ஹாலிவுட் படங்களில் கருப்பர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதில்லை; அப்படியே ஆப்பிரிக்க அமெரிக்கர்களை நாயகர்களாகக் காட்டினாலும், எதிர்மறை கதாபாத்திரங்கள் மட்டுமே தருகிறார்கள் என்பது சென்ற வருட ஆஸ்கார் விருதுகளின் போது முக்கியமான நடைமுறை சிக்கலாக முன்னிறுத்தப்பட்டது. அதன் மூலம் சிறுபான்மையினரையும் பெண்களையும் தற்பால்விரும்பிகளையும் நடுநாயகமாகக் கொண்ட படங்களை எடுப்பதில் எல்லோரும் மும்முரமாவார்கள்; அதன் எதிரொலியாக அகாதெமி விருதுகளிலும் அதுபோன்ற முக்கியமான ஆக்கங்களை பரிந்துரைக்கலாம் என எண்ணினார்கள்.
இந்த வருடம் அது நிகழ்ந்ததா? அந்த மாதிரி வித்தியாசமான கதைக்களனையும் ஹீரோக்களையும் கொண்ட சினிமாக்கள் எவை? ஆஸ்கர் பட்டியலில் எந்த மாதிரி திரைப்படங்கள் இடம்பெற்றால் எல்லைகளுக்குள் அகப்படாமல், வேலிக்குள் சிக்காமல், பரந்துபட்டதாக அமையும்? அப்படிப்பட்ட பதினாறு படங்களின் பட்டியலை டைம் இங்கே சுட்டுகிறது:
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

