வைலவேக்கு ஆண்கள் வரப் போகிறார்கள். இப்போதெல்லாம் சில இரவுகள் நான் தூங்காமல் விழித்துக் கவலைப்படுகிறேன், இந்த கிரகத்துக்கு வரப்போகிற ஆண்களைப் பற்றி, என் இரண்டு பெண்களைப் பற்றி, கடைசிக் குட்டி பெட்டா காதரீனாஸன்னைப் பற்றி, கேட்டியையும், என்னையும் பற்றி, என் வாழ்வுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றி. எங்கள் முன்னோர்களின் நாளேடுகள் ஒரு நீண்ட கதறலாக ஒலிக்கின்றன, நான் இந்த மாறுதலைக் குறித்து மகிழ வேண்டுமோ என்னவோ. ஆனால் ஆறு நூற்றாண்டுகளை அப்படி உதறி எறிய முடியவில்லை. அல்லது 34 வருடங்களைக் கூட உதற முடியவில்லை.
ஆசிரியர்: joannaruss
அதெல்லாம் மாறியபோது – 2
வாயில் முற்றத்தில் ஒரு நபர் நின்றான். அந்த இன்னொரு உயரமான மனிதன். சில நிமிடங்கள் அவனைக் கவனித்தேன் – வேண்டும் போது என்னால் கொஞ்சமும் ஒலியெழுப்பாமல் நகர முடியும்- அவன் என்னைக் கவனிக்கிற மாதிரி நான் நின்ற போது, அவன் தன் கழுத்தில் இருந்த ஒரு சிறு எந்திரத்துடன் பேசுவதை நிறுத்தினான், மிக உயர்ந்த தரமுள்ள ரஷ்யனில் பேசினான், “ பாலினச் சமத்துவம் பூமியில் மறுபடி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று உங்களுக்குத் தெரியுமா?”
அதெல்லாம் மாறியபோது
எங்களை விட உருவில் பெரியவர்கள். பெரிதாக மட்டுமில்லை, அகலம் வேறு. இரண்டு பேர் என்னை விட உயரம், நானே ரொம்பவும் நெட்டை என்று பெயர். காலணி இல்லாமல் என் உயரம் ஒரு மீட்டர், 80 சென்டி மீடர். அவர்களைப் பார்த்ததுமே எங்கள் இனம் என்று தெரிந்தது, ஆனால் எங்களிடமிருந்து வேறுபட்டு இருந்தனர். எளிதில் சொல்லி விட முடியாதபடி மாறிய ஆட்களாகத் தெரிந்தார்கள்.