காகித முகங்கள்

முதலில் தன் இடைமேல் பூச்சிகள் இரண்டு ஊர்வதைப் போலத்தான் அவள் உணர்ந்தாள். இரண்டு அல்ல; கூட்டம் கூட்டமாக பூச்சிகள் அவளின் இடையைச்சுற்றி வளைத்து மேலேறி மார்பை நோக்கிச் சென்றன. அவை பூச்சிக்கூட்டம் அல்ல பெரிய தடித்த நீளமான விரல்களைக் கொண்ட அகன்ற கைகள் என்று புரிந்தபோது, அவை அவளது “காகித முகங்கள்”

பார்வை

சுஜாதா இந்த முறை சற்று எரிச்சலாகி விட்டாள். “இருக்குற வேலையை விட்டுட்டு உங்க கேபினுக்கு வந்து ஜோக் பண்ற நிலைமையில நான் இல்லை திவாகர். ஐ யம் ப்ரெட்டி சீரியஸ்.”
“நானும் சீரியசாத்தான் கேக்குறேன். அரை நாள்ல முடிக்க வேண்டிய வேலைய இரண்டு நாள் எடுத்து முடிச்சீங்க. இன்னைக்கு முடிக்க வேண்டிய வேலை இதுவரைக்கும் பெண்டிங்லதான் இருக்கு. இதப்பத்தி இதுவரைக்கும் நான் ஏதும் சொன்னேனாங்க? ஏற்கனவே ஒருத்தர் கல்யாணம்ன்னு லீவ்ல போயிருக்கார். அவருக்கு பதிலா நான், அவர் வேலையைப் பாத்துக்கிட்டிருக்கேன். நீங்க நாளைக்கு லீவு சொல்றீங்க. என் பொஸிசன்ல இருந்து நீங்க கொஞ்சம் யோசிங்க மேடம்” கடைசியாக மேடம் என்ற வார்த்தையில் கொடுக்கப்பட்ட அழுத்தம் சுஜாதாவை உறுத்தியது.

உங்களுக்குக் கேட்டதா?

எம்.ஜி.ஆருக்குப் பின்னர் லியான்னல் மெஸ்ஸி வந்தார். கடந்த வருடம் சென்று வந்த ஸ்பானிஷ் கிளாசிலிருந்தே மெஸ்ஸியை எனக்குத் தெரியும். அவருக்குப் பின் தூக்கு போட்டுக் கொண்ட என் தாத்தாவின் மூத்த மனைவி, ஸ்டீவ் ஜாப்ஸ் என்று ஆளாளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதற்கு நடுவில் பசித்தது. ப்ரெட்டை தண்ணீரில் நனைத்துச் சாப்பிட்டேன். அடுத்த விளையாட்டாக எனக்குப் பிடித்த படங்களை காட்சி பை காட்சியாக என் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தேன். மெளன ராகம், இயற்கை, எங்கள் வீட்டுப் பிள்ளை என்று ஒவ்வொன்றாய்.