வாசகர் மறுவினை

அன்புள்ள ஆசிரியருக்கு,

அருமையான தொகுப்பு…பாடல்களை சிறு துண்டுகளாக மட்டும் தந்தது நன்றாக இருந்தது…கட்டுரை ஜென்சியை நினைவு படுத்தியது மட்டுமல்லாமல் முகம் தெரியாத செண்பகத்தக்காவின குரலையும் அறிமுகப்படுத்தியது…அதிக வித்தியாசமில்லைதான்.

திரு.சுகா, வண்ணதாசன், செண்பகத்தக்கா எல்லாரும் நெல்லையில் ஒரே தெருவில் பக்கத்துக்கு பக்கத்துக்கு வீட்டில் குடியிருப்பவர்கள் மாதிரியான உணர்வு!

முன்னர் சுகாவின் இன்னொரு கட்டுரையும் பிரமாதம்…“பண்டிட் பாலேஷுடன் ஓர் உரையாடல்” – ஷெனாய் பற்றிய அருமையான கட்டுரை…

நன்றி,
Essex சிவா

-o00o-

அன்புள்ள சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு

சமீபத்திய இதழில் விவல் அக்கா சிறுகதையும் ஆதாமிண்ட மகன் அபு கட்டுரையும் மிக நன்றாக எழுதப்பட்டிருந்தன. பாராட்டுக்கள். அவற்றைத் தேர்ந்தெடுத்தமைக்கு உங்களுக்கும்.

விவல் அக்கா கதையின் சிறப்பு கடைசி பாராவில் நிகழும் காலமாற்றமும் முடிவும்தான். திட்டமிடப்பட்ட முடிவு வாசகனை ஒரு முட்டுச்சந்தில் விட்டுவிட்டு கதைசொல்லி காணாமல் போவது இயல்பாக நிகழ்கறது.

திருமலைராஐன் ஆதாமிண்ட மகன் அபுவில் குரலுயர்த்தாமல் நிறைய தகவல்களைத் தந்திருக்கிறார். வணிக கவனமிருந்தாலும் கூட கிரீடம் (திலகன் மோகன்லால் நடித்தது) போன்ற நல்லபடங்களை (குறைந்த பட்சம் பேத்தலில்லாத்து)மலையாளத்தில் வருகின்றன. தமிழில் அதேபடம் அசிங்கமானது. திலகனின் பெருந்தச்சன் போன்ற படம் தமிழில் கலியுகம் முடியும்வரை சாத்தியமில்லையென்பதே உண்மை.

சிவாஜி படத்தை முதல் காட்சி முதல்நாள் ஒரு டிக்கட் ஆயிரம் ரூபாய் கொடுத்து நாற்பது படித்த முட்டாள்கள் பார்க்கும்போது (எங்கள் குடியிருப்பில்) தமிழில் எதற்காக நல்லபடம் எடுக்கவேண்டும்? ‘வெட்னஸ்டே’ வை உன்னைப்போல் ஒருவன் ஆக்கினால் போதாதா?

‘சாங் ஆப் ஸ்பேரோஸ்’ ‘பாரடைஸ் நௌ’ ‘கௌண்டர் பீட்டர்ஸ்’ ‘டிவைடட் வீ  ஃபால்’ போன்ற படங்களை கிறுக்கர்கள் பார்த்துவிட்டு அங்கலாய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்………….[1]

நன்றி

அன்புடன்
லாவண்யா

____________________________

குறிப்பு (பதிப்புக் குழு, சொல்வனம்):

[1] Song of Sparrows (2008) – இரானியப் படம்.  இயக்குநர் மஜீத் மஜீதி.

இங்கே ஒரு விமர்சனம்- http://www.salon.com/2009/04/09/roundup_33/

The Counterfeiters (2007) – ஜெர்மன் படம்.  மூலப் பெயர்- Die Fälscher ; இயக்குநர்: ஸ்டெஃபான் ருஸொவிட்ஸ்கி (Stefan Ruzowitzky) ஒரு ஆஸ்திரிய நாட்டு இயக்குநர். இந்தப் படம் பெர்லின் திரைப்பட விழாவில் முக்கியப் பரிசை வென்றது.  அவருடன் ஒரு பேட்டி இதோ: http://www.filmscouts.com/scripts/interview.cfm?File=ste-ruz

இந்தப் பேட்டியில் அவர் சொல்கிறபடி இவர் போலிஷ் சமூகத்தைச் சேர்ந்தவர். பெயருக்கு அர்த்தம் ’சிறு ரோஜா’ (Little Rose).  தன் குடும்பப் பெயரை எப்படி உச்சரிப்பது என்று ஆஸ்திரியருக்கே தெரியாது என்கிறார்.

Divided We Fall- (2000)- இது ஒரு செக் படம்.  இயக்குநர் பெயர்: யான் ஹெரெபெய்க் (Jan Hrebejk)  இங்கு ஒரு விமர்சனம்: http://bostonreview.net/BR26.6/stone.html

இதே பெயரில் ஒரு ஆவணப்படமும் உண்டு. அதைத்தான் லாவண்யா குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை.