இந்திய இசையின் மார்க்கதரிசிகள்

ஒரு இசைக்கலைஞர் இசைப் பாரம்பரியமே இல்லாத ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதல் தலைமுறை இசைக்கலைஞராக இருக்கலாம். அப்படிப்பட்டவர் சிறு வயதிலேயே மேதையாக விளங்கி, ஒரு புதிய இசைக்கருவியிலோ அல்லது இசை வடிவத்திலோ சிறந்து விளங்கவும் நேரிட்டால், அந்த இசைக்கலைஞரில் நாம் இசையுலகின் ஒரு மார்க்கதரிசியைக் காண்கிறோம். இப்படிப்பட்ட மூன்று மார்க்கதரிசிகளால் நம் இசைக்கு மாண்டலின், சாக்ஸஃபோன், ஸ்லைட் கிடார் என்ற மூன்று புதிய இசைக்கருவிகள் கிடைத்திருக்கின்றன.