Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பாசிரியர் இதழ்

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பிதழ் வெளியாகி இருக்கிறது.

சொல்வனம் இதழின் இந்த இதழில் நம் எம் கோபாலகிருஷ்ணன் சிறப்பாசிரியராகப் பங்கு பெற்று புதிய தலைமுறைக்கும் செவ்வியல் எழுத்துக்கும் பாலமாக வித்திட்டு இருக்கிறார்.

நேர்காணல்களை இங்கு பார்க்கலாம்:

பகுதி இரண்டு

பகுதி மூன்று


அடுத்த இதழும் மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்பதாக சில விஷயங்களுடன் தொடர்கிறது.

அடுத்த இதழுக்கான அவரின் படைப்புகள் குறித்த பார்வைகளை solvanam.editor@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.

இதழை இங்கு வாசிக்கலாம்: https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-342/ : இதழ்-342 – சொல்வனம் | இதழ் 342 | 11 மே 2025

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பாசிரியராகப் பங்குபெற்ற ஆக்கங்கள்:

இந்த இதழில் வெளியாகிய எழுத்தாளரைக் குறித்தப் பதிவுகள்:

  1. சாரதி: முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் அடையாள சக்தி
  2. ஜெகதீஷ் குமார்: தாய்மையின் தவிப்பும், தனிமையின் துயரமும்
  3. வெங்கட பிரசாத்: கலைகளை சார்ந்து இருத்தல்
  4. பிரசாத் வெங்கட்: ஒதுங்குதல்

புகைப்படங்களின் அணிவகுப்பு:

நன்றி அனைத்திற்கும்!

சூத்ரதாரி பல்துறை இலக்கியவாதி. அவரைப் போன்றோரை இப்பொழுது உருவாக்குவதில்லை.

எழுத்துகளை உருகி மருகி வாசித்தவர். வித்தியாசமான கவிதைகளைப் புனைந்தவர். கட்டுரைகளில் இருக்கும் தீவிரம் ஆறு முறையாவது படிக்க வைக்கும். கதைகள் என்பது அடுக்குகளும் படிமங்களும் உள்ளுறை தருணங்களும் கொண்டு விஸ்வரூபம் எடுக்கும். நாவலில் மூழ்கினால் மீண்டெழ மீண்டும் அவரின் இன்னொரு நாவல் தேவைப்படும்.

அண்ணாந்து பார்க்க வைத்தாலும் தோளில் கைபோட்டு பழகுபவர். நட்பாக உரையாடுவதால் பேச்சில் சமரசமோ சரிநிலைகளோ எடுக்காமல், உள்ளதை வெளிப்படையாக நேர்ப்பேச்சில் மிடுக்குடனும் ஆதாரங்களுடனும் விளக்குபவர்.

இவர் சொல்வனத்தின் இந்த இதழுக்கு விருந்தினர் ஆசிரியராக ஒப்புக் கொண்டது தமிழன்னைக்கு மதர்ஸ் டே

உங்களுக்கும் இது வித்தாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் சொல்வனத்தின் இதழ்களில் பங்களிக்க வேண்டும். நீங்கள் புலியாக விளங்கும் துறையில் உக்கிரமாக அதைப் பற்றி உரையாடவும் எழுதவும் வேண்டும்.

Exit mobile version