நந்துவின் பிறந்தநாள்

அந்தக் காலண்டரின் சீட்டில் தேதிக்கு அடியில், ‘திரயோதசி’, ‘அசுவினி’, ‘சதுர்த்தசி’, ‘பரணி’ என்று இம்மாதிரி எழுதியிருக்கும். அதில் ஒவ்வொரு சீட்டாகத் தூக்கித் தூக்கிப் பார்த்ததில் ஏழாம் தேதி அன்று ‘திருவோணம்’ என்று இருந்தது. “அட! திருவோணமா! அன்னிக்குத்தானே நேக்குப் பொறந்தநாள்?” என்று நந்து சொன்னான். அவன் சொன்னதை ஒருவரும் கவனிக்கவில்லை. அக்கா மாத்திரம், ‘பாவம், தன் பிறந்தநாளைத் தானே பார்த்துக் கொள்ளுகிறது!’ என்று நினைத்துக் கொண்டாள்.