- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1
- சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
- பழிவாங்கும் தீ – அம்பை
- காதலில் துறவி
- மணலில் கட்டப்பட்ட பாலம்
- கொக்கென நினைத்தாயோ ?
- கொலையாளியை ஜீரணித்தவர்
- பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை
- ஏகலைவன்
- தவறாக விதிக்கப்பட்ட சாபம்
- பகைவனுக்கும் அருள்வாய்!
- கீசக வதம்
- வீரனாக மாறிய பேடி
- அஸ்வத்தாமனின் கோபம்
- முடிசூட்டப்படாத ஆட்சியாளர்
- தொடர்ந்த தூதுப்படலம்
- தொடரும் விதுர நீதி
மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா
தமிழாக்கம் : கார்த்திக்
பாண்டவர்கள் மத்ஸய தேசத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபொழுது அந்த நாட்டின் தளபதியான கீசகன் மாறுவேடத்தில் இருந்த பீமனால் கொல்லப்பட்டான். இது கௌரவர்களுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. ஏனென்றால், கீசகனை கொல்வதற்கு பீமனை போன்ற வேறு பலசாலிகள் யாருமில்லை. விராதன், எப்பொழுதும் கௌரவர்களுக்கு எதிராக செயல்பட்டுவந்தான். இந்த நேரத்தில் கீசகனும் கொல்லப்பட்டதால், அத்தேசத்தை தாக்க இதுவே கௌரவர்கள் முடிவு செய்தனர்.
எனவே, அவர்களின் துணைவனான சுசர்மனை மத்சய தேசத்தின் தெற்கு எல்லையை தாக்க சொன்னார்கள். படைகள் அனைத்தும் அவனை எதிர்க்க தெற்கு எல்லைக்கு செல்லும் நேரத்தில் வடக்கு எல்லையை கௌரவர்கள் தாக்கலாம் என திட்டம் வகுத்தனர். பாண்டவர்கள் அங்கில்லை என்றாலும் மத்ஸய தேசத்தின் கால்நடைகளையாவது கவர்ந்து வரலாம் என்பது அவர்களின் எண்ணம்.
சுசர்மனின் படை தாக்க வருகிறது என்னும் செய்தி வந்தவுடன் விராதன் என்ன செய்வது என புரியாமல் தவித்தான். அந்த நேரத்தில், அவன் அவையில் மாறுவேடத்தில் இருந்த யுதிஷ்டிரன் அவனிடம் “அரசே! நான் ஞானியாக இருந்தாலும் போர்க்கலையில் தேர்ச்சி பெற்றவன். மேலும் , சமையல்காரனான பல்லவனும், குதிரைகளை பராமரிக்கும் தந்த்ரிபாலா மற்றும் கால்நடைகளை பராமரிக்கும் தர்மகிரந்தியும் போரில் வல்லவர்களே. நாம் அனைவரும் இணைந்து எதிரிப்படைகளை முறியடிப்போம்!” என தைரியம் கூறினான்.
உடனடியாக படைகள் அணிவகுக்கப்பட்டு விராதனுடன் மாறுவேடத்தில் இருந்த நான்கு பாண்டவர்களும் செல்ல, தெற்கு எல்லையில் நடந்த யுத்தத்தில் சுசர்மனின் படை துவம்சிக்கப்பட்டது.
அதே சமயத்தில், வடக்கு எல்லையில் கௌரவர்கள் தாக்கத் துவங்கினர். இளவரசனான உத்திரகுமாரனின் மேல் அதிகபட்ச எதிர்பார்ப்பு இருந்தது. அவனும் அந்தப்புர பெண்களின் முன்னே தம்பட்டம் அடித்துக் கொண்டு போருக்கு கிளம்பினான். அவனை வழிநடத்த சரியான ஆள் தேவை என உணர்ந்த திரௌபதி அவனது சகோதரியான உத்திரகுமாரியிடம் “இளவரசி! நாட்டிய பெண்மணியான பிருகன்னளை சிறந்த தேரோட்டி எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இளவரசனுக்கு அவள் உதவியாக இருப்பாள். அவளை அழைத்து செல்ல சொல்லுங்கள்” எனக் கேட்டுக் கொண்டாள்.
துவக்கத்தில் பெருமை பேசிக்கொண்டு வந்த உத்திரகுமாரன் நேரம் செல்ல பயம் கொள்ள துவங்கினான். ஒருகட்டத்தில் தேரில் இருந்து குதித்து துவங்கினான். அவனைத் துரத்தி சென்ற பிருகன்னளை அவனை தூக்கி தேரில் போட்டுக் கொண்டு அங்கிருந்த வன்னி மரத்தை நோக்கி தேரை செலுத்தினான். அங்கே, கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு துணிமூட்டையை கீழே இறக்கினான். அதுவரை, அந்த பகுதி மக்கள் அதை பிணம் நினைத்து வந்தனர். ஆனால், தலைமறைவு வாழ்வின் துவக்கத்தில் பாண்டவர்கள் கட்டிவைத்திருந்த ஆயுதங்கள் அவை. அதன்பின் , தாங்கள் யார் என்று விளக்கிய பிருகன்னளையாக இருந்த அர்ஜுனன், காண்டீபத்தை அவன் கையில் கொடுத்து அவனுக்கு வீரமூட்டி போர்க்களம் நோக்கி தேரை செலுத்தினான்.
போரில் அர்ஜுனன் திறமையாக தேரோட்டிக் கொண்டே உத்திரகுமாரனை வழிநடத்த, இளவரசன் கௌரவர்களை விரட்டி அடித்து அரண்மனை திரும்பினான்.
