தூண்களுக்கு இருபக்கத்திலும்; துணையாக வீட்டடின் கௌரவத்தை பாதுகாக்கும் மதில்கள்., அந்த மதிலுக்கு; வயது முப்பதுக்கு மேல் இருக்கும். அதன் அகலம் மட்டும் சுமார் ஆறு அங்குலம.; உயரம் ஆறடி. கருங் கற்களால் அத்திவாரமிடப்பட்டுக் கட்டப்பட்டது அந்த மதில். ஒரு கோட்டையின் அரண் போல் ஒரு காலத்தில் தோற்றமளித்தது. சாதாரணமான தற்போதைய சுவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதற்கு தான் உயர்ந்தவன், பெலமானவன், முதிர்ந்தவன் , அகண்ட மனம் உள்ளவன் , அனுபவசாலி என்ற பெருமைகள் வேறு. அதோடு கூட கேட் முதலியார் வீட்டிற்குப் பாதுகாப்பு கொடுக்கும் கம்பீரம் கூட அதன் அமைப்பில் தெரிந்தது. அவ்வளவு உயரத்துக்கு மதிலை முருகேசம்பிள்ளை கட்டுவதற்கு அவரது வயது வந்த அழகான மகள்களும் ஒரு காரணம். களுசரைப் பெடியன்கள் தன் இரு பெண்களை பார்த்து கண் அடிக்கக் கூடாது என்பதும் அக் காரணங்களில்; ஒன்றாக இருந்திருக்கலாம்.