Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

நம்பிக்கையா அல்லது ஆறுதலா? – சஸ்கியா ஹாமில்டன் 

“அனைத்து ஆன்மாக்கள்” – Source: https://www.commonwealmagazine.org/hope-or-consolation by Will Brewbaker 

அமெரிக்க கவிஞர் ராபர்ட் லோவலின் கடைசி புத்தகமான  “நாளுக்கு நாள்” என்ற தொகுப்பில் உள்ள கடைசி கவிதையில் சொந்த அனுபவத்தை சார்ந்து இருக்கும் தனது படைப்பினை குறித்து கேள்வி எழுப்புகிறார். சுயசரிதையே கவிதையின் சரியான தளம் ஆக இருக்க முடியும் என்று எண்ணுகிறார். “நிறைவுரை” என்ற பொருத்தமாக தலைப்பிடப்பட்ட அவருடைய அந்த இறுதி கவிதையில் “அனைத்தும் தவறே” என்றும், “அப்படியே இருந்தாலும், அதை ஏன் சொல்ல தயங்க வேண்டும்” என்றும் வினவுகிறார். “அழிந்து போகக்கூடிய இந்த மனிதர்கள் வெறும்  கடந்து செல்கின்ற உண்மைகள் அன்றி வேறல்ல” என்பதால் “துல்லியத்தின் அருளுக்காக இறைஞ்சுங்கள்” என்கிறார். வெகு சிலகாலம் மட்டுமே இருக்க போகிறோம் என்ற மெய்யறிவு நம்மை எந்நாளும் எச்சரித்தக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அதனால் எழுத்தில், புகைப்படங்களில், வாழ்வில் துல்லியத்தன்மை என்றும் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார். 

லோவல் கடிதங்களின் பதிப்பாசிரியராக இருந்த, மறைந்த அமெரிக்க கவிஞர் சஸ்கியா ஹாமில்டனின் இறுதி தொகுப்பான “அனைத்து ஆன்மாக்கள்” நூலில் துல்லியம், விவரித்தல், நிரந்திரமின்மை என்றே அதே பாடுபொருளை (அல்லது) கவலைகளை கையாண்டிருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஹாமில்டன் தன்னுடைய கடைசி கவிதையில், லோவலின் “நிறைவுரை”  கவிதையை மேற்கோள் காட்டியிருக்கிறார். லோவெலின் கடைசி கவிதை தொகுப்பை போலவே, ஹாமில்டன் இறந்த பின்பே அவருடைய கவிதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

லோவெல்லின் இறுதி புத்தகம் போலில்லாமல், “அனைத்து ஆன்மாக்கள்” – மரணத்தின் நிதர்சனத்தை குறித்த தெளிவான உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது. பல இடங்களில், ஹாமில்டன் தன்னுடைய புற்றுநோயின் கடினமான காலகட்டத்தை சுட்டிக்காட்டுகிறார்.  அவருடைய மருத்துவத்தின் தினசரி முறைமைகளான – மாத்திரை, மருத்துவர் வருகை – போலவே அவருடைய இறுதி தொகுப்பில் உள்ள கவிதைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் சில நேரங்களில் முரண்பாடகவும் அமைந்திருக்கிறது. தொகுப்பில் உள்ள நான்கு நீள் கவிதைகளில், மூன்று கவிதைகள் ஒரு பெரிய உரைநடையின் தனித்த பகுதிகளாகவும், “அனைத்து ஆன்மாக்கள்” என்ற தலைப்பில் உள்ள நான்காவது கவிதை, கவி நடைக்கு திரும்பினாலும் பிற கவிதைகளில் உள்ள உரைநடை அமசத்தை கொண்டே இருக்கிறது.  

புத்தகம் முழுவதும் வாழ்வின் இறுதியை எந்த விதத்தில் எதிர்கொள்வது என்பதை குறித்தே சிந்திக்கிறார்.  “நிலை”  (Faring ) கவிதையின் முதல் பகுதியில் “ஒவ்வொரு கதையும் இனிமையாகவே இருக்க முடியும் என்று எவர் சொன்னது” என்கிறார். அடுத்த பகுதியில், வீட்டின் வெப்பம் ஆற்றும் கருவியில் இருந்து வரும் சப்தத்தை “இம் மூச்சொலி இயங்குதலா அல்லது அடங்குதலா, ஆறுதலா அல்லது உற்சாகமா” என்று வினவுகிறார். இக்கேள்வி அவரின் கவிதைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றே. இதே போல், புத்தகத்தின் இறுதியில் “கவிதையின் நோக்கம்  நம்பிக்கை கொடுக்கவா அல்லது ஆறுதல் அளிக்கவா?” என்வும் கேள்வி எழுப்புகிறார்.

பெரும்பாலான கவிதைகள் எளிய நம்பிக்கைக்கும் பொய்யான ஆறுதலுக்கு இடையில் நேர்மையான, உறுதியான ஒன்றை தேடியே பயணிக்கிறது. 

“வெளியேறுதலும் நுழைதலும்” (Exits and Entrances to the Auditorium) என்ற புத்தகத்தில், 

“எல்லா பொருட்கள் மீதும் எதையிட்டு திரைடுகின்றன எழுத்துக்களும் விளக்கங்களும்
கதையாக, காட்சியாக, கட்டமைப்பாக, நம்பிக்கையாக..
துயரத்தின் ஆழத்தில் மேல் எழுப்பப்படும் அமைதிகள்
என்னை எந்த பயிற்சி இங்கே தயார் செய்யக்கூடும்.“

கேள்வியாக தோற்றமளிக்கும் இறுதி வரியை, முற்றுப்புள்ளி இட்டு அதை பதில் இல்லாத ஒரு வாக்கியமாக மாற்றி இருக்கிறார். ஹாட்ரியன் போல, ஹாமில்டன், மரணத்தை புனைவில் இருந்து தொன்மமாக, தெய்வீகமாக கூட மாற்றி இருக்க முடியும் ஆனால் அந்த இறுதி வரியின் முற்றுப்புள்ளி அதற்கான சாத்தியத்தையும் நிராகரிக்கிறது.  

( ரோம் நாட்டின் பேரரசர் ஹாட்ரியன் தன்னுடைய அணுக்க தோழனான 20 வயதே நிரம்பிய கிரேக்க இளைஞன் அண்டோனியஸ் மரணத்தின் நினைவாக எழுப்பிய நகரத்தில்,  அண்டோனியஸ் மரணத்தின், மறுபிறப்பின் தெய்வமான ஓஸிரிஸின்  மறுஉருவாக வழிபடப்பட்டிருக்கிறார்

இந்த இறுதி வரி பிரான்ஸ் ரைட் அவர்களின் “பூமியில்” கவிதையை நினைவுறுத்துகிறது. அக்கவிதையில்,

இறக்கும் வேளை எப்படி இருக்கக்கூடும் 

இந்த பூமியில்  

யார் அதை எனக்கு கற்பிக்கக்கூடும்

ரைட்டை போல், ஹாமில்டன்,  மரணத்தின் சந்திப்பை தவிர்க்க முயல்வதில்லை மாறாக, சிந்தனைகளுக்கு அப்பாற்ப்பட்ட மரணத்தை சிந்திக்க வைக்கும் ஒரு கட்டமைப்பை தேடுகிறார். 

“வெளியேறுதலும் நுழைதலும்” கவிதையில் “சிந்தனையின் ஒரு முகமாக, உருவமாக எந்த ஒரு வடிவமும்  இருக்கலாம்” என்று குறிப்பிடுகிறார். அதே கவிதையில் பைபிளின் வெளிப்படுதல் 8:1 வாசகத்தை – “ஏழாவது  கதவு திறக்கையில் எங்கும் அமைதி நிலவியது” –  குறிப்பிட்டு “அதி பயங்கர நிகழ்வுக்கு நடுவே நிகழ்கிற அந்த துல்லிய அமைதி எவ்வளவு இதமாக இருந்திருக்கும்” என்கிறார்.  

 மரணத்தை குறித்த நேர்மையான தேடல் உணர்வே இந்த கவிதை தொகுப்பை மேன்படுத்துகிறது. ஹாமில்டனின் கவிதைகள், தவிர்க்க முடியாத மரணத்திற்கு எதிராக, எளிய ஆறுதலையோ அல்லது விரக்தியையோ வெளிப்படுத்தாமல் தன்னியல்பான பேரமைதி தொனியை கைக்கொள்கிறது.  ஒவ்வொரு நாளின் ஒரு வித அமைதியற்ற, நிரந்தரமின்மை  அரிதாகவே அவருடைய கவிதையில் காணப்படுகிறது.   அவர் ஒரு கவிதையில் சொல்வது போல் –  “நம்மிடையே எண்ணற்ற நோயுற்றவர்கள் இருந்தாலும், அவர்கள் நேர்த்தியாக இருக்கவே  முயல்கிறார்கள்” – அவரின்  கவிதைகளும்  அத்தகைய முயற்சி ஒன்றை துளியளவு இழப்போ பயமோ இன்றி நிகழ்த்துகிறது. 

ஹாமில்டனின் கவிதைகள், நிலையாமை  மற்றும் அழியாமை என்ற முரணான இரண்டு தன்மைகளை  இணைக்க முயல்கிறது. T.S .எலியடின் கவிதை வரிகளை- “ காலமின்மையை காலத்தோடு வைத்து புரிந்துகொள்வது, துறவியின் பணி“ – போல், ஹாமில்டனும்  “இங்கே இரண்டு வகையான நேரங்கள் சந்திக்கிறது/ சங்கமிக்கிறது – மாறிக்கொண்டே இருக்கும் கணமும் – முடிவில்லா கணமும்” என்கிறார்.   எலியட்டின் கவிதைகளை போல் ஹாமில்டனின் “அனைத்து  ஆன்மாக்கள்” என்ற தொகுப்பின் கவிதைகள் – கிறிஸ்துவ தரிசனமான நித்தியதை முழுதும் ஏற்கவில்லை என்றாலும் முழுமையாக நிராகரிக்கவும் இல்லை. குறிப்பாக இறந்தவர்களின் கூட்டம் என்ற சொற்றொடர் மீண்டும் மீண்டும் வருவதை காணலாம். இந்த உலகத்தில் இதற்கு முன் இறந்த புண்ணியாத்மாக்களை நினைவுக்கூர, அவர்கள் நம்முடனே இருப்பது போன்ற என்ற எண்ணத்தை உண்டாக்குவது போல்,   இந்த புத்தகமும் அப்படியான ஒன்றை உருவாக்கவே செய்கிறது. தொகுப்பு முழுதும், “இறந்தவர்களை அழைப்பது” என்ற சிந்தனை ஒவ்வொரு பக்கத்திலும் வருகிறது. கூல்ட்ரிஜ்  முதல் பிஷப் வரை , சிட்னி முதல் கண்ட் வரை, தொகுப்பு முழுதும் இந்த சாட்சி மேகங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இப்பெயர்கள் ஹாமில்டனின் படிப்பறிவை பறைசாற்றவதற்காக இல்லை மாறாக மரணத்தின் அந்த பக்கம் இருப்பவர்களை தன் இறப்பிற்கு துணையாக வர, இறுதி பயணத்திற்கு மிகுந்த பலத்தை ஊட்ட,    ஆணையிடுவது போல் உளது.   

“அனைத்து ஆன்மாக்கள்” தொகுப்பின் ஒரு பகுதியில், ஃபீலிக்ஸ் நுஸ்பாமின் கூட்டத்தின் ஓவியங்களை குறித்து 

“அந்த வரிசை எங்கே செல்கிறது, 
அவர்கள் எதை காண முயல்கிறார்கள்    
அவர்களின் முதுகை மட்டும் நாம் காணமுடிகிறது
அவர்களோடு நாம் இணைவோமா?”

என்று வினவும் ஹாமில்டன், இரண்டு பக்கங்கள் தள்ளி, இதே கருத்தை மையமாய் வைத்து முழுக்கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார் 

புத்தாண்டின் தூறல், ஒன்பது மணி, நகரத்தின் ஒவ்வொரு தேவாலயமும்
தனிமையில், வெறிச்சோடிய சாலைகள்,
நாங்கள் நடைமேடையில் இருந்து
ஹாவ்க்ஸ்மூரின் முகப்பினை பார்த்தோம்
தேவாலய தோட்டத்தில் மீளாத் துயிலில் இருந்தவர்கள்
சுரங்க ரயில் பாதைக்கு வழிவிட்டு இடம்பெயர்ந்தனர்
மாறிவரும் காலத்தின் ஒலி கேட்கும் வேளை
மறைந்தவர்களை நினைவுக் கொள்ளுதல் உதவுமா?
உள்ளே, நீண்டும் குறுகியும் செல்லும் வழியில் ,
அடுத்தவர்க்கான பிராத்தனைகள்
மஞ்சள் ஒளி மெழுகுவர்த்தியோடு உடனிருக்க
ஜான் நியூட்டன் மற்றும் அறியாத
இன்ன பிற முன்னாள் மதகுருமார்களின் பெயர் பலகைகள்

தொகுப்பில் உள்ள மற்ற வரிகளை போலவே, இந்த வரிகளின் அடங்கிய தொனி நம்மை அசைத்துப் பார்க்கிறது. மரணம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடும் என்கிற நிதர்சனத்தை – “இன்ன பிற” என்ற வரி வெளிப்படுத்துகிறது.  “நாம் வெறும் ஒரு தற்காலிக நிகழ்வே” என்கிறார் லோவல். காலத்தின் கட்டற்ற பயணத்தில்  இறந்தவர்களை நினைவுக்கொள்வதில் பயனிருக்கிறதா என்று ஹாமில்டன் வினவினாலும், அந்த ஆலயத்தின் நினைவுப் பெயர் பலகை போல, பிராத்தனைகளில், கவிதையில் இறந்தவர்கள் வாழ்வே செய்கிறார்கள்.      

Exit mobile version