சகுனியின் சொக்கட்டான்

யுவராஜ் சம்பத்

கோரோனா சதி

அது ஒரு திங்கட்கிழமை, மார்ச் மாதம் இருபத்தி மூன்றாம் நாள் 20 20.

அமெரிக்க வல்லரசின் அதிபர் அவர்களுடைய தினசரி பத்திரிக்கையாளர் சந்திப்பு. உலகின் முக்கியமான விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இந்த சந்திப்பைப் புறம் தள்ளிவிட முடியாது. காரணம், அமெரிக்க வல்லரசு என்பது அனைத்து உலக நடவடிக்கைகளிலும் மேலோங்கிய நிலையில் உள்ளது. உலகம் முழுவதும் தன்னுடைய செல்வாக்கைச் செலுத்த நினைப்பது. மூன்றாம் உலக நாடுகளை தன்னுடைய ஆயுதம் மற்றும் பண பலத்தை கொண்டு அடிபணிய வைக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டதுமான ஒரு நாடு ஆகும். பண்பாட்டுத் தளத்திலும் ஊடகங்களை ஆக்கிரமிப்பதன் மூலமும் உலக நாடுகளில் தன் வீச்சை நிலைநாட்டிக் கொண்டிருப்பதும் ஆகும்.

 அந்த செய்தியாளர் சந்திப்பில்தான் அவர் முதன் முறையாகச் சைனா வைரஸ் என்கிற பதத்தைப் பயன்படுத்தினார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டபோது மீண்டும் அதை உறுதிப்படுத்தும் விதமாகச் சைனா வைரஸ் என்று கூறினார். அது சைனாவில் இருந்துதான் வந்தது என்று ஆணித்தரமாக கூறுவதற்குப் பின்னால், பல்வேறு ஆதாரங்கள் இருக்கும் என்பது பத்திரிகையாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள் . கண்டுபிடித்த பல்வேறு செய்திகளை வைத்துச் சுட்டுவிரலைச் சீனாவை நோக்கித் திருப்பினார்கள். இந்தச் சுட்டுவிரல் அமெரிக்காவை நோக்கி திரும்பவில்லை. ஏன்?

ஏன் என்று யாரும் கேள்வி கேட்கவும் இல்லை. அப்படிக் கேட்டிருந்தால் ஒருவேளை அமெரிக்காவுக்கு எதிரி என்று தமக்கு முத்திரை குத்தி விடுவார்களோ என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஒரு சிலர் துணிந்து அதைப்பற்றி ஆராய ஆரம்பித்தார்கள்.அதன் விளைவாகப் பல்வேறு செய்திகள் வெளி வந்தன. இது நம் மனதில் ஒரு பயத்தை உருவாக்குகிறது. நாம் இந்த மண்ணில் வாழ்வதற்கு இந்த இரண்டு தேசங்களில் ஏதாவது ஒன்றைச் சார்ந்துதான் இருக்க வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது.

இந்த சகுனியின் சொக்கட்டான் தற்போது அமெரிக்காவிற்கு சாதகமாகவே உருட்டப்பட்டு இருக்கிறது. உண்மை அதுதானா? 

இது நடந்து 30 நாள்களுக்குள்  மீண்டும் அமெரிக்க அதிபர் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.இந்த வைரஸ் சைனாவின் வூஹான் மாஹாணத்தில், ஓர் ஆராய்ச்சி மையத்தில் இருந்துதான் வெளிவந்தது. அது தவறுதலாக வந்தாலும் தவறு தவறுதான்.அதற்கு உண்டான விலையைச் சைனா கொடுக்க வேண்டும் அல்லது அதன் பலனை சைனா அனுபவிக்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

அதுபற்றி அமெரிக்க வல்லுனர் குழு, சைனாவின் ஊஹான் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற P4 என்று கூறப்படுகிற நுண்ணுயிர் ஆராய்ச்சி மையத்தைச் சோதனையிட வேண்டும் என்று சைனாவை வற்புறுத்தினார். ஆனால், சைனா முடியாது என்று சொல்லிவிட்டது .இந்த மிரட்டலுக்குப் பின்னால் ஏதாவது அசைக்கமுடியாத ஆதாரம் இருக்கத்தானே வேண்டும்?அது என்ன என்பது பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் குறைந்தது பத்து ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.  செல்வோமா??? 

சரி, வாருங்கள் 2015க்கு போவோம். 

திபெத் பீடபூமியின் மேற்கு  குன்லூன் மலைத்தொடரில் உள்ள கூலியா ஐஸ் கேப். இந்த இடம்தான் நம் கதையின் கதாநாயகனான சகுனியின் பிறப்பிடம். இங்கேதான் 2015இல் அமெரிக்காவும் சைனாவும் சேர்ந்து ஒரு கூட்டு விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள். அந்த ஆராய்ச்சியின் நோக்கம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு உன்னால் இருந்த வைரஸ்களைப் பற்றி ஆராய்வது. இது கூட்டு ஆராய்ச்சி என்பதால் இதனுடைய எல்லா விஷயங்களும் இரண்டு நாடுகளுக்கும் தெரியும். இங்கேதான் இதுவரை விஞ்ஞான உலகத்திற்கே தெரியாத 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 28 வைரஸ்களை கண்டுபிடிக்கிறார்கள்.

இதுநாள்வரை இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி யாரும் மிகப் பெரிதாகக் கவலைப்படவில்லை ஆனால், அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுக்குப்பின் இந்த வைரஸ்களின் கண்டுபிடிப்பு பேசுபொருளாக மாறுகிறது உலகெங்கும். அதற்கு முன்னால், 2014லில், சைபீரியாவில் 30,000 வருடத்திற்கு முற்பட்ட ஒரு பெரிய அளவிலான, பிதோ வைரஸ் என்று பெயரிடப்பட்ட வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது மனித உயிர்களுக்கு எந்தவித பாதிப்பையும் செய்யாது என்பதால் அது பற்றிய ஆய்வுகள் தொடரப்படவில்லை. 

30,000 year-old giant virus found in Siberia — ScienceDaily

Ancient viruses found in Tibetan glacier by Rodrigo Pérez Ortega Jan. 17, 2020 , 12:20 PM

In 2015, when researchers embarked on an expedition to retrieve the oldest ice on the planet, they were doing it to look for clues about past climate. But during the journey—to the Guliya ice cap in China’s Tibet (above)—they also found 15,000-year-old viruses—some of them new to science, Vice reports. The scientists retrieved the ancient viruses by drilling 50 meters deep into the glacier ice. Then, to rule out any contamination, they developed an original method to study the microbes in the lab, they reported earlier this month on the preprint server bioRxiv. The critters they found, including 28 new viral groups, represent the microbes that were present in the atmosphere at the time they were trapped in the ice, giving scientists a window to understanding the past climate and microbial evolution.

அப்படி என்ன அந்த வூஹான் மாநில ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்கிறது? இன்று உலகத்தையே ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் உயிர்கொல்லிக் கொரோனா வைரஸின் தலைமையகம் என்று அமெரிக்க அதிபரால் வர்ணிக்கப்பட்ட அந்த ஆராய்ச்சிக்கூடம் ஒரு மலை சார்ந்த இடத்தில் இருக்கிறது.இந்திய மதிப்பில் 300 கோடி ரூபாய் செலவில் 2015இல் கட்டிமுடிக்கப்பட்ட அந்த ஆராய்ச்சி மையம் 2018டில்தான் தன் பணியைத் துவங்குகிறது.

இது ஏன் 2015இல் கட்டி முடிக்கப்பட்டது என்ற கேள்வி உங்கள் மனதில் எழுமானால் உங்களுக்குப் பாராட்டுகள். 

காரணம் இருக்கும்தானே?

இந்த ஆராய்ச்சிக்கூடத்தில் சற்றேறக்குறைய 1500க்கு குறையாத அளவில் பல நூறு வைரஸ்களின் பல்வேறு உருமாறுதல்  (Strain) பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று, அந்த உருமாற்றங்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆராய்ச்சிக்கூடமாகக் கருதப்படுகிறது. மிகவும் பலத்த பாதுகாப்புக்கு இடையில் இதன் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.   எபோலா போன்ற வைரஸ்களின் உருமாற்றங்களும் இங்கே பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன.

P4 என்பது மிகவும் அதிகமான மக்களை கொல்லக்கூடிய நோய்க் கிருமிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் மையம். இந்த ஆராய்ச்சி மையத்தில்தான் 2015ஆம் ஆண்டு சைபீரியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணின் மாதிரி ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதனால் வைரஸ் இங்கிருந்துதான வெளியே போயிருக்க வேண்டும் என்று ஒரு சாரார் நம்புகின்றனர்.

ஆனால், உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தைச் சார்ந்த தொற்றுநோய் இயல் ஆராய்ச்சியாளர் David Heymann இதை நம்ப மறுக்கிறார்.

இந்த ஆராய்ச்சிக்கூடத்தில் பணிபுரிந்த யாரோ ஒருவர்தான் கொரோனா நோய்த் தொற்றின் ஆரம்பப் புள்ளி என்றும், அவர் மூலம் மற்றவர்களுக்குப் பரவியது என்றும் ஒரு சிலர் நம்புகிறார்கள்.  வேறு சிலரோ அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் அந்நகரில் உள்ள இறைச்சிக் கூடத்திற்குச் சென்றதாகவும், அந்த இறைச்சிக் கூடத்தில் உள்ள மற்ற நபர்களுக்கு அதைப் பரப்பிவிட்டார் என்றும் நம்புகிறார்கள். மற்ற சிலரோ இது வௌவால் மூலம் பரவியிருக்கும் என்றும் நம்புகிறார்கள், அல்லது அப்படி சைனாவால் நம்ப வைகப்பட்டிருக்கிறார்கள். 

தொற்றின் மையம் வூஹான் நகர இறைச்சிக்கூடம் என்று பலரும் நம்புவதற்குக் காரணம், உலகெங்கும் சைனர்கள், கரப்பான் பூச்சி முதல் கரடி வரை உயிருடனோ அல்லது சமைத்தோ சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் என்று கருதப்படுவதாகவும் இருக்கலாம்.

21 மார்ச் 2020இல் அலெக் மிஷாட், அமெரிக்காவின் பிரபல ஊடகவியலாளர், ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். புவி வெப்பமாதல் காரணமாகப் பனிப்பாறைகள் வேகமாய் உருகி வருவதையும், அதைத் தொடர்ந்து வெள்ளப் பெருக்கையும், கடலின் நீர்மட்டம் உயர்வதையும் நாம் தற்போது பார்த்து வருகிறோம். அப்படி ஒருவேளை பனிப்பாறைகள் உருகும்போது அந்த பனிப்பாறைகளின் கீழ் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உயிர் வாழ்ந்து வருகிற வைரஸ்கள், நோய்க் கிருமிகளைத் தாமாகவே வெளிவிடும். அப்படி ஒரு சந்தேகம் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்கு எழுந்தது என்றும் கூறுகிறார். இது டிவிட்டரில் விவாதப் பொருள் ஆகிறது.

“In a worst-case scenario, this ice melt could release pathogens into the environment.” 15,000 year old viruses found in a Tibetan glacier .Twitter.21.03.2020..

Several Ancient Viruses Have Been Discovered in 15,000-Year-Old Glacial Ice

~oOo~

அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘தி நேஷன்’ என்னும் இடதுசாரிப் பத்திரிகையின் பிரதான செய்தியாளர் கென் க்ளிப்பென்ஷ்டைன் என்பவர் சில அதிர்ச்சியூட்டும் தரவுகளைத் தருகிறார்.  மேலே உள்ளது – அமெரிக்க ராணுவத்தின் தெற்குப் பகுதித் தலைமையின் அறிக்கையின் நகல்.

உலகின் சக்தி மிகுந்த ராணுவம் அமெரிக்காவின் ராணுவம்  என்பது உலகறிந்த உண்மை. அதற்காக அவர்கள் ஒவ்வொரு வருடமும் செலவிடும் பணம் மிக அதிகம். சென்ற வருடம் 65,000 கோடி அமெரிக்க டாலர்களை செலவழித்து இருக்கிறார்கள். இது இந்திய ரூபாயில் 50 லட்சம் கோடிகள். இந்தத் தொகை சைனா, சவுதி அரேபியா, இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் மொத்த ராணுவச் செலவைக் காட்டிலும் அதிகம்.

இவ்வளவு செலவுகளும் அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுவதனால்தான். அப்படிப்பட்ட ஆராய்ச்சியின் விளைவினால் இன்றைக்கு நாம் பாவித்துக் கொண்டிருக்கிற பல்வேறு வசதிகளும் கிடைத்திருக்கின்றன. 

உதாரணத்திற்கு, இன்றைய இன்டர்நெட்டில் ஆரம்பப்புள்ளி ஆர்பா நெட். (Advanced Research Projects Agency Network.) அமெரிக்க ராணுவத்தின் தலைமை நிலையக் கம்ப்யூட்டர்கள் அனைத்தையும்  இணைப்பதற்கு 1960இல் எடுத்த முயற்சியே, ஆர்பாநெட் கண்டுபிடிப்பு.

அடுத்து, இன்று எல்லோரும் 30 நாள்களாக வீட்டிற்குள்ளே இருந்து பொழுதைப் போக்குவதற்கு வசதியான கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, மொபைல், வீடியோ மாநாடு போன்றவற்றின் உயிர் இணையான கண்ணாடி இழை (ஆப்டிக் பைபர்) என்கிற கண்டுபிடிப்பை நிகழ்த்தியது அமெரிக்க ராணுவ ஆராய்ச்சிக்கூடமே. இந்தக் கண்டுபிடிப்பு இரவு நேரங்களில் போர்க்களத்தில் ஒளியூட்டுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது அமெரிக்க ராணுவம்.

அந்த ஆராய்ச்சிகளை எப்படி நடத்த வேண்டும், அதன் முடிவுகள் அமெரிக்க அதிபருக்கு மட்டுமே தெரிவிக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் எழுதப்பட்ட விதி. அவர்கள் ஒரு நல்ல நாளான வெள்ளிக்கிழமை, ஜனவரி 6, 2017 அன்று ஓர் ஆய்வறிக்கையை, தங்கள் தலைமைக்கு அனுப்பினார்கள். அதில் அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருளும் 2015 திபெத் ஆராய்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மண்ணின் மாதிரி.

அதை ஏன் ஆராய்ந்தார்கள் என்பது அமெரிக்க அதிபருக்கு மட்டுமே தெரியும். அந்த அறிக்கையின் 396ஆவது வரியில், எதிரிகள் மற்றும் ஆபத்து என்று ஒரு தலைப்பிட்டு பத்து வரிகளில் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் கூடிய விரைவில் சுவாசம் சம்பந்தப்பட்ட ஒரு வைரஸ் தொற்றால் பாதிக்கப்படலாம் என்றும், அது மிக வேகமாக பரவும் என்றும் குறிப்பிடுகிறார்கள். அதனால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடுகிறார்கள், 

அந்த அறிக்கையின் 462ஆவது வரியில், இந்த தேசத்தின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை தெரிவிக்கிறார்கள். அப்படி ஓர் அசாதாரண சூழ்நிலை வரும்போது இந்த தேசத்திற்கு, மருத்துவர்களைக் காப்பதற்கு வேண்டிய உபகரணங்களும், பொதுமக்களுக்கு முகமூடிகளும், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர் போன்றவையும் மிக அதிகம் தேவைப்படும் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சொன்னார்கள். 

ஆனால், அமெரிக்க அதிபர் இதை மிகப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . என்ன காரணம்? ஒன்றுமில்லை, நம்மை மிஞ்சி இந்த உலகில் எதுவும் நடந்துவிடாது என்கிற வழக்கமான அமெரிக்க மனப்பான்மை.ஆனால், அது ஓர் உயிரியல் போராகவும் இருக்கலாம் என்பதை அவர்கள் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், அதிபர் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பாரோ என்னவோ!!

~oOo~

நான்தான் பெரியவன் என்பதை எப்படிச் சொல்வீர்கள்? பணக்காரனாக இருக்கிறீர்கள்! மிகவும் அறிவாளியாக இருக்கிறீர்கள்! பலசாலியாக இருக்கிறீர்கள்! எதையும் சந்திக்கக்கூடிய தைரியசாலியாக இருக்கிறீர்கள்! மேலும், எப்படி எப்படி எல்லாமாகவோ இருக்கிறீர்கள்!

இப்படித்தான் அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளில் தன்னை வளப்படுத்திக்கொண்டது. இதற்கு எல்லாவித தந்திரங்களையும் பயன்படுத்தியது. இன்றைக்கும் உலக வியாபாரம் அமெரிக்காவின் பண மதிப்பில்தான் நடைபெறுகிறது. எதை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பெறமுடியும் என்பதையும் நேற்றுவரை நிரூபித்திருக்கிறது. அதனால்தான் பெரியண்ணன் என்கிற பெயரையும் பெற்றது.

அந்தப் பணத்தை சம்பாதிப்பதற்குப் பெரிய நிறுவனங்கள் தேவை. முதலீடுகள் தேவை. பணி ஆட்கள் தேவை. பொருட்களை உற்பத்தி செய்யத் தொழில்நுட்பம் தேவை. விற்பதற்குச் சந்தைகள் தேவை. அமெரிக்கா ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது. அதை விற்பதற்கு, அந்த ஆயுதங்கள் உங்களுக்குத் தேவை என்று பல்வேறு நாடுகளை நம்பவைத்து விற்கிறது. அதன் மூலம் பெரும் பொருளை ஈட்டுகிறது.

இதைப்போன்றே ஒவ்வொரு நாடும், தங்களுடைய பொருட்களை உலக அளவில் விற்பனை செய்து, பொருளீட்டி அதன் மூலம் தாங்கள் உலகத்தின் எத்தனையாவது வலிமைமிக்க நாடு என்று கணக்கிட்டுப் பெருமை கொள்கிறது. (இந்தியா எங்கு உள்ளது? கேட்கப்படவேண்டிய கேள்வி. பிறிதொரு சமயம் பார்ப்போம்.)

இதனால் அந்தந்த தேசத்தின் பெரும் பணக்காரர்கள், அந்தந்த நேரத்திய அதிபர்களின் நண்பர்களாக இருப்பார்கள். அந்த நிறுவனங்களின் மொத்த வியாபரம், சொத்து மதிப்பு, ஈட்டும் பணம் போன்றவை அந்த தேசத்தின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின்  இந்த கண்டுபிடிப்பு உலகின் நம்பர் ஒன் பணக்காரரான பில் கேட்ஸ் போன்றவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அவரும் இதைப்பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார். இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும், அந்த மருந்து அமெரிக்காவிலேயே கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அந்த மருந்து கண்டுபிடிக்கப்படாத வரை, இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று அமெரிக்க அதிபர் நினைத்திருக்கலாம். அல்லது கண்டுபிடிக்கப்படும் வரை இதை ஓர் உயிரியல் போர்த் தந்திரமாக உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் நினைத்திருக்கலாம். சைனாவின் தந்திரம் தங்களை சாய்த்துவிட்டதாக அதிபர் நினைத்திருக்கலாம்.

அதனால்தான் அமெரிக்க அதிபரின் சுட்டுவிரல் மீண்டும் மீண்டும் சீனாவை நோக்கியே நீள்கிறது. 

அமெரிக்க உள்நாட்டுத் துறை அனுப்பிய ஒரு முக்கிய தகவல் அறிக்கையில் இந்த சந்தேகம் எழுந்தது என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ (Mike Pampio) கூறுகிறார்.

அமெரிக்க ராணுவத்தின் கூட்டுப்படைத் தளபதி மார்க் மில்லி சென்ற வாரம், இது ஆராய்ச்சிக்கூடத்தில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நோய்க்கிருமியாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். அதனால்தான் அந்த ஆராய்ச்சிக்கூடத்தை அமெரிக்க அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் சோதனையிட முயற்சிக்கிறோம். அந்த சோதனையின் முடிவில்தான் உண்மை வெளிவரும் என்று கூறினார். அவரின் அந்தக் கருத்தைப் பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி. எஸ்பர் ஆமோதித்தார் . இதற்கு முன்னரும் பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்பட்டு பல்லாயிரம் மக்கள் மடிந்தபோதும், இதைப்போன்றே அது மனிதனால் உருவாக்கப்பட்ட  உயிரியல் போர் ஆயுதமா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் அப்படியில்லை என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை என்றும் ஒருசிலர் கருதுகிறார்கள்.

முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி லாரன்ஸ் செல்லின் என்பவர், இந்தக் கொரோனா வைரஸ், சைனாவின் பிரபல ஆராய்ச்சிக்கூடத்தில் வேறு இரு வைரஸ்களின் கூட்டுக் கலவையாக உருவாக்கப்பட்டது என்று கூறி, அதற்குப் பல்வேறு விஞ்ஞான விளக்கங்களையும் கூறியிருக்கிறார்.

மேலதிகத் தகவலுக்கு கீழே உள்ள சுட்டிகளைச் சொடுக்குங்கள்:

COVID-19 has a unique feature pointing to its origin, Opinions & Blogs News | wionews.com

~oOo~

எது நடந்தாலும் பேரமைதி காப்பதிலும், வாய்மூடி மௌனியாகக் காரியங்களைச் சாதிப்பதிலும் சைனாக்காரர்கள் கில்லாடிகள்.

தியனமென் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தை நசுக்கிய விதத்திலும், இரண்டு வருடங்களாக ஹாங்காங்கில் நடைபெறுகிற போராட்டங்களை நசுக்கிய விதத்திலும், இதுவரை  கொரோனாவில் எவ்வளவு பேர் மரித்திருக்கிறார்கள் என்கிற கணக்கிலும், ஒரு ரகசிய மௌனத்தை சைனா காட்டியது. அதைப் போலவே இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பற்றிய தகவல்களிலும் உண்மையை மறைக்கிறதா என்கிற சந்தேகம் உலகம் முழுவதிலும் நிலவுகிறது.

ஆனால், சைனா அமெரிக்காவை குற்றம்சாட்டுகிறது.

கொரோனா அமெரிக்கத் தயாரிப்பு என்று கூறுகிறது.

சைனாவின் வெளியுறவுத் துறை அதிகாரி Zhao Lijian இந்த வைரஸ் அமெரிக்கப் போர் வீரர்களால் எங்கள் ஊரில் திட்டமிட்டு , உலகப் போர் வீரர்கள் விளையாட்டு விழாவின்போது, பரப்பப்பட்டது என்கிறார். அதனால் இதைப் பற்றிய ஒரு தெளிவை, விளக்கத்தை, வெளிப்படைத் தன்மையுடன் அமெரிக்கா கூறவேண்டும் என்கிறார். லிங்க்கை சொடுக்குங்கள்.

Chinese diplomat promotes conspiracy theory that US military brought virus to Wuhan – CNN

https://www.cbsnews.com/news/chinese-official-spreads-conspiracy-theory-us-army-coronavirus-wuhan-china-lijian-zhao/

சரி ஏன் சைனா இந்த சூதை நடத்த வேண்டும்?

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகின் மிகப் பெரும் வல்லரசுகளாக அமெரிக்காவும், ரஷ்யாவும் அறியப்பட்டன. அன்று சைனா என்னும் தேசம் யாராலும் உற்று நோக்கப்படவில்லை.

எல்லா விதத்திலும் ரஷ்யா அமெரிக்காவைவிட முன்னே நின்றதால், ரஷ்யாவைப் புறம் தள்ளிவிட்டால், அமெரிக்கா உலகின் மிகப்பெரும் வல்லரசாகும் என்று அமெரிக்கா திட்டமிட்டது.

விண்வெளி ஆராய்ச்சியில்கூட ரஷ்யாதான் முன்னிலையில் இருந்தது. நிலவில் இறங்கிய முதல் விண்கலம் ரஷ்யாவின் விண்கலம் என்பதை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். (சோயுஸ், வருடம் 1966.)  ஆனால், தொடர்ந்து பல்வேறு உபாயங்கள் மூலம், 26 டிசம்பர் 1991இல், கொர்பசெவ்  மூலம் ரஷ்யாவை அமெரிக்கா உடைத்துத், தானே உலகின் முதல்வன் என்று பறைசாற்றியது.

இழந்த ரஷ்யாவின் இடத்தைத் தான் பிடிக்கவேண்டுமென்று சைனா எண்ணியது. இதுதான் சைனாவின் தொலைநோக்கு பார்வையில் முதல் புள்ளி. கம்யூனிசத்தைப் புறந்தள்ளிவிட்டு, முதலாளித்துவத்தைக் கையில் எடுத்தது. எந்த ஜனத்தொகை சாபம் என்று சொல்லப்பட்டதோ அந்த மக்களை வைத்து உலகின் மிகப்பெரிய தொழில்கூடத்தை நிறுவியது. 1995இல் உலக வர்த்தகத்தில் 3 சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்த சைனா, இன்று 20 சதவீதத்தை எட்டி இருக்கிறது. இது அமெரிக்காவைவிட அதிகம். ஆரம்பத்தில் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கிற தொழில்களில் சைனா ஆர்வம் காட்டியது. அதில் தொய்வில்லாமல் இன்றும் உலகின் பல்வேறு நாடுகளில் தங்களுடைய தொழிற்சாலைகளை நிறுவி, மூன்றாம் உலக மக்களின் உடல் உழைப்பைப் பயன்படுத்திப் பொருளீட்டுகிறது. அதேநேரம் தங்கள் நாட்டின் இளைஞர்களை அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்குப் படிப்பதற்காக அனுப்பி, அவர்கள் மிகப் பெரும் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட்டு, சொந்த நாடு திரும்பி வந்ததும், அதிக தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பொருட்களை தயாரித்து, உலகின் முன்னணி நிறுவனங்களை உருவாக்குகிறது.

 2015இல் அமெரிக்கா உருவாக்கிய பொறியியல் வல்லுனர்களில் 12 லட்சம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். ஆனால், இரண்டு லட்சம் பேருக்கு குறைவானவர்களே அமெரிக்க நாட்டினர். இது ஒரு பிரிவில் மட்டுமே.

அதனால், உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய, பல்வேறு மின்னணுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் சைனாவில் தங்களின் தொழில்கூடங்களை நிறுவினார்கள். ஆப்பிள் போன்ற கைபேசித் தயாரிப்பாளர்கள்கூட தங்களுடைய தொழிற்சாலைகளைச் சைனாவில் நிறுவினர்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு சைனா ப்ராண்டுகள் உருவாகின. உலகெங்கும் அவர்கள் தங்களின் பொருட்களை விற்க ஆரம்பித்து, ஒரு சில பொருட்களில் உலகின் முதல் இடத்தை அடைந்தார்கள்.

இன்று மிகப் பரவலாகப் பேசப்படுகிற 5ஜி தொழில்நுட்பத்தின் உரிமையாளர் சைனாவின் ஹ்வாவேய் நிறுவனம்.

இதன் மூலம் சைனா, உலகப் பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறுகிறது. இப்போது அமெரிக்காவை முந்த வேண்டும் என்கிற எண்ணம் வருவது சரிதானே? அதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம்தானே? அந்த பேராசைதான் இந்த ஆட்கொல்லி நோயின் மூலத்தை, ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து வெளியே எடுத்துவிட்டது.

இப்போது அணு ஆயுதங்கள் இல்லாத, உலகை அழிக்கக்கூடிய ஒரு பெரும் போர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

இப்படி உலகின் பொருளாதாரத்தைப் படுபாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டு, தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்துப் பெரும்பாலான நாடுகளில் உள்ள பெரும் தொழில்களைத் தன் வயப்படுத்த சைனா முயல்கிறது. இதை எதிர்த்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் சட்டங்களை இயற்றியுள்ளனர்.

இந்த நாடுகள், சைனாவை ஒதுக்கிப் புறம்தள்ள முடியுமா என்று யோசிக்கின்றன. சைனாவை தனிமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றன. சைனா ஒரு நேச நாடு அன்று; நாச நாடு என்று சொல்கின்றன. சைனாவில் உள்ள தங்களின் தொழில்கூடங்களை மீண்டும் தங்கள் நாட்டிற்கே கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்றன.

இது சாத்தியம்தானா?  முடியாது என்பதுதான் பல்வேறு அறிஞர்களின் பதிலாக இருக்கிறது.  முடியுமா என்பதை காலம்தான் கூறவேண்டும்.

இந்த நேரத்தில்தான் திருவாளர் பில் கேட்ஸ் இந்தியாவைப் பாராட்டுகிறார். யாரிந்த பில் கேட்ஸ்?

Bill Gates praises PM Modi’s leadership in combating Covid-19 in India | Business Standard News

இடையில், நண்பர் அன்பழகனின் பதிவில் இருந்து வந்த இந்தச் செய்தியைப் பாருங்கள்…

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

சினா பவாரி பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். Mr. Sina Bavari, Ph.D. US Army Medical Research Institute of Infectious Diseases (USAMRIID) Frederick, MD 

அமெரிக்க இராணுவ ஆய்வகத்தில் வைரஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட டைரக்டர், ரகசிய நிதியில் ஈபோலா வைரசுக்குக் கண்டுபிடித்த மருந்தை, தற்போது சார்ஸ் – 2 என அழைக்கப்படும் கோவிட் 19 வியாதிக்குத் தீர்வான ஒரே மருந்தாக கொண்டுவரப் போகிறார்கள். 

இந்த மருந்தை உருவாக்கிய சினா பவாரி, 9 ஆண்டுகள் அமெரிக்க இராணுவ ஆய்வகத்தில் பணிபுரிந்தவர், திடீரென 2019தில் பணியிலிருந்து விலகித் தனியாகக் கன்சல்டிங் நிறுவனம் ஒன்றைத் தொடங்குகிறார். எட்ஜ் பையோ இன்னோவேஷன்ஸ் கன்சல்டிங் என்ற அந்தப் புதிய நிறுவனம், துவங்கியவுடனேயே உலகச் சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசனை வழங்கும் பணியில் அமர்கிறது.

அவரிடம் நோய்க்கான மருந்து இருக்கிறது. நோய் இப்படித்தான் வெளவால் மூலமாகவும், மற்ற விலங்குகள் மூலமாகவும் பரவும் என்ற அவரின் கற்பனைக் கதை, அப்படியே வுஹானிலிருந்து செயல்படுத்தப்படுகிறது. 

மரண பயத்தைக் காட்டிய பிறகு தற்போது ஏற்கெனவே கண்டுபிடித்த மருந்து தயார் நிலையில். இனி அந்த ஒரு மருந்துதான் தீர்வு என்று முரசு கொட்ட துவங்குவார்கள். தற்போது துவங்கியும் விட்டார்கள். 

ஒரு மாத்திரையின் விலை 18,000 ரூபாயாம்.

இந்த இரு நாடுகளும் இந்த உச்சத்தை அடைய இன்னும் என்னவெல்லாமோ செய்யும்.

ஆனால், நம் போன்ற மனிதரைக் கொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். யார் இதைச் செய்தால் அதற்குத் தாக்கம் இருக்கும்?

One Reply to “சகுனியின் சொக்கட்டான்”

  1. ’சகுனியின் சொக்கட்டான்’ கட்டுரை கூறும் விபரங்கள் யாவும் தெளிவாகவும் உண்மைத் தன்மையுடனும் விளங்குகின்றன இத்தனை விளக்கமான ஓர் ஆய்வுக் கட்டுரையினை வழங்கிய ஆசிரியருக்கு நன்றியும், வாழ்த்துகளும் !
    அரசியல் களம் போன்றே அறிவியல் உலகும் இப்போது பல குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றன.இதனால் ஆய்வுகளின் மூலம் பெறப்படும் முடிவுகளில் எதனை நாம் நம்புவது என்னும் குழப்ப நிலை நீடிக்கவே செய்கிறது. உதாரணத்திற்கு ஃப்ரான்ஸ் ஆய்வாளர் ‘கொரோனா தீ நுண்மி’ மனிதரால் உருவாக்கப் பட்டதே எனச் சொல்லும் போது, மற்றொருவர் அதற்கு எதிரான கருத்தினை வெளியிடுகிறார். அண்மையில்… வௌவால் பெண்’ என அறியப்பட்ட ”வூஹான் வைரஸ் குறித்து ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தால் இவ்வளவு இழப்புகளையும் தவிர்த்திருக்கலாம் ”எனக் கருதுரைத்துப் பின் சில காலம் மாயமாய் மறைந்து போன ஆய்வாளரும் இப்போது இது மனிதரால் உருவாக்கப்பட்டதல்ல என்கிறார். இவர்கள் சொல்லும் கருத்துகளே எம்மைக் குழப்புகின்றன. இத்த்னைக்கும் மத்தியில் அமெரிக்காவும்-சீனாவும் ஆரம்பித்துள்ள ‘குடுமி பிடிச் சண்டையில்’ பாதிக்கப்படப்போவது……. பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருப்பது…பெரும்பாலும். இவற்றோடு எவ்வித சம்பந்தமும் இல்லாத மக்களே என்பது வேதனையானது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.