வாழ்வென்பது

வாழ்வென்பது

தள தளவென

திறந்து

அழைக்கும்

ஒரு குவளை

மட்டுமே

போதுமா என்ன?

பொன் சிவக்கும்

ஒரு அந்தி

தோழர்களின்

உதிரிப்பூ சிரிப்புகள்

போதுமென தடுக்காத

காதலியின் கரங்கள்

வற்றாது ஊறும்

ஒரு பிரபஞ்ச கானம்

இத்தனையும்

இணைசேர்ந்து

நிறையும் போதே

பொங்க பொங்க

நுரைக்கத் தொடங்குகிறது

ஒரு மதுக்கோப்பை

நொடி நொடியாய்

நீ

முதல் முறை

தொட்ட

என்னுடைய

அதே முலைகள்

அல்ல

இரண்டாம் முறை

தொட்டது

கணம் கணமாய்

நதி பாய்கிறது

இந்த முலைகள்

நீ

ஒருகரை

மூழ்கி

மறுகரை

எழுகையில்

நூறு நதி

கடந்து

முடிகிறது

கள்வனே


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

6 Replies to “வாழ்வென்பது”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.