Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

கோடைக் கவிதைகள் – 3

கோடைப் பகல் —
வெண்ணொளி உருக்காலை.
தெரிவிக்காது ஊர்ந்தன
கருமேகங்கள்.
பூரிப்பின் விசைகள்தான்
எத்தனை !
மண் மணத்தைக்
கடைந்து பரப்பும் காற்று.
சன்னதமாடும் மரங்கள்.
இடியொலி முழங்க
திரை திறந்தது.
காட்டு யானைகளைப் போல
மறைந்து ஒளிந்தன மேகங்கள்.
நாடகம் சட்டென முடிந்தது.
அனாதியாய் பயணிக்கும்
ஒளி, வெளி நிறைத்து
மீண்டும் ஒளிர்ந்தது திரை.

Exit mobile version