எழுத்து பத்திரிகை – 1968 – தலையங்கம் – சி.சு.செல்லப்பா

இந்த ‘குணங்களை வைத்து எழுத்துவின்
பத்தாண்டுகால 114 ஏடுகளை மொத்தமாக
பார்த்ததில் தெரியவருவது என்ன? எழுத்துவில்
இதுவரை வெளியாகி இருக்கும் ஏறக் குறைய
500 கட்டுரைகளும், 700 கவிதைகளும் மற்றும்
சிறுகதைகள், மதிப்புரைகளும் இதர அம்சங்
களும் பொருட்படுத்தத் தக்கனவா? விமர்சனத்
துறையிலும், கவிதைத் துறையிலும் ஒரு திருப்
பம் விளைவித்திருக்கிறதா? வளர்ச்சி, முன்
னேற்றம் தெரிகிறதா?