மஞ்சள் கனவு

கண்களைத் திறந்தபோது வானம் தெரிந்தது. வாகனங்களின் எண்ணிக்கையும் ஒலியும் அதிகரித்திருந்தன. தன்னிலையை உணர்ந்து இடது பக்கம் திரும்பினேன். ஒரு கால் மடக்கியும் ஒரு கால் தொங்கப்போட்டும் திண்ணையில் அமர்ந்திருந்தவளின் கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தன. கூர்மையான நிலைகொண்ட பார்வை. நான் திடுக்கிட்டேன். நான் பார்ப்பது அவளுக்குத் தெரியவில்லையா? கண்களைத் திறந்தே கனவு காண்கிறாளா?