பிரபஞ்சத்தின் உலகளாவிய சுடர் வேமனா, கேள்!

வேமனா செய்யுட்கள் பொருளோடு 

யோகி வேமனா பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆசு கவி. வேமனாவின் செய்யுட்கள் நம் பட்டினத்தாரைப் போல் வாழ்வின் உண்மைகளை போதிப்பவை. “விஸ்வதபிராம வினுர வேம” என்ற ஈற்றடியோடு கூடியவை. அதற்கு “உலகத்தாரால் விரும்பப்படும் வேமனா, கேள்” என்று தனக்குத் தானே கூறிக் கொள்வது போல கூறுகிறார் என்று ஒரு பொருள். மற்றொரு விதத்தில், வேமனாவுக்கு விஸ்வதா என்ற தோழியும், அபிராமா என்ற தோழரும் இருந்தார்கள். அவர்களிடம் “வேமனா கூறுவதைக் கேளுங்கள்” என்று உரைப்பதாக உள்ளது என்றும் கூறபபடுகிறது. வேமாவின் செய்யுட்கள் பெரும்பாலும் சமுதாயத்தை விழிப்படைய வைக்கும் நீதி போதனைகளோடு கூடியவை. அன்றாடம் மக்கள் பேசும் மொழியில் உள்ளவை. எல்லா சித்தர்களின் வாக்குகளையும் போல சுருங்கக் கூறி விளங்க வைக்கும் வகையில் வேமனாவின் செய்யுட்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை தெலுங்கு மூலத்தோடும் அவற்றின் தமிழ் பொழிப்புரையோடும் பார்ப்போம்.

  1. சித்த சுத்தி கலிகி சேசின புண்யம்பு
    கொஞ்சமைன னதியு கொதவ காது
    வித்தனம்பு மர்ரி வ்ருக்ஷம்புனகு னெந்த
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: தூய உள்ளத்தோடு செய்த செயல் சிறியதானாலும் நல்ல பலனை அளிக்கும். பெரிய ஆலமரத்திற்குக் கூட விதை சிறியதே அல்லவா. விஸ்வதா, அபிராமா, வேமனா கூறுவதைக் கேளுங்கள்.

  1. ஆத்ம சுத்தி லேனி ஆசாரமதி யேல
    பாண்ட சுத்தி லேனி பாக மேல
    சித்த சுத்தி லேனி சிவ பூஜ லேலரா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: மனம் தூய்மையாக இல்லாமல் ஆசாரங்களை கடைப்பிடிப்பதால் பயனில்லை. பாத்திரத்தைச் சுத்தம் செய்யாமல் செய்த சமையலால் என்ன பலன்? மனம் நிலையில்லாமல் செய்த சிவ பூஜையும் வீணே.

  1. கங்கி கோவு பாலு கரிடடை னனு சாலு
    கடிவெடைன னேமி கரமு பாலு
    பக்தி கலுகு கூடு பட்டெடைனனு சாலு
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: பானை நிறைய கழுதைப் பாலை விட ஒரு கரண்டி பசும்பால் சுவையாக நன்மை தரும். அன்போடு அளித்த கைப்பிடி உணவு கூட திருப்தி அளிக்கும்.

  1. நிக்கமைன மஞ்சி நீல மொக்கடி சாலு
    தளுகு பெளுகு ராள்ளு தட்டெடேல
    சாட்டு பத்யமுலனு சாலதா ஒக்கடி
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: தட்டு நிறைய பளபளக்கும் கூழாங்கற்களை விட ஒரு நல்ல நீலக்கல் உயர்ந்தது. வீணான பல கவிதைகளை விட, நீதி கூறும் உயிரோட்டமுள்ள கவிதை ஒன்று போதும்.

  1. மிரப கிஞ்ச கூட மீத நல்லக னுண்டு
    கொரிகி சூடு லோன சுருக்கு மனுனு
    சஜ்ஜனுலகு வாரி சாரமிட்டுண்டு ரா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: மிளகாய் விதையின் மீது கருமையாக இருந்த போதிலும் அதனைக் கடித்தால் சுருக்கென்று உரைக்கும். நல்லவர்கள் பார்ப்பதற்கு எவ்விதம் தென்பட்டாலும் அவர்களின் தாக்கம் உயர்ந்ததாக இருக்கும்.

  1. ம்ருகமதம்பு சூட மீத நல்லக னுண்டு
    பரிடவில்லு தானி பரிமளம்பு
    குருவுலைன வாரி குணமு லீலாகு ரா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: கஸ்தூரி மான் பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் அதன் மணம் நாற்புறமும் கமழுவது போல, சான்றோர் வெளியில் ஆடம்பரமாகத் தென்படாவிட்டாலும் உயர்ந்த குணங்களைக் கொண்டிருப்பர்.

  1. மேடி பண்டு சூட மேலிமை யுண்டு
    பொட்டு விப்பி சூட புருகுலுண்டு
    பிரிகிவானி மதினி பிங்க மீலாகு ரா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: அத்திப்பழம் பார்க்க அழகாக இருக்கும். பிட்டுப் பார்த்தால் உள்ளே புழுவாக இருக்கும். அதே போல் பயங்கொள்ளியின் தைரியம் கூட மேலுக்கு படாடோபமும் உள்ளே நடுக்கமுமாக இருக்கும்.

  1. நேர னன்னவாடு நெரஜாண மஹிலோன
    நேர்து னன்னவாடு நிந்த ஜெந்து
    ஊருகுன்னவாடெ யுத்தம யோகி ரா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிக் கொள்பவர் உண்மையில் அறிவாளி. எல்லாம் தெரியும் என்று கூறிக் கொள்பவர் கௌரவம் பெறமுடியாமல் நிந்தைக்கு ஆளாவர். மௌனமாக இருந்து அனைத்தையும் அறிபவரே உத்தம யோகி.

  1. கங்க பாரு னெபுடு கதலனி கதிதோட
    முருகி வாகு பாரு ம்ரோததோட
    பெத்த பின்ன தனமு பேரிமி யீலாகு
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: பெரியதான கங்கை நதி அமைதியாகப் பாய்கிறது. சிறிய சாக்கடை பெரிய ஓசையோடு ஓடுகிறது. உயர்ந்தவருக்கும் தாழ்ந்தவருக்கும் இந்த விதமான வேறுபாடு உள்ளது.

  1. நிண்டு நதுலு பாரு நில்சி கம்பீரமை
    வெர்ரி வாகு பாரு வேக பொர்லி
    அல்புடாடு ரீதி னதிகுண்டு னாடுனா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: நீர் நிறைந்த நதிகள் கம்பீரமாக நின்றுப் பிரவகிக்கும். சிறிய அருவிகள் துள்ளி வேகமாகப் பாயும். தீய குணம் உள்ளவர் பேசுவதுபோல் அவசரமாகவும், ஆவேசமாகவும் நற்குணமுள்ளவர் பேசமாட்டார்.

  1. அல்புடெபுடு பல்கு நாடம்பரமு கானு
    சஜ்ஜனுண்டு பல்கு சல்லகானு
    கஞ்சு ம்ரோகினட்டு கனகம்பு ம்ரோகுனா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: அற்பர்கள் ஆடம்பரமாகப் பேசுவர். சான்றோர் அமைதியாகப் பேசுவர். வெண்கலம் ஓசையிடுவது போல் பொன் ஓசையிடாதல்லவா!

  1. குலமு லோன லொகரு குணவந்துடுண்டின
    குலமு வெலயு வானி குணமு சேத
    வெலயு வனமுலோன மலய ஜம்புன்னட்லு
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: குலத்தில் ஒருவர் குணவானாக இருந்தாலும் அந்தக் குலம் முழுவதும் அவரால் மதிக்கப் பெறும். காட்டில் ஒரு சந்தன மரம் இருந்தாலும் அந்த வனமெங்கும் மணம் வீசும்.

  1. பூஜகன்ன நென்ச புத்தி ப்ரதானம்பு
    மாடகன்ன நென்ச மனசு த்ருடமு
    குலமுகன்ன மிகுலு குணமு ப்ரதானம்பு
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: பூஜைகள் செய்வதை விட நல்ல புத்தி உள்ளவனாக இருப்பது முக்கியம். பேச்சை விட நல்ல மனத் திண்மை முக்கியம். குலத்தை விட மேன்மையான குணம் பிரதானம்.

  1. உத்தமுனி கடுபுன நோகு ஜன்மின்சின
    வாடெ செறசு வானி வம்ச மெல்ல
    ஜெறகு வென்னு புட்டி செரபதா தீபெல்ல
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: கரும்புப் பயிரின் நுனியில் குருத்து வளர்ந்து கரும்பின் இனிப்பைக் குறைப்பது போல உயர்ந்த வம்சத்தில் தீயவன் பிறந்தால் அந்த வம்சத்தின் கௌரவம் கெட்டுப்போகும்.

  1. ராமுடொகடு புட்டி ரவிகுல மீடேர்செ
    குருபதி ஜனியின்சி குலமு ஜெறசெ
    இலனு புண்யபாப மீலாகு காதொகா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: ராமன் பிறந்ததால் ரகுவம்சம் உய்வடைந்தது. துரியோதனன் பிறந்ததால் குரு வம்சம் அழிந்தது. உலகில் புண்ணியமும் பாவமும் இவ்விதம்தான் இருக்கும்.

  1. ஹீன குணமு வானி நிலுஸேர னிச்சின
    எந்த வானி கன்னா நிடுமு கலுகு
    ஈக கடுபு ஜொச்சி இட்டட்டு ஸேயதா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: தீயவர்களை வீட்டில் சேரவிட்டால் எப்படிப்பட்டவருக்கும் துன்பம் நேரும். ஈ வயிற்றுக்குள் புகுந்தால் வயிற்றைப் பிரட்டும்.

  1. வேரு புருகு சேரி வ்ருக்ஷம்பு ஜெறசுனு
    சீட புருகு சேரி செட்டு ஜெறசு
    குத்ஸிதுண்டு சேரி குணவந்து ஜெறசுரா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: வேர்ப் புழு பெரிய மரங்களை அழிக்கும். பூச்சிகள் சிறிய செடிகளை அழிக்கும். தீயவன் குணவானிடம் சேர்ந்து அவனையும் அழைப்பான்.

  1. அல்புடென்னி வித்யலு அப்யசின்சின கானி
    கனுடு காடு ஹீன ஜனுடெ கானி
    பரிமளமுலு மோய கர்தபமு கஜமௌனெ
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: தீயவன் எத்தனை கல்வி கற்றாலும் உயர்ந்தவனாக மாட்டான். வாசனை திரவியங்களை பூசுவதால் கழுதை யானையாகி விடாது.

  1. வித்யலேனி வாடு வித்யாதிகுல செந்த
    னுண்டினந்த பண்டிதுண்டு காடு
    கொலனு ஹம்சலகட கொக்கெர லுன்னட்லு
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: அன்னப் பறவைகளோடு சேர்ந்து குளத்தில் இருந்தாலும் கொக்கு மாறி விடாது. அறிஞர்களோடு சேர்ந்தாலும் முட்டாள் மாற மாட்டான்.

  1. அல்புஜாதி வானி கதிகார மிச்சின
    தொட்டவாரி னெல்ல தொலக ஜேயு
    செப்பு தினெடு குக்க செரகு தீபெருகுனா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: துஷ்டனுக்கு அதிகாரம் அளித்தால் நல்லவர்களை விரட்டி விடுவான். செருப்பைக் கடிக்கும் நாய் கரும்பின் இனிப்பை அறியாது.

  1. அல்புடைன வானி கதிக பாக்யமு கல்ல
    தொட்டவாரி திட்டி தோல கொட்டு
    அல்ப புத்தி வாடதிகுல நெருகுனா
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: முட்டாளிடம் செல்வம் சேர்ந்தால் பெரியோர்களை மதிக்காமல் விரட்டுவான். அற்பனுக்கு உயர்ந்தவர்களின் ஆற்றல் பற்றி என்ன தெரியும்?

  1. எத்துகைன கானி ஏடாதி தெலிபின
    மாட தெலிசி நடசு மர்ம மெரிகி
    மொப்பெ தெலியலேடு முப்பதேண்ட்லுகு னைன
    விஸ்தாபிராம வினுரவேம!

பொருள்: ஒரு வருட காலம் சொல்லி வந்தால் எருமை கூட விஷயம் புரிந்து நடந்து கொள்ளும். ஆனால் முப்பது வருடங்கள் கற்றுத் தந்தாலும் மூடன் புரிந்து கொள்ளமாட்டான்.

  1. அந்தரங்கமந்து அபராதமுலு ஜேஸி
    மஞ்சிவானி வலெனு மனுஜுடுண்டு
    இதருலெருக குன்னா ஈஸ்வருடெருகடா
    விஸ்வதாபிராம வினுரவேம!

பொருள்: வெளியில் நல்லவன் போல் நடித்து அந்தரங்கத்தில் தீமை நினைப்பவனை பிறர் அறியாவிட்டாலும் இறைவன் அறிய மாட்டானா?

  1. தப்புலென்னுவாரு தண்டோபதண்டம்பு
    உர்வி ஜருலகெல்ல னுண்டு தப்பு
    தப்புலென்னுவாரு தம தப்புலெருகரு
    விஸ்வதாபிராம வினுரவேம!

பொருள்: தவறு செய்யாதவரே உலகில் இல்லை எனலாம். ஆனால் பிறர் குற்றம் காண்பர் இவ்வுலகில் மிகப் பலர் உள்ளனர். பிறர் குற்றம் காண்பவர் தம் தவறை உணர்வதில்லை.

  1. நீள்ளலோன மொசலி நிகிடி யேனுகு பட்டு
    பயிட குக்க சேத பங்கபடுனு
    ஸ்தான பல்மி கானி தன பல்மி காதய
    விஸ்வதாபிராம வினுரவேம!

பொருள்: நீரில் இருக்கும்போது சிறிய முதலையானாலும் யானையைக் கூட நீருக்குள் இழுத்துக் கொல்லக்கூடும். ஆனால் நீரிலிருந்து வெளியே வந்தால் முதலையை நாய் கூட கடித்து அவமதிக்கும். முதலையின் பலம் அது இருக்கும் இடத்தால் வருவது. அதனுடைய சுய பலம் இல்லை அல்லவா!

  1. எலுக தோலு தெச்சி ஏடாதி யுதிக்கின
    நலுப்பு நலுப்பே கானி தெலுப்பு ராது
    கொய்ய பொம்மனு தெச்சி கொட்டின பலுகுனா
    விஸ்வதாபிராம வினுரவேம!

பொருள்: எலித்தோலை எடுத்து வந்து ஒரு வருட காலம் தோய்த்தாலும் அது வெண்மையாக மாறாது. கருப்பாகத் தான் இருக்கும். (மனிதனின் இயல்பான குணத்தை எத்தனை முயற்சித்தாலும் மாற்ற முடியாது). உயிரற்ற மரப் பொம்மையை எத்தனை அடித்தாலும் அதை பேச வைப்பது இயலாத செயல்.

  1. உப்பு கப்புரம்பு ஒக்க போலிக னுண்டு
    சூட சூட ருசுல ஜாட வேறு
    புருஷுலந்து புண்ய புருஷுலு வேறயா
    விஸ்வதாபிராமா வினுர வேமா.

பொருள்: உப்பும், கற்பூரமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தென்படும். ஆனால் அவற்றின் ருசி வேறுபடும். அதேபோல் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி காணப்பட்டாலும் நல்லவர்கள் தனித்துவம் மிக்கவர்கள்..

  1. பாமுக்கன்ன லேது பாபிஷ்டி ஜீவம்பு
    அட்டி பாமு செப்பினட்லு வினுனு
    கலுனி குணமு மான்பு கனு லெவ்வருனு லேரு
    விஸ்வதாபிராமா வினுர வேமா.

பொருள்: பாம்பு போன்ற கொடுமையான பிராணி கூட ஏதாவது சொன்னால் கேட்கும். ஆனால் மூர்க்கனுக்கு எத்தனை கூறினாலும் அவன் குணம் மாறாது.

  1. தாமசின்ச்சி சேயதக டெட்டி கார்யம்பு
    வேகிரிம்ப நதியு விஷம மகுனு
    பச்சி காய தெச்சி படிவேய பலமௌனெ
    விஸ்வதாபிராமா வினுர வேமா.

பொருள்: எந்த வேலையையும் தாமதமாகச் செய்யக் கூடாது. அவசரப்பட்டு செய்தாலும் பலன் விபரீதமாகும். பச்சைக் காயை வாங்கி வந்து உடனே பழுக்க வேண்டும் என்றால் பழுக்குமா? அது பக்குவமாக வேண்டும். மிகவும் தாமதமானாலும் அது விஷமாகி விடும்.

3௦. கானி வானிதோட கலிஸி மெலகுசுன்ன
கானி வானி வலெனெ காந்துரவனி
தாடிக்ரிந்த பாலு த்ராகின சந்தமௌ
விஸ்வதாபிரமா வினுர வேமா.

பொருள்: தீயவோடு சேர்த்து பழகுபவரையும் தீயவனாகவே சமுதாயம் பார்க்கும். பனை மரத்தின் கீழமர்ந்து பால் குடித்தாலும் பார்ப்பவர் அவன் கள் குடிப்பதாகவே நினைப்பர்.

  1. பால நீடி கிண்ட க்ரோலுசுனுண்டெனா
    மனுஜு லெல்ல கூடி மத்ய மண்ட்ரு
    நிலுவதகனி சோட்ட நிலுவ நிந்தலுவச்சு
    விஸ்வதாபிராம வினுர வேமா.

பொருள்: கள்ளுக் கடைக்குச் சென்றமர்ந்து பால் அருந்தினாலும் பார்ப்பவர் கள் குடித்தான் என்றுதான் சொல்வார்கள். எத்தனை நல்லவராக இருந்தாலும் போகக் கூடாத இடத்திற்குப் போனால் இழிவு ஏற்படும்.

  1. வேமு பாலு போஸி பிரேமதோ பென்ச்சின ‘
    சேது விரிகி தீப்பி ஜெந்தபோது
    ஒகு நொகெகாக உசிதஞ்சு டெடுலௌன
    விஸ்வதாபிராமா வினுர வேமா.

பொருள்: வேப்ப மரத்திற்கு அன்போடு பால் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்பு குணம் மாறாது. அதே போல் எத்தனை அன்போடு பேசினாலும் தீயவன் நல்ல குணங்களை ஏற்று மாற மாட்டான்.

  1. முஷ்டி வேப்ப செட்டு மொதலண்ட பிரஜலகு
    பரக மூலிகலகு பனிகி வச்சு
    நிர்ணயாத்ம குண்டு நீசுடெந்துலகௌனு
    விஸ்வதாபிராம வினுர வேம.

பொருள்: வேப்ப மரம் கசப்பாக இருப்பதால் அது பயனற்றது என்று நினைக்கக் கூடாது. அது மருத்துவ குணம் கொண்டது. அதே போல் கொஞ்சம் கோபம் கொண்டவனாக இருந்தாலும் நல்ல முடிவெடுப்பவன் தீயவன் அல்ல.

  1. அல்ப ஜாதி வானிகதிகார மிச்சின
    தொட்டவாரி னெல்ல தொலக கொட்டு
    செப்பு தினெடு குக்க செரக்கு தீபெருகுனா
    விஸ்வதாபிராம வினுரவேம.

பொருள்: அற்பனுக்கு அதிகாரம் அளித்தால் அவன் நல்லவர்களைத் துரத்தி விடுவான். செருப்புகளை விரும்பித் தின்னும் நாய்க்கு கரும்பின் இனிப்பு ருசி தெரியாதல்லவா.

  1. பொந்தி எவரி சொம்மு போஷிம்ப்ப பலுமாறு
    ப்ராணமெவரி சொம்மு பக்தி சேய
    தனமு எவரி சொம்மு தர்மமே தன சொம்மு
    விஸ்வதாபிராம வினுர வேம.

பொருள்: உடலின் மேல் ஏன் அத்தனை மோகம்? அது நிரந்தரமல்ல. உயிரும் நிரந்தரமல்ல. பக்தி யோகம் முக்கியம். செல்வமும் நிரந்தரமல்ல. தான, தர்மங்கள் செய்வது மட்டுமே உடனிருக்கும்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.