கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை

This entry is part 9 of 72 in the series நூறு நூல்கள்

14, 16 மே 1976 தேதிகளில் நடந்த இடதுசாரி அரச பயங்கரவாதமானது சுதந்தர இந்தியாவில் நடந்த மிக மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் வன்முறையாக ஆகிப்போனது. மேற்கு வங்க அரசு சுமார் பத்தாயிரம் பேரை அல்லது அதற்கும் மிக அதிகமான எண்ணிக்கையிலானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது. பாலியல் வன்கொடுமை, கொலை, குடி நீரில் விஷம் கலப்பது, குடிசைகளுக்குத் தீவைப்பது என அனைத்து பயங்கரங்களும் அரசால் நிகழ்த்தப்பட்டது.