நிழல்குத்தில் நுழைந்த பனைமரம்

கதைக்குப் பொருத்தமான சூழலையும், பின்புலத்தையும் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கவில்லை. அறுபது வருடங்களுக்கு முந்தைய உள்கிராமத்தையும், சுற்றுப்புறங்களையும் மறு உருவாக்கம் செய்யவேண்டியிருந்தது. நெடிதுயர்ந்த கரும்பனைகளையும், ஓங்கியுயர்ந்த பாறைக்கூட்டங்களையும் தேடிப் பயணம் செய்தோம். ஆனால், மாற்றத்தி அடையாளங்களாகவும், நவீனமயத்தின் அடையாளங்களாகவும் மாறிய தார் ரோடுகளும், மின்கம்பிகளும், சிமெண்டு போட்ட குடியிருப்புகளும் பனைமரத்தை எரிபொருளாக்கிய செங்கற்சூளைகளுமாகக் கன்னியாகுமரி மாவட்டம் முற்றிலும் மாறிப்போயிருப்பதை நாங்கள் ஏமாற்றத்துடன் புரிந்துகொண்டோம்.