மகரந்தம்

மியான்மரின் கடத்தல் வியாபாரம்
[stextbox id=”info” caption=”மியான்மரின் கடத்தல் வியாபாரம்”]

India_Meghalaya_Imphal_China_Thailand_Bangkok_Drug_Trade_Gems_Smuggle_South_Asia_Routes_burma_border_map

யூரோப்பியர் செய்தால் அது நவீன உலகம் கட்டும் முயற்சி. ஆசியர் செய்தால் அது இழிவானது.
முந்நாள் அமெரிக்க அதிபர் மறைந்த ஜான் கென்னடியின் அப்பா ஒரு சாராயக் கடத்தல்காரர். அதில் சம்பாதித்த பெரும் நிதியைக் கொண்டு தன் மகன் அதிபராவதற்கும், அதற்கு முன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒரு பிரதிநிதி ஆவதற்கும் தேர்தல் செலவுகளைச் சமாளித்தார் என்று சொல்வார்கள்.
அதுபோல ஏராளமான அமெரிக்க கோடீஸ்வரர்கள் பல வகை உலகச் சுரண்டல்களில் குவித்த நிதியை வைத்துக் கொண்டு நாடெங்கும் பல கட்டுமானங்களை உருவாக்கி இருக்கிறார்கள். யூரோப்பியர்கள் ஆசிய ஆஃப்ரிக்க நாடுகளில் லட்சக்கணக்கானோரைக் கொன்று குவித்து, கொள்ளை அடித்து, அடிமை வியாபாரம் செய்து, போதை மருந்துகள் விற்று, கிருஸ்தவம் என்ற பெயரில் பல உலக நாடுகளின் கடும் வன்முறையை அவிழ்த்து விட்டுக் குவித்த பெரும் நிதியை வைத்துக் கொண்டு ஏராளமான கட்டுமானப் பணிகளை யூரோப்பில் நிறைவேற்றினார்கள். அதுதான் இன்னும் யூரோப்பியரின் வாழ்வை மேம்பட்ட வாழ்வாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இப்போது பர்மாவில் போதை மருந்துகளையும், கடத்தலையும் பெரும் அளவில் செய்து பெரும் பணக்காரர்களான சிலரும், அவர்களின் நிறுவனங்களும் பர்மாவில் துறைமுகங்களையும், பெருஞ்சாலைகளையும் கட்டத் துவங்கி இருக்கிறார்களாம். அதை நியுயார்க் டைம்ஸ் தன் வழக்கமான பாணியில் ஏளனமாகச் சுட்டுகிறது. கடத்தல்காரர்கள் திடீரென்று கட்டுமானங்களில் இறங்கி விட்டனரென்று. ஆனால் அவர்கள் கட்டுமானங்களில் இறங்கியது அல்ல பிரச்சினை. இன்னும் ஹெரொயின் என்னும் போதைப்பொருள்தான் பர்மாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருக்கிறது. பர்மாவின் ராணுவ ஆட்சியில் பெருமளவு வளர்ந்த இந்த கடத்தல் வியாபாரம் பர்மிய சமூகத்தில் ஆழ்ந்த அளவு ஊழல், லஞ்சம், வன்முறை ஆகியனவற்றை அவிழ்த்து விட்டிருக்கிறது. அப்படி ஒரு சீரழிப்பு பர்மா ஒரு ஆரோக்கியமான ஜனநாயகமாக எழுவதற்குப் பெரும் தடையாக இருக்கும். அதில்தான் நியுயார்க் டைம்ஸ் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் செய்தது இருப்பதில் ஒரு ஆரோக்கியமான நடத்தை அதைக் குறி வைத்து ஏளனம் செய்வது மேட்டிமைப் பார்வை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

http://www.nytimes.com/2015/06/06/world/asia/profits-from-illicit-drug-trade-at-root-of-myanmars-boom.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஹஃபிங்டன் போஸ்ட் எதிர்காலம்”]

Huffington_Post_Arianna_AOL_Verizon_Media_TV_Logo

ஹஃபிங்டன் போஸ்ட் என்ற ஒரு இணையப்பத்திரிகை பல நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியா இந்தப் பத்திரிகையின் வாசகர்களில் ஒரு பெரும் எண்ணிக்கையைக் கொண்ட நாடு. அதனால்தானோ என்னவோ தொடர்ந்து இந்தியாவை இழிவு செய்யும் செய்திகளைத் தேடிப்பிடித்துப் பிரசுரிக்கும் பல மேலைப் பத்திரிகைகளைப் போலவே இதுவும் செயல்படுகிறது. நமக்கு ஏற்கனவே தெரியும்- இந்தியாவைப் பற்றி இழிவாகப் பேசுவதும், எண்ணுவதும், இந்தியாவை உடைத்துப் பல சிறு தேசங்களாக ஆக்கி, அதை மறுபடி காலனி நாடாக ஆக்குவதுமே தங்கள் முதல் கடமையாகக் கொண்ட பெருங்கூட்டம் இந்தியாவில் படித்த, இங்கிலிஷைத் தம் தாய்மொழி போலக் கருதும் மக்கள் நடுவே இருக்கிறது என்பது.
இந்தக் கூட்டத்துக்கு இந்தியாவோ, குறிப்பாக இந்துக்களோ உயர்ந்தெழுவதைக் கண்டால் வயிற்றில் அமிலம் சுரந்து நெஞ்செல்லாம் எரியும். அத்தனை ஒவ்வாமை.
ஆனால் இந்தக் கூட்டத்தினர் வெளி நாடுகளுக்குச் செல்கையிலோ. அங்கு வெளியாகும் பிரசுரங்களுக்கு எழுதுகையிலோ, என்னதான் வெள்ளையரின் பாதுகையைத் தாங்கி, கூழைக் கும்பிடெல்லாம் போட்டு, அவர்களின் ஆணைக்கிணங்கி இந்தியாவை ஏசிக் கட்டுரைகளை எல்லாம் எழுதிக் குவித்தாலும், அங்கு தாம் ஒரு கருப்பு மனிதருக்கு சற்றெ அடுத்த தளத்தில் இருக்கும் கூலி வேலைக்காரன் போலத்தான் என்பது இந்தக் கூட்டத்தின் ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும்.
என்ன செய்வது, வெள்ளையருக்கு அடிமையாக இருந்து அதுவே சுகம் என்று கருதிப்பழகிப் போன கூட்டத்துக்கு அதைத் தாண்டி வரத் தெரியாதுதான். அதுதான் ஹஃபிங்டன் போஸ்ட் போன்ற பிரசுரங்கள் இந்தியாவின் படித்த மக்கள் நடுவே பிரபலமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கும். வேறு இந்தியப் பத்திரிகைகளாவது இந்தியாவை இழிவு செய்யாமல் இருக்கிறதா என்று கேட்டால், இந்தியாவின் ஆங்கில மொழிப் பத்திரிகைகள் ஹஃபிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிகைகளின் சமத்காரமான ஏளனத்தைக் கைக்கொள்ளாமல், நேரடியாகவே தம் மக்களை இழிவு செய்வதை ஒரு தினசரித் தொழிலாகக் கொண்டவை.
இந்த ஹ.போ பத்திரிகை, ஏஓஎல் என்று அறியப்படும், அமெரிக்கா ஆன்லைன் என்ற நிறுவனத்தின் சொத்து. இதன் நிறுவனர் ஒரு அரை வலது சாரி யூரோப்பியர், அமெரிக்காவில் குடியேறிய பத்திரிகையாளர். அவர் இதைப் பெரிதாக விஸ்தரிக்கத் திட்டமெல்லாம் போடுகிறார். ஆனால் இப்போது இந்த ஏஓஎல் என்ற நிறுவனத்தை வெரைஸான் என்னும் தொலைத் தொடர்பு நிறுவனம் வாங்கி விட முயன்று கொண்டிருக்கிறது. வெரைஸான் இதில் வெற்றி பெற்றால், ஹஃபிங்டன் போஸ்டின் எதிர்காலம் இருண்டு போகும் என்று செய்தியாளர்கள் கருதுகிறார்களாம்.
ஆனால் இதில் என்ன புதிது என்கிறார் ஒரு ஹ.போ பத்திரிகையாளர். ஏற்கனவே ஹ.போ வேலைக்காரர்களுக்கு மோசமான, இருட்டான சூழலைத்தானே கொடுத்து வருகிறது என்கிறார் அவர்.
இதைத் தவிர வேறு சில அமெரிக்க ஊடகங்களின் நிலை பற்றியும் இந்தப் பக்கம் சொல்கிறது.

http://blogs.bookforum.com/paper/2015/06/04/
[/stextbox]


[stextbox id=”info” caption=”120 வர்த்தக முதலாகளின் வேண்டுகோள்”]

Global_Emissions_Graph_Finance_Index_Carbon_Clean_Energy_Climate_Change_CO2_vs_GDP

முற்போக்கு சாரியைச் சேர்ந்த ‘போராளி’கள் மட்டுமே உலகம் வெப்பமாவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக அரசுகளைத் தூண்டுகிறார்கள் என்று நாம் நினைப்போம். பெருமுதலியம் எந்த சூழல் காப்பு நடவடிக்கைகளையும் இதுகாறும் உலகெங்கும் எதிர்த்து வந்திருக்கிறது. இதில் நாடு, இனம், மொழி, மதமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எல்லா நாட்டுப் பெருமுதலியமும்- ஆம் சீனாவும் சேர்த்துத்தான், அங்கும் பெருமுதலியம் இருக்கிறது- தட்ப வெப்ப நிலைகளைச் சீரழிவிலிருந்து காக்கத் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளைத் தாம் லாபம் ஈட்டுவதைத் தடுக்கும் முயற்சிகள் என்றுதான் நினைக்கிறது. இதுதான் சமீப காலம் வரை நாமும் கண்டிருக்கிறோம், அனுபவித்திருக்கிறோம். ஆனால் இப்போது முற்போக்கு சாரியினர் நடத்தும் ஒரு வலைத்தளம்/ பத்திரிகையில் இது அத்தனை சரியில்லை என்று தகவல் வெளியாகிறது. உலகப் பெரு முதலிய நிறுவனங்களில் 12 ட்ரில்லியன் டாலர்களை (12000 பிலியன் டாலர்கள்) ஆளும் தலைமை செயலர்கள் (CEOs) உலகத் தட்ப வெப்பநிலை பாதுகாப்புக்கு உலகளாவிய ஒப்பந்தம் ஒன்று உடனடியாக உருவாக வேண்டும் என்று உலக நாடுகளைத் தூண்டுகிறார்களாம்.
இதில் எத்தனை உலக நன்மையைக் கருதிச் செய்யப்படுவது, எத்தனை உலக முதலிய நிறுவனங்களின் வசதிக்காகச் செய்யப்படுவது என்பதை இன்னும் ஆய்ந்தறிந்தால்தான் நிலைமை தெளிவாகும்.
இந்த அறிக்கையைப் படித்தால் தெளிவாகிறதா என்று பாருங்கள்.

http://thinkprogress.org/climate/2015/05/28/3663604/ceos-institutional-investors-climate-change-letter/

நாம் எத்தனை தூரம் ஒதுக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் இந்த அறிக்கையில் புலனாகும். உலக முதலியம் ஆமாம், இத்தனை தூரம் சீதோஷ்ண நிலைகள் தாறுமாறாக இருப்பது பெரும் குழப்பத்தைக் கொடுக்கிறது, இதை மறுபடி நம்பத்தக்க சீதோஷ்ண நிலையாக மாற்ற வேண்டும் என்று ஒரு சிறு அறிக்கை விட்டாலே நாம் ஆஹா என்று புல்லரிக்கும் நிலையில் இருக்கிறோம். உலக அரசுகள் அத்தனை தூரம் உலக முதலியத்தின் கைப்பிடியில் சிக்கி இருக்கின்றன என்பதுதான் என்னவொரு பரிதாப நிலை?!

[/stextbox]


[stextbox id=”info” caption=”குந்துவதா? உட்கார்வதா?”]

squatty_potty_Poop_Pee_Bathrooms_Rest_Room_Posture_Yoga_Medical_Sit

இது வெகுநாட்களாக இந்தியருக்கும், பல யோகா பயில்வோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் மேற்கின் பத்திரிகைகள் இப்படிப் பழைய விஷயங்களை அகழ்ந்தெடுத்து முற்றிலும் புது விஷயம் போல அளிப்பது ஒரு பாணி/ ஸ்டைல் ஆக வைத்திருக்கின்றன. சிறிதே மசாலா சேர்த்துப் பழைய இட்டிலியை உப்புமாவாக அளிப்பது போலத்தான் இது.
மலம் கழிக்க உலகின் வளர்ந்த நாடுகளில் பெருவாரியில் மக்கள் பீங்கான் குடுவை ஒன்றின் மீது அமர்ந்து இருந்து கடனை முடிக்கின்றனர். இந்தியரில் பெருவாரியினர் இன்னும் தரை அளவில் குந்தி இருந்துதான் மலம் கழிக்கின்றனர். இந்தியாவிலும் நகரங்களில் மத்திய வர்க்கமும், உயர் நிலை மக்களும் நாற்காலியில் அமர்வதை ஒத்த நிலையில் இருந்து கழிப்பதைச் செய்வதை இப்போது வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். முதியோர் நிறைந்த குடும்பங்கள் இப்போது அதிகரித்து வருவதால், அவர்களால் முன் காலம் போல குந்தி இருந்து மலம் கழிப்பது முடியாத நிலையில் இப்படி நாற்காலி அமர்வு முறை அவர்களுக்கும் பழகி அதுவே வசதி என்பது போல ஆகி விட்டது.
இந்தச் செய்தியில் ப்ராக்டாலஜி என்கிற துறை சார்ந்த மருத்துவர்கள் மனிதக் குடல்வால், ஆசனவாய் ஆகியவற்றின் நலனைப் பராமரிக்க உதவும் மருத்துவர்கள். இவர்களில் சிலர் குடல்வால் அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு நோயாளிகளின் குடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்கள். இத்தகைய மருத்துவர்களில் ஒருவர் சொல்கிறார் என்று செய்தி சொல்கிறது- மனிதர் நாற்காலி அமர்வு போல இருந்து கழிக்கத் தக்க உடல் கொள்ளவில்லை. குந்தி இருந்து, தொடைகள் வயிற்றின் அடிப்பகுதியை அழுத்தி மலம் வெளியேற உதவிய நிலையில் மலம் கழிக்க ஏதுவான உடல்வாகுதான் அவர்களுக்கு உண்டு. மாற்றி, நாகரீகம் என்ற கருத்தில் நாற்காலி அமர்வைக் கொண்டு மலம் கழிப்பது மலச்சிக்கல், தவிர வேறு பல நோய்களுக்கு மனிதரை ஆட்படுத்தும் என்கிறார். நாடெங்கும் குடும்பங்களுக்கு கழிப்பிடம் கட்டும் திட்டத்தை நிறைவேற்ற முயலும் அரசுகள் இந்தக் கருத்தைக் கவனித்து இதையொட்டிய வகைக் கழிப்பிடங்கள் கட்டுவார்களா, இல்லை மேலை பாணியில் கட்டுவார்களா என்று கவனிக்க வேண்டும்.
மேற்கில் இந்தப் பழைய பாணி குந்தி அமர்ந்து மலம் கழிக்கும் கழிப்பிடங்கள் திரும்ப வருவது மிகக் கடினமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

http://www.huffingtonpost.com/2015/06/08/toilet-squat-video_n_7511706.html
[/stextbox]


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.