2015 நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் பிரதமர் வேட்பாளாராக முன்மொழியப்பட்டபோது லிபரல் கட்சிக்கு அரசியல் அரங்கில் மூன்றாவது இடமே இருந்தது. ஹார்ப்பரின் கன்சர்வேட்டிவ் ஆட்சி நடந்த கடந்த பத்தாண்டுகளில், NDP பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்து இருந்தது. லிபரல் கட்சி பல ஊழல் புகார்களில் சிக்கி மூன்றாமிடத்தில் தடவிக்கொண்டிருந்தது. மாற்றுக்கட்சிக்காரர்களும் சரி, பொதுமக்களும் லிபரல் கட்சியையோ, ஜஸ்டினையோ பெரிதாக கண்டுகொள்ளவில்லை.