எங்கேமார்களும் எப்போமார்களும்

 எங்கேமார்களும் எப்போமார்களும்
(ஆனாலின் மகள்களும் நம்பிக்கைபயத்தின் வாரிசுகள்
அன்றின் பிள்ளைகள்  மற்றும் அனேகத்தின் குழந்தைகளும் கூட)
ஒரு போதும் அனுமானிக்க இயலாது
அவனுடைய பரிமாணத்தை

அவனது
ஒவ்வொரு
பாதமும்  நேசிக்கும்
இந்த பூமியின் இங்கேயை

அவனது இரண்டு
கண்களும்
நேசிக்கும்
வானத்தின் இந்த இப்போதை.

-இல்லையின்  கடைப்பிள்ளைகள்
ஒரு போதும்
தொடங்க மாட்டார்கள்

கற்பனையின் தொடக்கத்தை (மட்டும் இருக்கும் கூடும் இருந்தும்
புலரி இருள் மழை பனி வான
-வில் ;

சுடர் செல் வானம் சேப்ப
நிலவி
ன்  மென்
பாடுநனியை

அல்லது அந்தி நோக்கு பூங்குருவிகள் பக்கிகளினூடே
மரம் வயல் பாறை முள்ளி காடு ஓடை  பட்டானிக்குருவி
மலை. லை)
எனிலின் ஏன்வண்ண உலகங்கள் நிற்க
முடியாது எப்போதும்;

சூரியமணத்தால் ஆன
ஆமை எதிர்த்து
(சிலசமயங்களில்  காட்டு ரோஜாக்களாலான

ஒரு அதிசயம்
சிலசமயங்களில்)
களஞ்சியத்திற்கு
அப்பால்
வடக்கு

ஆங்கில மூலம்

wherelings whenlings
(daughters of if but offspring of hopefear
sons of unless and children of almost)
never shall guess the dimension of
him whose
each
foot likes the
here of this earth
whose both
eyes
love
this now of the sky
– endlings of isn’t
shall never
begin
to begin to
imagine how(only are shall be were
dawn dark rain snow rain
– bow;
a
moon
’s whis-
per
in sunset
or thrushes toward dusk among whippoorwills or
tree field rock hollyhock forest brook chikadee
mountain.   Mountain)
whycoloured worlds of because do
not stand against yes which is built by
forever; sunsmell
(sometimes a wonder
of wild roses
sometimes)
with north
over
the barn
~ e.e. cummings

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.