Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

புத்தக அறிவிப்பு – மாயக் குரல்

This entry is part 56 of 72 in the series நூறு நூல்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

என்னுடைய சிறு கதைகள் தொகுப்பு “மாயக்குரல்”  என்ற பெயரில் வெளிவந்திருப்பதை  உங்களுக்குத் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தொகுதியில் பெரும்பாலான கதைகள் சொல்வனத்தில் வெளியிடப் பட்டவை. 

இந்தத் தொகுதிக்கு எழுத்தாளர் இரா முருகன் முன்னுரை கொடுத்து, சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டு,  தவிர தன்னுடைய இணைய தளத்திலும் எழுதி உள்ளார்.

அவர் சில கதைகளை முன்பேயே சொல்வனத்தில் படித்திருப்பது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

தவிர, நான் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதமும் அவருடைய இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. 

நான் 2014இல் சொல்வனத்தில் எழுதிய “பருவமழை” என்ற கதையை அவர் விமரிசித்து, பரவலாக கவனம் பெற்றது.

மின் இதழ்கள் மூலம், குறிப்பாக சொல்வனத்தில் எழுதியே நான் எழுத்தாளனாக வளர்ந்திருக்கிறேன். அந்த வாய்ப்புக்கு நன்றிகள் பல.

அன்புடன்,

தருணாதித்தன்

நூறு நூல்கள்

அயல் சுவை கே.ஜே  அசோக்குமாரின் ‘ரமணி குளம்’
Exit mobile version