- றெக்கை – அத்தியாயம் 1
- றெக்கை – அத்தியாயம் 2
- றெக்கை – அத்தியாயம் மூன்று
- றெக்கை – அத்தியாயம் 4
- றெக்கை– அத்தியாயம் 5
- றெக்கை– அத்தியாயம் 6
- றெக்கை– அத்தியாயம் 7
- றெக்கை– அத்தியாயம் 8
- றெக்கை– அத்தியாயம் 9
- றெக்கை அத்தியாயம் பத்து
- றெக்கை– அத்தியாயம் 11
- நாவல் றெக்கை– அத்தியாயம் 12
- றெக்கை – அத்தியாயம் 13
- றெக்கை – அத்தியாயம் 15
- றெக்கை அத்தியாயம் 16
- றெக்கை அத்தியாயம் 14
- றெக்கை – அத்தியாயம் 17
- றெக்கை – அத்தியாயம் 18
- றெக்கை – அத்தியாயம் 19
- றெக்கை – அத்தியாயம் 20
ஆண்டு 1896.
மாயசண்டிகை நிர்மலாவுக்கு சொன்ன பிஞ்சையருலகு விசேஷங்கள் நேரம் போக்குக் கதை.
நேரத்தில் பின்னால் நகர்ந்து நிர்மலாவுக்கு தெ ஜோ வு -ஏற்படச் செய்த கணங்களை இவை. தரும்.
——————————————————————————————-
காலம் உறைந்த மாதிரி, வட்டம் சுற்றி ஏற்கனவே வந்த கணங்களை மறுபடி கொண்டு வந்து நிறுத்தி மறுபடி நகர்ந்ததாக நிர்மலாவுக்கு தோன்றியது.
உங்கள் சிறகுகள் அற்புதம் கொண்டவை.
நிர்மலா வந்தவளை ஒரு பெண் மற்றொருத்தியை கூர்ந்து கவனிக்கும் தோரணையில் நோட்டமிட்டாள்.
இன்னும் ஏதாவது பேச வேண்டும். சூழ்நிலை அதிக அபத்தமாகப் போயிருக்கிறது.
வந்தவள் மாயசண்டிகை என்றாள்.
அவள் பெயர். மாயசண்டிகையாக இருக்கலாம்.எனில் குறையொன்றுமில்லை.
தூவல் அரண்மனையில் என்றால் இறகு அரண்மனை ராஜகுமாரி, இறகு கொண்டு கட்டி எழுப்பிய அரண்மனையில் இளவரசி. உலகையே வாங்கக் கூடிய செல்வம் கொழிப்பவளாக இருக்கும்.விற்றால் தானே.
பாரீஸ்லே வாங்கியதாக இருக்கலாம்.
ஒரு புன்சிரிப்போடு இறகுப் பெண்ணிடம் கண்ணால் வினாவுகிறாள்.
எங்கேயும் வாங்கவில்லை. பிறந்ததே இதோடு தான். மேனியில் கொங்கை பூரித்து நிற்பது மாதிரி வெண்சிறகை அங்கமாக சதா அணிகிறோம்,
மாயா கவிதை பேசினாள்.காலம் நின்றது. உரிந்தது, முன்பின்னாக சுழன்றது.
உங்கள் சிறகுகள் அற்புதம் கொண்டவை
நிர்மலா குரல் குழைந்தது
மாயா எனப்பட்டவள் இன்னொரு தடவை புன்னகைத்து மறுத்தாள்.
- இது விஞ்சயர்கள் எல்லோருக்கும் இயற்கை அளித்த வனப்பான அசிங்கம். அவலட்சணமான அழகு.
க்ஷ்அவள் முகம் வலியைக் காட்டியது. சற்றே கண் மூடி வயிற்றை பிடித்தபடி தரையில் இருந்து சுவரில் தலை சாய்த்திருக்க, முத்தச்சி அவசரமாகச் சொன்னாள் –
கண் மலர்த்தி வை இறகு எஜமானியே.இப்போது நீ உறங்கக் கூடாது
உறக்கம் தவிர்க்க ஏதாவது பேசு மாயா என்றாள் நிர்மலா.
மாயசண்டிகை நிர்மலாவுக்கு சொன்ன பிஞ்சையருலகு விசேஷங்கள் நேரம் போக்குக் கதை. நிஜ அம்சங்களும் இதில் உண்டு
பிஞ்சையருலகில் பிறந்த ஆணும் பெண்ணும் பிறப்பறுக்கும் பிஞ்சையன் தன் பெய்கழல்கள் போற்றி எண்பது வயது வரை வாழ்வது உண்டு. பெண்களும் ஆண்களும் ஒரே மாதிரி கல்வி ஏற்க வேண்டும். ஆண்கள் ஐந்து வயதிலும் பெண்கள் சற்று தாமதமாக பத்து வயதிலும் வித்யாரம்பம் செய்ய வேண்டும். ஒரே மாதிரி சீருடை அணிந்து கல்வி கற்க போக வேண்டும். பருவமடைந்த பதினைந்து வயசுப் பெண்ணும் பத்து வயதுப் பையணும் வெண்பாவை சீர் பிரித்து அலகிட அருகருகே ஒன்றாக அமர்ந்து முயலும்போது பாலுணர்வு எழ அநேகமாக வாய்ப்பில்லை என்பதால் ஐந்து வயது வித்தியாசம் கடைப்பிடிக்கப் படுகிறது.
என்ன என்ன சொல்லிக் கொடுக்கப் படுகிறது என்று கேட்டால் என்ன இல்லை என்று இன்னொரு கேள்வி கேட்க வேண்டிவரும்.
நாக்கு என்ற அற்புதமான அங்கத்தை எல்லோருக்கும் பயன்படுத்த சக்தமான வழிவகுக்க இந்த-பகுப்பு உதவும். நாவு மூளையோடு நேரடியாக இணைக்கப் பட்டிருப்பதால் இந்த பயன்பாடு அவசியமானது.
மூலையிலே இணைக்கனுமா முலையிலே சேர்க்கணுமா ஆளை விடுடி நிர்மலா. உன் உதடு ரொம்ப அழகா இருக்குதடி. இந்த உதடு மட்டும் தானா? உன் நாக்கு நீட்டினா சிவந்திருக்குமோ? நீட்டுடி தேவிடிச்சி. நீ இல்லே கிழவி . ஐயோ வலிக்குதே
நிர்மலா மன்னிச்சுக்கொள்ளுங்க. தெரியாம திட்டிட்டேன்.உங்க எஜமான் என்றால் கணவன் என்பதற்கு எங்க பிரபஞ்ச சொல், உங்க எஜமான் விளையாட்டிலே சமர்த்தனா இருக்கணும். நிர்மலாவை உடல் பிடித்து விட்டு எப்படி சிற்பமாக்கி வச்சிருக்கான். மன்னிக்கணும். வச்சிருக்கார்.
என்ன சொல்லிட்டிருந்தேன்? நிர்மலா உடல் வாடை. அது இல்லையா. நினைவு வந்துது.
என்ன கல்வி விஞ்சியர் நாட்டு பிரஜைகளுக்கு தரப்படும்?
இயற்கை அழைக்கும் போது – இது உங்க பிரபஞ்சத்தில் ரொம்ப நாள் கழித்து பேச்சு வழக்கில் வரும்.. இயற்கை அழித்து மலம் கழிக்கும் போது முதலில் நரகலும் அடுத்து சிறுநீரும் கழிக்க பயிற்சி தரப்படும். இது என்ன விநோதமாங்கறியா நிர்மலா ?செஞ்சு பாரு தெரியும்.
பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலவி முந்த முன் விளையாட்டு பிந்த உடலாட்டு செய்யக் கற்றுத்தர தகுதி, தேவை கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.
புஷ்பக விமானம் பழுது பார்க்க சொல்லித்தரப்படும்.ஒருவர் மட்டும் பயணம் செய்யும் பூ விமானம், குழுப் பயணத்துக்கான புஷ்பகம் இப்படி இரண்டு வகை விமானங்கள் தயார் நிலையில் வைத்தல், அடுத்த மேல்நிலை விஞ்சயர் பிரபஞ்சத்திலிருந்து விமான எரிபொருள் கைகொள்ளுதல், விஞ்சயர் நாட்டில் விமான பகுதிகள் செய்ய கிடைக்கும் கச்சா பொருட்கள் கொண்டு வான் ஊர்தி வடித்தல் இவையும் இந்த பயிற்சியில் அடங்கும்.
சில ஆண்டு முன் உங்கள் மண்ணில் ஒரு சிறு ஆப்பிரிக்க கிராமத்தில் எழுந்த சிரிப்பு கிராமம் முழுக்க பரவி, அடுத்த சிறுநகரை அடைந்து அங்கே எல்லோரையும் சிரிக்க வைத்து மேலும் பெருநகரை அடைந்து பாதி உலகை சிரிக்க வைத்தது. அதை நிறுத்திப்போட சிரிக்காத மருத்துவர்கள் சிரித்தாரை அடித்து துவைத்து நிறுத்தினார்கள்.எவ்வளவு மகத்தான நகைச்சுவை என்றாலும் சிறிக்கத் தடை அமலில் வந்திருக்கிறது,அதற்கான பயிற்சி இப்போது கட்டாயமாகியுள்ளது. சர்க்கார் பற்றி பகடி நிறைய வந்துகொண்டிருக்கின்றது என்பதால் அதெல்லாம் உலக அளவு பரவலாம்.
உருமாறிகளான ஷேப் ஷிஃப்டர்கள் சிறப்பாக உருமாற பயிற்சிகள் தரப்படும். அவர்களுக்கு பிறவியிலேயே அமைந்த இங்க்லீஷ் பேச எழுத இயலாமை நீக்க இப்பயிற்சி பயன்படும்.
நாவு, வாய், மூளை ஒருங்கிணைந்து செயல்பட உடலியல் திருத்தம் ஏற்படுத்த வழிமுறை காண முயல்கிறார்கள் எங்கள் அறிவியலார்கள்
நல்ல உணவை கொஞ்சம் போல மட்டும் உண்டு வலிமை கொள்ளுதல். உணவு இல்லாதபோது வெட்டுக்கிளி, தேள், வவ்வால் இவற்றை உண்ண சகிப்பும், அவற்றில் சுவையும் கொள்ளுதல், கழிவு உண்டு சூழலை தூய்மைப்படுத்துதல் ஆகிய ஆற்றல்கள் கற்றல் மூலம் ஏற்படும் எமக்கு. வேறு எதுவும் கிட்டாமல் போனால், உலோகம்,நெகிழி போன்றவை உண்ண, அதுவும் கிட்டாவிட்டால் சக மனுஷரை புசித்தலுக்கும் பயிற்சி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நீர் ஆனையை கிள்ளித் தின்று வருடக் கணக்கில் உயிரோடு இருந்தாள் என் சிநேகிதி. பைய தின்னால் பனையும் தின்னாம்.
மாயசண்டிகை பெருமை பாராட்டினாள். எனக்கு ஒரு ஐயம் என்று அவளைப் பார்த்தாள் நிர்மலா.
ஆனையை தின்ன முடியுமா என்றா?
இல்லை, ஆளில்லாத வனாந்திரத்தில் நேரம் நீங்குவதை எப்படி கணக்கிட்டிருப்பார்கள் என்று.
அது கிடக்கட்டும் மாயா. நீ மனித மாமிசம் புசித்திருக்கிறாயா? ஆம் என்றால் எப்போது?
போன வாரம் கூட உண்டிருக்கிறேனே என்று கள்ளச் சிரிப்போடு பார்த்தாள் மாயா.
நிர்மலாவும் முத்தச்சியும் மாய சண்டிகையை விட்டு ஒரு அடி விலகி அமர்ந்தார்கள்.உ
நிர்மலா உன்னை உண்பேன் பயப்படாதே. அது இனி ஒரு நூறாண்டு காலம் கழித்து வரப்போகிற சொல்லாடல்,
மாயா கலகலவென்று சிரித்தது அந்த உணவு பற்றி நினைத்து இருக்க –
நேரம் போக்கு கதை சொல்வேன் என்றாயே, கேட்கலாமா?
முத்தச்சன் ஆர்வத்தோடு கேட்டார்.
சொல்வேன். பாதி சொல்வதற்குள் பனிக்குடம் உடைந்தால்? நிர்மலா மாயா தோளில் தட்டிப் புன்னகைத்தபடி சொன்னாள் –.
நான் எதற்கு இருக்கிறேன்?
பிஞ்சையர் உலகினள் மாயசண்டிகை என்ற மாயா நிர்மலா வகையறா ஆகிய இஸ்பானிய வாசிகளுக்குச் சொன்ன கட்டுக்கதை பண்ணியம்
பால்வீதிக்கு மாற்று பிரபஞ்சத்தில் புகார் நகரில் கோதுமை ரவை வர்த்தகம் செய்யும் பாவலன் என்போன் தன் ஊர் சேர்ந்த பாதவி என்னும் இறக்கை வளமுடைய அழகியோடு இன்பம் துய்த்து இறக்கைக் குழந்தையும் அடைந்தான்,
புகார் நகர இதயமான பூத வட்டத்தில் முன்னூறு அடி உயர வட்ட பூதம் சிலை வடிவாக குந்தியிருந்து யாரும் சொல்லாமலே நீதி பரிபாலனம் செய்து வருகிறது.
வட்ட பூதத்தின் வழக்கமான உணவு மனித மாமிசமாகும். தடியர்களான ஆண்களை, முக்கியமாக வெளியூரிலிருந்து பயணம் வருகிறவர்களை தெருவின் ஓரமாகக் குந்தியிருந்து சிறுநீர் கழித்தாதாக குற்றம் சாட்டி உட்கார்ந்தபடிக்கே (இது பூதத்தின் இருக்கை திறன்) ஓங்கி அறைந்து கொன்று சுடச்சுட பிய்த்து உண்பதான சந்தோஷம் பூதத்திற்கானது. தெருவில் சிறுநீர் கழிப்பதான குற்றம் ஆண்களுக்கு மட்டுமானது.
நகரின் வடக்கு மூலையில் உருமாறி சதுக்கத்தில் வயிற்றில் கருவோடு நடமாடும் பெண்களைத்தேடி டாகினி என்ற பெண்பேய் திரிதரும். டாகினி இப்பெண்களை விட அவர்கள் தாங்கிய கருவை சுவை உணவாகக் கொள்வதையே பெரிதும் விரும்புவாள்.
போன சகாப்தத்தில் இந்த இரு பிசாசுகளும் உலவும் பொது பிரதேசத்தில் குறுக்கே வந்த நாலைந்து பேர் பேயறை வாங்கி உயிரின் மதிப்பு முழுவதும் தெரிவதற்குள் உயிர்விட இரண்டு பைசாசங்களும் மாமிசத்தை சரி பாதியாக சாப்பிட எடுத்துக் கொண்டன.
அந்த சமாதான சகவாழ்வு இந்த சகாப்தத்தில் ஒரு நாள் ரவை வர்த்தகன் பாவலனால் சீர்குலைந்தது.
பாவலன் அதிகமாக மது அருந்தி விட்டு அவனது சமூக பூர்வமான மனைவி பாதவி உறங்கிக்கொண்டிருந்தபோது அசமூகமான பந்தம் புலர்த்த காதலி பண்ணிகை இல்லம் நாடிச் சென்றான். இரண்டு மணி நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு போதை தலைக்கேற, எடுத்துப்போன மது போத்தலை பத்திரமாக திரும்ப எடுத்துக்கொண்டு வழியோடு நடக்க, வடக்கு வாசல் அருகே டாகினியிடம் சிக்கினான்.
டாகினி அவனது கட்டுடலால் ஈர்க்கப்பட்டு அவனோடு காமம் துய்த்துவிட்டுஅதன் பின் அவனை அடித்துச் சாப்பிட்டு விட தீர்மானித்தாள். பூதம் இந்த ஒரு இரையை மட்டும் முழுசாக விட்டுக் கொடுத்திட வேண்டும் என்று கோரினாள் டாகினி.
இரண்டு பேரும் பாவலனை உரிமை கொண்டாட, பாவலன் டாகினியை நெருங்கி அவளோடு காதல் செய்தான். இரண்டு பிசாசங்களும் யுத்தத்தில் ஈடுபடத் தொடங்க, மாயசண்டிகை உயிர் போனதுபோல் கூச்சலிட்டாள்.
பனிக்குடம் உடஞ்சாச்சு. இனி பிரசவம் தான். முத்தச்சி சொல்ல,முத்தச்சனை வெளியே தெருவுக்குப் போகச்சொல்லிக் கதவைச் சாத்தினாள் நிர்மலா.
குழந்தை பிறந்தாச்சு.
முத்தச்சி கள்ளுண்ட மகிழ்ச்சியில் ஆடினாள். நிர்மலாவும் தான்.
