Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

கோடைக் கவிதைகள் – 2

ஓயாத ஒளிமழையில்
நிழல் முளைத்து ரீங்கரிக்கிறது
எல்லாமும்.

சிவந்த மலர்களின் தீயில்
குளித்து எழுகிறான் சூரியன்.
துல்லியங்களின் பருவமிது.

எறும்பும் அதன் நிழலும்போல
நொடியும் அதன் நினைவும்
சேர்ந்து நகர்கின்றன.

ஒரு பொருளுக்கு, எத்தனை
நிழல்கள்!
சிறுத்து, பெருத்து, கருத்து.

எல்லா நிழல்களும் சேர்ந்து
விரியும் கோடை இரவு,
மிகப் பெரிய கருப்புக் குடைபோல.

முந்தையவை:

Exit mobile version