
கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையைத் தளர்த்திக்கொண்டிருந்தது
அந்த நீண்ட தரிசன வரிசை
கட்டப்பட்ட கால்களைக் கைவிட்டு
பிரகாரத்தைச் சுற்றத்தொடங்கின கண்கள்
களவுபோகும் கழுத்துச்சங்கிலிக்கு
கடவுள் பொறுப்பல்ல என்று
அறிவித்தபடி இருந்தது ஒலிப்பெருக்கி
வானில்
வால்நட்சத்திரம் தோன்றிய தருணம் ஒன்றில்
என் முந்தானையைப் பிடித்து இழுத்தார் கடவுள்
பால்ஊறும் கன்னக்குழியில்
என் பார்வையைப் பறித்து அமிழ்த்திவிட்டு
அந்த தோள்களுக்குப் பின்னே மறைந்துகொண்டார்
அவரது உள்ளங்கை தழுவி
இதழ் பதித்த வேளையில்
என் ஊழி தீர்ந்ததாய் உறுதி சொன்னார்
பின் கடவுளும் நானும் சேர்ந்து சென்று
கற்சிலை ஒன்றைக் கண்டு வந்தோம்
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

அறிவார்ந்த அழகான கவிதை.
ரசித்தேன்.. மிக அருமையான பதிவு.. ஏதோ ஒரு தருணத்தில் அனைவருக்கும் இதே அனுபவம் கிடைத்திருக்கும்.
Awesome…