ந்யூரோ மார்க்கெட்டிங் – மனதை வளைக்கும் மாயக்கலை

2004 இல் ரீட் மாண்டேக் (Read Montague) குழுவினர் ஒரு வித்தியாசமான பரிசோதனையை மேற்கொண்டனர். சோதனைக்கு உட்படுத்தப் பட்டவர்களிடம் பெப்சி மற்றும் கொக்க கோலா பிராண்ட் பெயர்களை மறைத்துக் கொடுத்ததில், பெப்சியே சுவை மிக்கதாக பதில் அளித்தனர். பின்னர், பிராண்ட் பெயர்களை அவர்கள் அறியுமாறு கொடுக்கையில் கோக் தான் சுவையாய் இருப்பதாக அவர்கள் பதில் அளித்தனர். ப்ராண்ட் இமேஜிற்கு அவ்வளவு வலிமை. 2010 இல் கேம்ப்பெல் சூப் நிறுவனம் தனது சூப் வகைகளின் விற்பனை குறைந்ததால் கவலையுற்று, ந்யூரோமார்க்கெட்டிங்கின் உதவியுடன் அதன் சூப் பேக்கிங்கை வாடிக்கையாளர்களிடம் தந்து அவர்களின் இசிஜி,மூளை ஸ்கேன் மற்றும் பயோமெட்ரிக்ஸ் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்துக் கீழ்கண்ட விஷயங்களைக் கண்டறிந்தது. சோதனைக்குப் பின் அந்த நிறுவனம் தனது பேக்கிங்கில் கீழ்க்கண்ட மாற்றங்களை உருவாக்கியது.