பூகிக்கு தான் பின்னோக்கி நீந்த கற்றுக்கொடுத்ததாகவும், டூகி இரவு நேரங்களில் நிறம் மாறும் என்றும் கதைகளை நீட்டிக்கொண்டே சென்றாள். நாளாக நாளாக அவள் கதை பரப்பு நீண்டு கொண்டே சென்றது. பெட் ஷாப்களில் தரப்படும் மீன் உணவில், கோல்ட் பிஷ்களுக்கு பச்சை நிற உணவே மிகவும் பிடிக்கும், மற்றதை தொடாது எனவும் பரப்புரை செய்வாள்.
