20-20ல் உலகக்கோப்பை வெல்லுவோமா மாட்டோமான்னு இந்தியா முழுவதும் காலைல காபி குடிச்சதுல இருந்து இரவு படுக்கையை போடற வரை பேசிக்கொண்டிருக்க, சத்தமேயில்லாம நம்மூரு விசுவநாதன் ஆனந்த் வெற்றிகரமா தன்னோட செஸ் உலக சாம்பியன் பட்டத்தை மற்றொரு முறை தக்க வச்சிட்டிருக்கார். இன்னுமொரு இரண்டு வருஷத்துக்கு ஆனந்த்தான் சேம்பியன். ஒரு டோர்னமென்ட்லயும், இரண்டு மேட்சிலயும், அதுவும் இரண்டு பெரிய ஆட்களுக்கு எதிரா விளையாடி ஜெயிச்ச ஆனந்தின் இந்த உலக சேம்பியன் பட்டம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.