Site icon சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

உயிரின் தேடல்

நான்
இப்பூமியில்
தொலைத்த பொருட்களோ
ஏராளம் உண்டு.
ஒரு சில பொருட்களை
மீண்டும் கண்டடைந்தேன்.
சில பொருட்கள்
காலத்தின் மண்ணில்
சிதைந்து போனதையும்
அறிந்துகொண்டேன்.
இன்னும் சில பொருட்கள்
யாரோ ஒருவரின்
மனதின் ஓரத்தில்
என் ஞாபகமாய்
இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதையும்
அறிந்துகொண்டேன்.
இப்போது
இங்கு நான்
என் உயிரையே
தொலைத்து நிற்கிறேன்.
அது எங்கு?
எப்படி?
யாரிடம் உள்ளது?
என்று கூடத் தெரியாமல்…
வெறும் உடலாய் மட்டும்.

Exit mobile version