Site icon சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

‘ககனப் பெரு வீதியில்’

பிரபஞ்சத்தில் நமக்கு அண்டை வீடு சந்திரன். அது பூமியுடன் நிரந்தரத் தொடர்பு கொண்டுள்ளது. இரண்டையும் தொடர்புபடுத்து இன்ற இந்தப் புவிஈர்ப்பு சக்திதான் சந்திரனை மாதந் தோறும் பூமியை கிரஹங்களிலே இது மிகவும் சிறியது என்றாலும், பூமியின் உப கிரஹம் ஒரு தடவை சுற்றிவரச் செய்கிறது. சூர்ய மண்டலத்தைச் சார்ந்த என்றளவில், உபகிரஹங்களிலே மிகப் பெரியது. பூமியின் பாதி அளவாகிய செவ்வாய் கிரஹத்தின் உபகிரஹங்கள், சந்திரனில் பாதி அளவுக்கும் மிகச் சிறியன. சந்திரனின் சுற்றளவு 2000 மைல்களுக்குச் சற்று கூடுதலாகும்.

சந்திரனை ‘டெலஸ்கோப்’ மூலம் காண முயற்சி செய்தவர்களில் பல கடல்கள் முதன்மையானவர் கலீலியோ. அவர் அங்கு இருப்பதாகக் கருதி அவற்றிற்கு, சாந்தக் கடல், புயற் கடல்,மழைக் கடல் என்றெல்லாம் பெயரிட்டார். ஆனால் சந்திரனில் புயல் ஏற்பட முடியாது என்று இப்பொழுது நினைக்கிறார்கள். இருப்பினும், இந்தப் பெயர்களை சௌகர்யத்துக்காக இன்னும் வழங்குகிறார்கள். சந்திரனின் மேற்பரப்பு வெறும் பாறை மயமானது. கீழ்ப்பகுதி முழுவதும் மணற் பரப்பு, ஆனால் பூமியிலுள்ளது போல், மணல் பறப்பதில்லை; ஏனெனில் சந்திரனில் வாயு மண்டலம் கிடையாது.

சந்திரனில் இரவையும், பகலையும் தவிர வேறு ஒன்றும் நிகழ்வ தில்லை. காற்று இல்லாத இடத்தில் மேகங்கள் இருக்க முடியாது. ஒலி உண்டாவதற்கும் வழியில்லை.

சந்திரனில் ‘நாள்’ அதாவது ஒரு சூர்யோதயத்திலிருந்து இன் னொன்றுக்கு ஒரு மாதமாகும். இரண்டு வாரங்கள் ‘பகல்’. இரண்டு வாரங்கள் ‘இரவு.’ ‘பகலில்’ சீதோஷ்ண நிலை 20° F. இரவில்’ சீதோஷ்ண நிலை 50 F. அதாவது பதினைந்து நாட்கள் (பூமியின் கணக்குப்படி) கடுமையான வெய்யில்; பதினைந்து ‘நாட்கள்’ பயங்கரமான குளிர். 

  சந்திரனில் பள்ளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. பள்ளங்களில் நடுவே காணப்படும் ‘கடல்களும்’, சமவெளிகளும் குளிர்ந்து, உருக்கி வார்த்து செய்யப்பட்ட பரப்பாகக் காணப்படுகிறது.

சந்திரனில் உயிரினங்கள் இருக்க முடியாது. காற்று, நீர் இரண்டுமில்லை. சீதோஷ்ண நிலையில் இவ்வளவு முரண்பாடு இருக்கும் போது, தாவர வர்க்கங்களும் அங்கு ஏற்பட முடியாது கல்லார்ந்த, மணல் சூழ்ந்த உறைந்துபோன பாலைவனமாகத்தான் சந்திரன் இருக்க முடியுமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சந்திரன் பூமியில் இருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும் என்பது சிலர் அபிப்பிராயம். சந்திரன் தனித்தே உண்டானதென்றும், சரித்திர காலத்துக்கு முன்னால் பூமியால் ஈர்க்கப்பட்டிருக்கலாமென்ற கருத்தும் நிலவுகிறது. சந்திரன், பூமியைப்போல் கனமில்லாத காரணத்தினால்தான் உயிர் வர்க்கம் அங்கு தோன்றவில்லை.

விண்ணைச் சாட முற்பட்ட மனிதனுக்கு, பிரபஞ்சத்தில் அண்டை வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை இருப்பதில் தவறில்லை. ரஷ்யாவும், அமெரிக்காவும், இத்துறையில் போட்டியிட்டுக் கொண்டு ‘யார் முன்னால்?’ என்ற கேள்விக்கு விடை காண முயலுகின்றன. என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஜூல்ஸ் வெர்ன், ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சொன்னார். “இத்தாலியர்கள் இசை வல்லுநர் களாக இருப்பது போல, ஜெர்மானியர்கள், தத்துவ அறிஞர்களாக இருப்பது போல, அமெரிக்கர்கள் பெரிய விஞ்ஞானிகள், பொறியியற் கலை விற்பன்னர்கள்” என்று அவர் கூறியதற்கேற்ப, அமெரிக்கர்கள் அனைவரையும் முந்திக்கொண்டு, சந்திரனில் மனிதனை இறக்கி விடுவார்கள் என்று தோன்றுகிறது.

அப்போலோ 8, ஒரு மகத்தான சாதனையைச் செய்திருக்கிறது. நீரிலிருந்து நிலத்துக்கு வந்த உயிரினம் மனிதனாகப் பரிணாம நிலையை அடைந்துள்ளது என்ற காரணத்தால் இந்த நிலப் பெயர்ச்சியைப் பரிணாமச் சரித்திரத்தில் ஒரு மைல்கல் என்று கூறுவார்கள். மண்ணி லிருந்து விண்ணைச்சாடும் இந்தச் செய்தியும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பௌதீக ரீதியாக பரிணாமத்தின் கொடுமுடியான மனிதன், சிந்தனைப் பூர்வமான பரிணாமத்தின் முதல் படியில் காலை வைத்திருக்கிறான் என்று சொல்லலாம்.

சந்திரனில் முதல் மனிதனை இறக்குவது என்பது இப்பொழுது பிரச்னை அல்ல, அகண்ட வெளியில் ஆங்காங்கு ‘ஸ்பேஸ் நிலையங்கள்’ நிறுவி, இன்னும் பல வெற்றிகளைக் காண வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளுடைய லட்சியம். சந்திரனுக்கு அப்பால் செவ்வாய் சுற்றிவர இரண்டு ‘மாரினர்கள்’ அனுப்ப திட்டம்  வகுத்திருக்கிறார்கள். செவ்வாயில் ஒரு வகையான தாவர உயிர் வர்க்கம் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். செவ்வாயின் சுற்றளவும் பூமியில் பாதி. அதன் புவியிர்ப்பு சக்தி பூமியைக் காட்டிலும் மிகவும் குறைவு. பூமியில் ஆறடி உயரம் தாண்ட முடிந்தவன், செவ்வாயில் 16 அடி தாண்டலாம். பூமியில் 220 பவுண்டு எடை உள்ளவன், செவ்வாயில் 80 பவுண்டுதான் இருப்பான். செவ்வாயில் சராசரி சீதோஷ்ண நிலை எப்பொழுதும் பூஜ்யத்துக்குக் கீழேதான் இருக்கும்.

நம்முடைய ‘ஸோலார் – ஸிஸ்ட்’டத்தைப் போல, கோடிக்கணக்கான ஸோலார் ஸிஸ்டங்கள் அண்டப் பெருவீதியில் உள்ளன. நம் சூரியனைப் போல பல்லாயிரக்கணக்கான மடங்கு பெரிய ‘சூரியர்கள்’ (நட்சத்திரங்கள்) இருக்கின்றன. நமக்கு மிக அருசில் இருக்கும் நட்சத்திரத்துக்கு ‘ஸிரியஸ்’ (Sirius) என்று பெயர். இதன் தூரம் 51,000,000,000,000 மைல்கள்! அப்போலோ 8 சென்ற வேகத்தில் ‘ஸிரியஸ்’ நம்மை நோக்கி வந்தால், அது பூமியை வந்தடைய 2½ லட்ச வருஷங்கள் பிடிக்கும்.

‘மில்கி -வே’ என்று கூறப்படும் பிரபஞ்ச வீதியில் 10,00000,00 நட்சத்திரங்கள் உள்ளன. ஃப்ரெட் ஹாயிலின் கருத்துப்படி இந்த நட்சத்திரங்களின் உப-கிரகங்களில் ‘நாலு பரிமாண’ உயிர்கள் இருக்கக்கூடும். தாவ் செடி (Tau Ceti) என்ற நட்சத்திரத்திலிருந்து ‘ரேடியோ ஸிக்னல்’ வருவதாகச் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இங்கு உயிரினங்கள் இருந்தால் எப்படி இருக்கும்?

பூமியில் உயிர்வாழ, கார்பன், ஹைட்ரஜன் இரண்டும் தேவை. ஆனால் அம்மோனியாவை அடிப்படை ஜீவசக்தியாகக் கொண்ட உயிரினங்கள் சாத்தியமாகும் என்று சில விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். (ஜுபிடரில் அம்மோனியா கடல் இருந்திருக்கலாம் என்பது சிலர் கருத்து.) ஆகவே வேறுவிதமான ஜீவ சக்தியை ஆதாரமாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கக் கூடாதென்பதில்லை.

பரிணாம வளர்ச்சியின் உயர்ந்த நிலையில், கண்களும், காதுகளும், வாயும், மூளைக்கருகில் இருந்தால் செளகர்யமென்பதால், அண்டவெளி மனிதனுக்கு மண்டை ஓட்டிலேயே இந்த உறுப்புக்கள் இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர். அண்டவெளி மனிதனுக் குக் கண்கள், முகத்தளவு, பெரியவனாகவும், ‘இன்’ ஃப்ரா – ரெட் ஒளியைப் பார்க்கக் கூடிய ஆற்றலும் இருக்கலாம் என்கிறார்கள். அவ னுக்கு ஆறு கால்கள் இருக்குமாம்! – (இராவணனுக்குப் பத்து தலைகளா என்று கேட்கும் பகுத்தறிவு பாசறையாளர் கவனிக்க!-) பேச்சுக்குப் பதிலாக, எண்ணங்களை ‘டெலிபதி’ (Telepathy) மூலம் பரிவர்த்தனை செய்து கொள்வார்கள் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்!

‘வரப்போகிற நூற்றாண்டுகளில் இன்னும் எத்தனை அதிசயங்கள் நிகழ இருக்கின்றனவோ! ஆனால் இதைப் பற்றி நமக்குக் கவலை யில்லை; ராஜ்ய எல்லைத் தகராறுகளுக்காக. ஒருவர் வீட்டை ஒருவர் கொளுத்திக் கொண்டு வாழ்வோம்!

Exit mobile version