ஆயிரம் தெய்வங்கள் – 15

ஸீயஸ் திருவிளையாடல்கள்

இந்திய வரலாற்றில் புராணங்களும் இதிகாசங்களும் எழுதப்பட்ட காலத்தில் இந்திய மன்னர்கள் சந்திர சூரிய வம்சம் என்று பெருமைப்படவில்லையா? அதாவது மன்னன் தெய்வ வாரிசாகக் கருதிக் கொண்டான். இவ்வா மத்திய தரைக்கடல் நாடுகளில் ஸீயஸ் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாயிருந்து உருவாக்கிய வாரிசுகள் எல்லாமே மன்னர் வம்சாவளியாகப் பிற்காலத்தில் போற்றப்பட்டது. இந்த விஷயத்தில் கிருஷ்ணர் தோற்றார் என்று சொல்ல வேண்டும். வரலாற்றறிஞர் டி.டி. கோசாம்பி கிருஷ்ணபகவானின் திருவிளையாடல்களின் பொருள் தாய்வழி சமுதாயம் தந்தைவழி சமுதாயமாக மாற்றப்பட்ட நிகழ்ச்சிகள் என்று கூறியதைப்போல் கிரேக்க ஆசிரியர்களும் ஸீயஸ் திருவிளையாடல்களுக்கெல்லாம் அர்த்தம் கற்பித்துள்ளனர். முதலில் திருவிளையாடல்களை கவனிக்கலாம். தத்துவ ஞானிகள் “நன்றும் அவரே தீதும் அவரே” என்பர். நாம் சென்ற இதழில் கவனித்த ஏஜினா காதல் கதையில் ஸீயஸ் உருவாக்கிய வாரிசுகள் பற்றிக் கவனித்தோம். இதைத் தொடர்ந்து அயோவின் துயரக்கதை – அயோனியன் தீவு பற்றிய தலபுராணமும்கூட.

அயோ

அயோ ஒரு பேரழகி. அயேநாக்கஸ் என்ற நதிதெய்வத்தின் மகள் என்றும் அயா சோஸின் மகள் என்றும் ஹீரா தெய்வத்தின் பெண்பூசாரி, ஆர்கோஸ் நகரைச் சேர்ந்தவள் என்றும் பல கருத்துக்கள் உண்டு. இந்த அயோவுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவுப்படி அவள் லெர்னா ஏர்யைக் கடந்து எகிப்துக்குச் சென்றால் அங்கு ஸீயஸ் வருவார் என்றும் ஸீயஸை ஆறத் தழுவவேண்டும். இக்கனவை அயோ தந்தையிடம் கூற, தந்தை குறி கேட்க வேண்டும் என்று கூறி டெல்ஃபிக்குப் பயணமாகி பின் குறிகேட்டு அது ஆண்டவன் விருப்பம் எனக்கூற தெய்வக்கட்டளையை சிறமேற்கொண்டு அவ்வாறே எகிப்து செல்ல, அங்கே ஸீயஸ் பிரசன்னமாகிறார். ஸீயஸ்ஸும் அயோவும் இணைந்தனர். இந்தச் செய்தியை அறிந்த ஹீரா, ஸியஸ்ஸைக் கேள்விகேட்டார். ஹீராவின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு அயோவை ஒரு வெள்ளைப் பசுமாடாக மாற்றிவிட்டார்.” இது பெண்ணல்ல. கிடாரிக்கன்று” என்று ஸீயஸ் கூறினார். சரி இது என்னுடன் ஓட்டிச் செல்கிறேன் என்று கூறி, வெள்ளைக்கிடாரியை ஆர்கோ என்ற ரத்தக்காட்டேறிக்குத் தீனியாக வாங்ககிறாள். கிடாரிப் பசுவடிவில் இருந்த அயோ ஓடினாள் ஒடினாள். வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். ஆர்கோ அரக்கனுக்கு 100 கண்கள். 50 கண்கள் விழிக்கும்போது 50 கண்கள் துõங்கும். அயோப் பசு (கன்று ஈன்றாத கிடாரிப் பசு) மறைவான இடம் தேடி மனித உருப்பெற்று இஃபாசிஸைப் பெற்றதும் அயோ முக்தி பெற்றாள். இவள் கர்ப்பமாயிருந்து ஒடி ஒளிந்த இடங்களில் எல்லாம் புற்களைப் பெறும் பாக்கியம் மண்ணுக்குக் கிட்டியதாம். இதுவும் ஸீயஸ்ஸின் திருவிøளாயடல். நுõறு கண்கள் உடைய ஆர்கோசை நிரந்தரமாகத் துõங்க வைக்க மீதி 50 கண்களுக்கும் தெய்வ சாபம் பெற்றது. அயோவின் துன்பங்களுக்குப் பரிசாக அவன் என்றும் நிரந்தரமாக விண்ணில் ஜொலிக்கும் நட்சத்திரமானாள். ஒலிம்பியாவில் அவளுக்கு இடம் கிடைத்தாலும் – அயோனியன் தீவு என்றாலே அது துன்பம் தரும் என்ற மூடநம்பிக்கை கிரேக்கர்களுக்கு ஏற்பட்டது.

அயோவின் மகன்- ஸீயஸ்ஸின் புதல்வன் இபாஃபஸ். இவனுக்கும் ஹீரா கொடுமை இழைத்தாள். இபாஃபசைக் கொல்ல கியூரேட்டஸ் என்ற அசுரன் அனுப்பப்பட்டான். கியூரேட்டசை ஸீயஸ் கொன்றார். இபாஃபஸ் நைலின் மகள் மெம்ஃபீசை மணந்து லீபை என்ற மகளைப் பெற்றான். இந்த லீபையை பாசிடான் மணந்து அவள் வயிற்‘ல் உதித்த அஜினார் சிரியாவிலும். பீலஸ் எகிப்திலும் அரச வம்சாவளியை உருவாக்கினார். அஜினாரின் பிற்கால வார்சான கேட்மஸ் திபெஸ் சாம்ராஜ்யத்தையும் பீலசின் வாரிசு தானாயஸ் ஆர்கோ சாம்ராஜ்யத்தையும் உருவாக்கினர். பின்னர் இவர்கள் கதையை தனியே கவனிப்போம்.

யூரோப்பா

யூரோப்பா என்ற பேரழகி ஒருவகையில் அயோவின் கொள்ளுப் பேத்தி. சீரிய மன்னன் அஜினாரின் மகளான யூரோப்பா சைடோன் கடற்கரையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். யூரோப்பாவைப் பார்த்து மதிமயங்கிய ஸீயஸ் தன்னை ஒரு காளை மாடாக உருமாற்றிக் கொண்டு பார்க்க வெள்ளை வெளேரென்று ஓங்கோல் காளைபோல் இருந்த அது மெள்ள மெள்ள நடந்து யூரோப்பாவின் காலடியில் படுத்துக்கொண்டது. யூரோப்பாவின் தோழிகள் அலறி அடித்துக்கொண்டு ஒடிவிட்டபோது யூரோப்பா பயப்படாமல் அதன் முதுகில் அமர்ந்து சவாரி செய்தாள். யூரோப்பாவை இவ்வாறு கவர்ந்த காளை கடலுக்குள் சென்று கிரீட் தீவில் ஸீயஸ் சுயரூபத்தைப் பெற்று யூரோப்பாவை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்றார். மறைவிடம் வழங்கிய மரங்களுக்கு இலையுதிராத வரம் வழங்கினார். கிரீட்டில் ஏராளமான நீரூற்றுக்களையும் வழங்கினார். ஸீயஸ் – யூரோப்பா உறவால் மூன்று புத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் முறையே மைனோஸ் சர்பீடான், ராடா மைன்தீஸ் ஆவர். எனினும் இறுதியில் தன் கடமை முடிந்ததும் யூரோப்பாவை கிரீட் மன்னருக்கு மணமுடித்த ஸீயஸ் தனது மூன்று புத்திரர்களையும் கிரீட் மன்னரின் வாரிசுகளாக தத்துக் கொடுத்தார். கிடீட் மன்னன் அஸ்டீரியஸ் இறந்த பின்னர், யூரோப்பா விண்ணில் ஒரு நட்சத்திரமாக ஜொலித்துவருகிறாள்.

ட்ரோஜன்கள்

மகாபாரதத்தில் பாண்டவர்- கௌரவர்கள் சகோதரச்சண்டை உருவானதைப்போல் கிரேக்க நாட்டிலும் ஒரு சகோதரச் சண்டையில் ட்ரோஜன்கள் ஒரு பக்கம் கிரீட்டியர்கள் ஒரு பக்கம் நிகழ்த்திய சண்டை ஆண்டுக்கணக்கில் நீடித்துப் போரில் வென்ற கிரீட்டியர்கள் பாண்டவர்களைப் போலவே மகிழ்ச்சியில்லாத சூழ்நிலையை ஏறத்தாழ ஒரு சாந்திபருவம்போல் ஒடிஸ்ஸேயில் ஹோமர் வடித்துள்ள சித்திரத்தைப் பின்னர் கவனிக்கும் முன்பு ட்ரோஜன்கள் உருவான வரலாறை கவனிப்போம்.

சமோத்ராஸ் தீவில் அட்லஸின் மகள் எலக்ட்ராவுடன் ஸீயஸ் கொண்ட உறவில் டார்டேனஸ் பிறந்தான். பின்னர் சமோத்ராஸ் தீவில் வெள்ளம் வந்தது. வெள்ளத்திலிருந்து தப்பித்துப் பிழைக்க ஒரு படகில் ஏறி ஆசிய எல்லைக்கு வந்தான். ஆசியக் கடற்கரைப்பகுதி மன்னன் டேசர் அவனை வரவேற்று உபசரித்தான். மன்னன் டேசர் நதி தெய்வம் ஸ்கமண்டருக்கும் நீர் தேவதை இடாவுக்கும் பிறந்தவனாவான். நாளடைவில் டார்டேனஸ், டேசரின் மகளைக் கரம்பற்றிப் பிறந்தவர்களே ட்ரோஜன்கள். ட்ராய் கோட்டையை டார்டேனஸ் கட்டினான். வரலாற்றுச் சிறப்புள்ள ட்ராய் கோட்டையை எந்தப் பகைவர்களாலும் வெல்லமுடியாது. டார்டேனசின் நாலாவது வாரிசாகத் தோன்றியவன் லாவ்மென்டான். லாவ் மேடானின் மகன் ப்ரையம், ப்ரையம் மன்னனின் மகனே பாரிஸ், இலியத் காவிய நாயகன், இலியத் கதையைப் பின்ன கவனிப்பதற்கு முன் இதரக் குட்டிக் கதைகளைத் தெரிந்துகொண்டால்தான் இலியத் உறவு புரியும்.

தானே

ஆர்கோசை உருவாக்கிய தானாயசின் கொள்ளுப்பேத்திதானே. தானாயசின் மகள் ஹைபர்நெஸ்ட்ரா. தானாயஸ் தனது மாப்பிள்ளையான லைன்சீயசைக் கொல்லுமாறு மகளுக்கு உத்தரவிட்டார். ராஜகட்டளையை மீறித் தன் கணவனைக் கொல்லாமல் லைன்சீயஸ் மூலம் புரோட்டஸ், அக்ரீஷய்ஸ் என்ற இரட்டையர்களைப் பெற்றெடுத்தாள் நெஸ்ட்ரா. இதனால் ஆர்கோஸ் இடிஸ்டாகப்பிரிந்தது. ஆர்கோசிலிருந்து தனியாகப்பிரிந்த டைரன் பகுதியைப் புரோட்டசும், ஆர்கோசை அக்ரீஷியசும் ஆண்டனர். ஆர்கோஸ் மன்னன் அக்ரீஷியசின் மகளே தானே. அக்ரீஷியஸ் விரும்பியதோ ஆண்வாரிசு. ஆண்வாரிசு விரும்பி டெர்பியில் குறி கேட்டான். குறி சொன்ன சாமியாடியோ, தானேவுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அந்த ஆண்வாரிசுப் பேரன் மூலம் அக்ரீஷியசின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று குறிசொல்லவே, தானே பாதாளச் சிறைக்குள் தள்ளப்பட்டாள். பித்தளைச் சுவர் கட்டப்பட்டது. மனித நுழைவுக்கு இடமில்லாத காவல் ஏற்பாடுகளை எல்லாம் ஸீயஸ் துõளாக்கி, தானேயின் சிறையை ஒரு சொர்க்கமாக மாற்றினார். தானேயுடன் கூடி ஆண்வாரிசை வழங்கினார். தான் பெற்ற மகளான தானேயைக் கொல்ல மனம் இல்லாத அக்ரீஷியஸ் தானேயையும் ஸீயஸ்ஸின் குழந்தையையும் ஒரு மரப்பெட்டிக்குள் வைத்துப் பூட்டி நடுக்கடலில் விட்டெறிந்தான். எனினும் அந்தப் பெட்டி மிகவும் பாதுகாப்பாகக் கரையில் ஒதுங்கியது. அப்படிப் பிறந்த தானேயின் குழந்தையின் பெர்சீயஸ். பெர்சீயஸ் பெரியவனானதும் ஏராளமான வீரச்செயல்களைப் புரிந்ததாக நாடோடி மரபுகள் உண்டு.

லேடா – டையோஸ்சீரி

எயிட்டோலிய மன்னர் தெஸ்ஷியஸ். டியூக்காயின் டோரசின் மகளான யுரைத்த மீசை மணந்து அவள் மூலம் பெற்ற குழந்தையே லேடார் இவள் வளர்ந்த பேரழகியானாள். லேகிடோமன் தீவிலிருந்து விரட்டப்பட்ட மன்னன் டைன் டேரியஸ் எயிட்டோலியாவில் தஞ்சமடைந்தான். டைன் டேரிய சுக்குத் தஞ்சம் வழங்கிய எயிட்டோயிய மன்னர் தன் மகள் லேடாவையும் மணம் செய்து கொடுத்தான். ஆனால் லேடாவுக்கு ஸீயஸ் தெய்வத்தின் மீது காதல். ஸீயஸ் அன்னபட்சியாக வந்து லேடாவுடன் உறவு கொண்டார். ஒரே சமயத்தில் இரண்டு கணவர்கள் தொடர்ந்து கொண்ட உறவால் இரண்டு இரண்டாக இரண்டு ரெட்டையர்கள் பிறந்தனர். ஒரு கருவில் இரட்டையர்களாக போலக்ஸ் மற்றும் கிளைடன்ஸ்ட்ரா. மற்றொரு கருவில் கேஸ்டர் மற்றும் ஹெலன். இந்நால்வரில் போலக்சும் ஹெலனும் தெய்வவாரிசுகள். இளைடன்ஸ்ட்ராவும் கேஸ்டரும் டைன்டேரியஸ் வாரிசுகள். இந்த உண்மை மறைக்கப்பட்டு கேஸ்டரையும் போலக்சையும் தெய்வவாரிசுகளாகப் போற்றும் நாடோடி மரபுகள் உண்டு. இந்த இருவரையும் “டையோஸ்” என்பர். டையோஸ்கூரி என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் “ஸீயஸ்ஸின் புதல்வர்கள்” என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் “ஸயஸ்ஸின் புதல்வர்கள்” என்று பொருள். டோரியன் நகரங்களில் டையேஸ்கூரி வழிபாடுகள் பிரசித்தம். கேஸ்டரும் போலக்சும் குதிரையிலமர்ந்தபடி உலகத்தை வலம் வரும் காவல் தெய்வங்களாகக் கருதப்படுவதண்டு. இத்தேவ புத்திரர்களின் மனிதத் தந்தையான டைன்டேரியசுக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. அந்த சகோதரர்களின் புதல்வர்கள் அஸ்டாஸ், லைன் சீயஸ் ஆவர். இவர்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண்களை கேஸ்டரும் போலக்சும் கடத்திச் சென்றுவிட்டனர். இதனால் நிகர்ந்த சண்டையில் கேஸ்டர் கொல்லப்பட்டான். கேஸ்டரைக் கொன்ற அய்டாசை ஸீயஸ் கொன்றார். போலக்சை ஒலிம்பியாவுக்கு வரவழைத்து சாகாவரம் அருள ஸீயஸ் விரும்பினார். போலஸ் அதை ஏற்கவில்லை. ஏனெனில் கேஸ்டர் இறந்து விட்ட சூழ்நிலையில் எனக்கும் அழிய வேண்டும் என்று போலக்ஸ் துயரினால் கதறினான். அவனை சமாதானம் செய்து கேஸ்டரையும் பின்ஸ் ஒலிம்பியாவுக்கு வரவழைத்து சாகாவரம் வழங்கப்பட்ட பின்னரே போலக்ஸ் மகிழ்ந்தான்.
ஒலிம்பிய தெய்வங்களின் வரிசை

ஹீரா

கிரேக்க தெய்வங்களில் மிகவும் சக்திவாய்ந்த தாய் தெய்வம் ஹீரா. இவர் ஸீயஸ்ஸின் சட்டப்பூர்வ மனைவி. நிறைய அதிகாரம் உள்ளவள். ஸீயஸ்ஸின் தங்கை முறை என்றாலும் கிரேக்க நாடோடி வழக்கிலும், பிராந்தியத் திரவிழாக்களிலும், ஹோமரின் இலியத்திலும் ஸீயஸ் ஹீரா திருமணம் தெய்வத் திருமணமாகப் போற்றப்படுகிறது.

குரோனஸ் உயிருடன் இருந்த போதே இத்திருமணம் நிர்ணயமானது. ஹீரா ஓஷியானஸ் அரண்மனையில் திதைதசின் பொறுப்பில் வளர்நத்போது ஒரு நாள் இசை மழை பொழியும் இன்பக்குயில் களிரில் நடுங்கியபடி ஹீராவிடம் வந்தத. குளிரில் நடுங்கிய குயிலுக்கு வெம்மையூட்டத்தன் மார்போடு அணைத்துக் கொண்டபோது குயிலின் சுயரூபயம் வெளியானது. ஸீயஸ் குயில் வடிவில் வந்து தன் ஆசையைத் தீர்க்க வேண்டியபோது சாட்சி இல்லாமல் எதுவும் இயலாது என்று கூறி, சட்டப்படி தேவசபையில் மணம் புரிந்து கொண்டால் இச்சையைத் தீர்த்து வைப்பதாக ஹீரா வாக்களித்தாள். கிரேக்கத் திருமணங்களில் மணமகள் ஊக்தியில் ஹீராவின் சிலையை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச்சென்று இறுதியில் கல்லறையில் கிடத்துவது மரபு. இதன்பொருள், ஸீயஸ் பல மனைவிகளை நாடிச்சென்றாலும் முடிவில் ஹீராவிடமே சரணடையவேண்டும், என்பதே.

ஸீயஸ்களின் லீலைகளைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத ஹீரா அரண்மனையை விட்டு வெளியேறி உபோயா மன்னர் சைத்தேரியனிடம் தஞ்சம் அடைந்தாள். ஹீராவைப் பின்தொடர்ந்த ஸீயஸ் ஹீராவின் சினத்தைப் போக்க ஒரு உபாயம் செய்தார். சைத்தேரியன் ஒத்துழைப்புடன் ஹீராவின் சிலையை அலங்கரித்து ஒரு காளை வண்டியில் ஏற்றிக்கொண்டு விரைந்து செல்லும்படி உத்தரவிட்டார். ஸீயஸ் அசோப்பின் மகளைக் கடத்திச் செல்வதாக ஒரு வதந்தியைப் பரப்பி ஹீராவை நம்பச் செய்யவே. ஹீராவும் விரைந்து காளை வண்டியைப் பின் தொடர்ந்து உள்ளே யார் என்று பார்த்தபோது அது தன்சிலைதான் என்று அறிந்து நாணமுற்று ஸீயஸ்ஸுடன் சமாதானம் கொண்டு வாரிசுகளைப்பெற்றெடுத்துக் கொடுத்தாள். அவ்வாறு பிறந்தவர்களே ஏரஸ், எய்லத்தியா மற்றும் ஹெபி ஹீரா கற்பின் தெய்வம். ஆகவே ஸீயைஸ்ஸின் ரகசிய உறவுகளை வெறுத்தாள். ரகசிய உறவு மூலம் பிறந்த குழந்தைகளையும் வெறுத்தாள். ஆகவேதான் ஹீராக்ளீஸுக்கு ஏராளமான துன்பங்களையும் சோதனைகளையும்ஹீரா வழங்கினாள். ஹீராவின் செயலைக்கண்டு ஸீயஸ் வெறுப்புற்றாள். ஹீராக்ளீஸ் தனது வெற்றிப்பயணத்தை முடித்துக் கொண்டு வரும் வழியில் ட்ராப் நகரைச் சூறையாடி விட்டு கிரீஸ் திரும்பி வரும்போது ஹீரா அவனைக் கொல்ல ஒரு பெரும்புயலை உருவாக்கி ஹீராக்ஸீசின் படகைக் கவிர்க்கச் செய்தாள். உடனே ஸீயஸ் தலையிட்டு ஹீராக் ஸீசைக் காப்பாற்றி மீட்டதும் ஹீராவின் கால்களுக்கு விலங்கிட்டு ஒலிம்பியாவிலிருந்து வெளியேற்றிவிட்டு ஹீராக்ளீஸ்க்கு ஒலிம்பியாவில் உயர் பதவி வழங்கினள். ஹீராக்ளீஸ் தெய்வமாக்கப்பட்டவுடன் ஹீரா சமாதானக் கொடிகாட்டினாள். தன் அழகு மகளான ஹெவியை ஹீராக்ளீஸுக்கு மணமுடித்துவைத்தாள். ஹீரா விடுதலையாகி ஒலிம்பியப் பதவியைத் தக்க வைத்துக் கொண்டாள்.

டி மீட்டர் – விவசாய தேவதை

டி மீட்டர் ஸீயஸ்ஸின் மனைவியாக எண்ணப்படும் முன்பு அண்ணியாக இருந்தாள். அதாவது பாசிடான் மனைவி, அப்போது பாசிடான் கடலுக்கு அதிபதி ஆகவில்லை. பாசிடான் பார்வையிலிருந்து தப்ப தன்னை பெண் குதிரையாக மாற்றிக் கொண்டு வாழ்ந்தாள். பாசிடான் தன்னை ஆண்குதிரையாக உருமாற்றிக்கொண்டு டிமீட்டரை அணுகிப்புணர்ந்துவிட்டான். விளைவு? குதிரை தெய்வமான ஏரியன். இது பின்னர் அட்ராஸ்டஸ் மலையானது. பின்னர் அதுவே ஹீராக்ளீசின் இடமானது.
குதிரை வடிவமான டிமீட்டரின் சிறப்பு விவசாயம். இந்தியர்களுக்குக் காளை எப்படியோ அவ்வாறே ஐரோப்பியர்களுக்குக் குதிரை உழவு சாதனம். ஆகவே, டி மீட்டர் விவசாயத்தின் அடையாளமாகவும் போற்றப்படுகிறது. கிரீசின் வளமான சிசிலி, எலுõசி ஸிலும் டிமீட்டர் வழிபாடு வேளாண்மை வரிபாடும் ஆகும். நிலம் பண்பட்டு வளம் பெற்று விளைச்சலுக்கு டிமீட்டரின் அருள் என்று நம்பப்படுகிறது.
ட்ரோஜன் தலைவன் டார்டனசின் சகோதரன் அயேஷன் டிமீட்டரின் மற்றொரு புருஷன். இந்த உறவில் புளுட்டஸ் பிறக்கிறான். புளுட்டஸ் என்றால் செல்வம் என்று பொருள். எனினும் விண்ணிலிருந்து டிமீட்டரைக் கண்காணித்த ஸீயஸ் அயஷேனை வஜ்ராயுதத்தால் கொன்றுவிட்டதாக ஒரு மரபு உள்ளது. டிமீட்டர் தொடர்பான பல சுவாரிசியமான விஷயங்களை அடுத்த இதழில் கவனிப்போம்.

(தொடரும்)