததாகப் பிறரிடம் சொல்லிக்கொள்வது அவருக்கு அவமானமாக இருந்தது. தன்னுடைய கம்பீரமான கலைவடிவம் ஒன்றை மறந்துவிட்டு, தளுக்கு நிறைந்த நகரமாக இன்று தன்னைக் காட்டிக்கொள்ளும் மைசூரில், நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் ஒருவரிடம் நான் பேசிய சந்தர்ப்பம் அது.