Site icon சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

அதே நிலம்

அறுவடை இயந்திரம் வயலுக்குள் நுழைந்தபோது நேரத்தைப் பார்த்தேன்.

காலை 10.12.

நெற்கதிர்களுக்கு நடுவே அந்தப் பெரிய இயந்திரம் உறுமிக்கொண்டே திரும்பியதைப் பார்த்தபோது, சிறுவயதில் பார்த்த அறுவடை நினைவுக்கு வந்தது.

அப்போது மனிதர்கள் இருந்தார்கள்.

அரிவாள்கள் இருந்தன.

கட்டுகள் இருந்தன.

சத்தம் இருந்தது.

இப்போது ஒரே ஒரு machine.

அதற்குப் பின்னால் தூசி.

10.47க்கு பாதி வயல் முடிந்திருந்தது.

11.08க்கு driver கீழே இறங்கிவிட்டார்.

“முடிஞ்சிடுச்சு சார்.”

“அவ்வளவுதானா?”

அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

“வேற என்ன சார் செய்யணும்?”

பல மாதங்களின் உழைப்பு, ஒரு மணி நேரத்தில் வயலிலிருந்து மூட்டையாக மாறியிருந்தது.

எவ்வளவு மூட்டை.

எவ்வளவு ஈரம்.

எவ்வளவு விலை.

அடுத்த கணக்கு ஆரம்பமாகிவிட்டது.

ஓய்வு பெற்ற பிறகு நிலத்தோடு எனக்கு மீண்டும் கொஞ்சம் தொடர்பு வந்திருந்தது.

சில வருடங்கள் பயிரிடப்படாமல் கிடந்ததால், ஊரார் குப்பை கொட்டும் இடமாகவே மாறியிருந்தது. அதை மீண்டும் பயிருக்கு கொண்டுவந்திருந்தேன்.

Solar panel போட்டிருந்தேன். வெயிலிலேயே pump ஓடியது.

முன்பெல்லாம் current எப்போது வரும் என்று பார்த்த காலம்.

இப்போது வெயில் இருந்தால் தண்ணீர் வரும்.

அதுவே எனக்கு ஒரு சிறிய சாதனை போல இருந்தது.

மர நிழலில் அமர்ந்தேன்.

Solar panel மீது வெயில் பளிச்சென்று விழுந்துகொண்டிருந்தது.

தூரத்தில் harvester இன்னொரு வயலுக்குப் போய்க்கொண்டிருந்தது.

காற்றே இல்லை.

வெயிலும் அமைதியும் கண்ணை சுழற்றியது. மரத்தின் மீது சற்று சாய்ந்து கண்ணை மூடினேன்.

2126.

காலை 6.10.

ஆதவன் வீட்டுச் சுவரில் தோன்றிய farm report-ஐ பார்த்தான்.

FIELD 7A

Soil moisture – 38%

Crop health – 94%

Water credit – 61%

Harvest readiness – 97%

கடைசி வரி மட்டும் பச்சையாக இருந்தது.

Ancestral Farm Status: Active

ஆதவன் முழுநேர விவசாயி இல்லை.

அவன் Chennai Coastal Resilience Grid-ல் water-systems engineer.

வாரத்தில் நான்கு நாட்கள் நகரத்துக்கான தண்ணீரைப் பார்த்துக்கொள்வான்.

மீதமுள்ள நாட்களில் குடும்ப நிலத்துக்கான தண்ணீரைப் பார்த்துக்கொள்வான்.

வேலை மட்டும் மாறியிருந்தது.

கவலை மாறவில்லை.

Farm vehicle-ல் ஏறியதும் குரல் வந்தது.

“Good morning, Aadavan. Route optimized.”

நான் போற இடம் எனக்குத் தெரியும்.”

“Manual route may consume 3.4% additional energy.”

“என் great-grandfather car ஓட்டும்போது இந்த மாதிரி யாரும் comment பண்ணல.”

இரண்டு விநாடிகள் அமைதி.

“Historical driving data unavailable.”

“அதனால்தான் அவர் சந்தோஷமா இருந்திருப்பார்.”

Vehicle பதில் சொல்லவில்லை.

2126-ல் சில machines humour புரிந்துகொண்டிருந்தன.

சில machines, திருமணமான நடுத்தர வயது மனிதரைப் போல, சில நேரங்களில் அமைதியாக இருப்பதே நல்லது என்று கற்றுக்கொண்டிருந்தன.

நிலம் மாறியிருந்தது.

ஆனால் முழுவதுமாக இல்லை.

ஒரு பகுதியில் agrivoltaic panels.

அதன் கீழே வெப்பத்தைத் தாங்கும் தானிய வகைகள்.

மற்றொரு பகுதியில் மரவரிசை.

நடுவில் மழைநீர் நிலத்துக்குள் ஊடுருவும் recharge zone.

வயலின் எல்லையில் autonomous insect-monitoring units.

ஆதவனின் பதினோரு வயது மகள் நிலாவும் வந்திருந்தாள்.

அவள் family archive-ஐ திறந்தாள்.

“Appa, இந்த land 2026லயும் நம்ம family-க்குத்தானா?”

“ஆமாம்.”

“அப்ப இந்த photo யாரு?”

Screen-ல் நூறு வருடம் பழைய படம்.

ஒருவர் solar panel அருகே நின்றிருந்தார்.

பின்னால் pump.

தூரத்தில் நெல்வயல்.

“உன் great-great-grandfather.”

“இவர் farmer-ஆ?”

ஆதவன் சிரித்தான்.

“Full-time இல்லை. Government IT service-லிருந்து retire ஆன பிறகு farming-ல interest எடுத்திருக்கார்.”

“IT-ல இருந்தவர் farming?”

“அந்த காலத்துல இரண்டையும் தனித்தனியா நினைச்சிருக்காங்க.”

நிலாவுக்கு அது பெரிய புதிராகத் தோன்றியது.

அடுத்த video ஓடியது.

ஒரு harvesting machine வயலுக்குள் சென்றுகொண்டிருந்தது.

Harvest completed in approximately one hour – 2026

நிலா சிரித்தாள்.

“ஒரு மணி நேரமா?”

“அப்ப அது fast.”

“இப்ப?”

ஆதவன் field display-ஐப் பார்த்தான்.

“Seventeen minutes.”

“அப்ப அவர் ரொம்ப patient.”

“அவர் காலத்துல patience-க்கு subscription கிடையாது.”

அன்றைய harvest ஆரம்பித்தது.

மூன்று சிறிய autonomous machines வயலுக்குள் சென்றன.

Driver இல்லை.

ஒன்று அறுத்தது.

ஒன்று தானியத்தைப் பிரித்தது.

மூன்றாவது yield, moisture, grain quality எல்லாவற்றையும் பதிவு செய்தது.

பதினாறு நிமிடம் நாற்பத்தெட்டு விநாடிகளில் வேலை முடிந்தது.

System கேட்டது:

Would you like to publish harvest record to family archive?

ஆதவன் Yes அழுத்தினான்.

கீழே பழைய entry இன்னும் இருந்தது.

2026 – One hour.

அவன் சிரித்தான்.

நூறு ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ஒரு மணி நேரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

இப்போது பதினேழு நிமிடத்துக்கே தனக்கு பொறுமை குறைவாகிவிட்டது.

மதியம் 12.35.

Screen சிவந்தது.

WATER ACCESS TEMPORARILY SUSPENDED

அதற்குக் கீழே:

Regional Aquifer Protection Protocol – Level 4

“என்னது?”

Farm AI அமைதியாகப் பதிலளித்தது.

“Groundwater extraction temporarily restricted.”

“நம்ம water credit இருக்கே?”

“61%.”

“அப்ப?”

“Credit availability does not override aquifer protection.”

ஆதவன் வயலைப் பார்த்தான்.

“Pump?”

“Operational.”

“Solar?”

“Generating 112% of current requirement.”

“Bore?”

“Available.”

“அப்ப தண்ணி?”

“Extraction not permitted.”

ஆதவன் சில விநாடிகள் அமைதியாக இருந்தான்.

“எல்லாமே இருக்கு. தண்ணி மட்டும் எடுக்க முடியாதா?”

“Correct.”

“இந்த rule போட்டவனோ ஒரு நாளாவது வயலில் நின்னிருக்க மாட்டான்.”

AI அதற்கு பதில் சொல்லவில்லை.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் பயிருக்கு irrigation தேவைப்படும் என்று model எச்சரித்தது.

Emergency water grid இருந்தது.

Allocation குறைவு.

Desalinated agricultural water விலை அதிகம்.

Recycled-water line அடுத்த மண்டலத்தில் repair.

Technology எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருந்தது.

ஒன்றுக்கும் உடனடி பதில் இல்லை.

ஆதவன் ancestral farm records-ஐத் திறந்தான்.

ஒரு நூற்றாண்டின் தகவல்கள்.

வருடங்களைப் பின்னோக்கி நகர்த்தினான். 

2091.

2073.

2048.

2027

ஒரு entry-யில் விரல் நின்றது.

Rainwater Recharge Pit – North-East Field Boundary

Initiated by V . G . Swaminathan 

அவன் பெரிதாக்கிப் பார்த்தான்.

பழைய photograph.

தோண்டப்பட்ட மண்.

பக்கத்தில் solar pump.

அதே மனிதர்.

நிலா அருகில் வந்தாள்.

“இது என்ன?”

“Recharge pit.”

“அவ்வளவு old technology?”

ஆதவன் சிரித்தான்.

“Oldன்னு சொல்லாதே. தண்ணி கீழே போற technology இன்னும் அதேதான்.”

“அப்படின்னா great-great-grandfather நமக்காக தண்ணி save பண்ணினாரா?”

“நமக்காகன்னு அவருக்குத் தெரியாது.”

“அப்ப யாருக்காக?”

ஆதவன் வயலைப் பார்த்தான்.

“நிலத்துக்காக இருக்கலாம்.”

சில விநாடிகள் அந்த photograph-ஐ பார்த்துவிட்டு Farm AI-யிடம் கேட்டான்.

“இந்த recharge pit இன்னும் ஏதாவது பயன் தருதா?”

“Checking historical hydrology and current sub-soil moisture data.”

Screen-ல் தகவல்கள் ஓடின.

பிறகு:

Legacy recharge zone remains hydrologically active.

பல ஆண்டுகளாக அந்தப் பகுதி வழியாக மழைநீர் நிலத்துக்குள் ஊடுருவியதால், அங்குள்ள ஆழ்மண் ஈரப்பதம் சுற்றிய பகுதிகளைவிட அதிகமாக இருப்பதாக system தெரிவித்தது.

Irrigation can be safely delayed for 48 hours.

அடுத்த 36 மணி நேரத்தில் மழை வாய்ப்பு 68%.

Yield loss probability மிகக் குறைவு.

ஆதவன் recommendation-ஐ ஏற்றுக்கொண்டான்.

Farm AI கேட்டது:

Reason for overriding standard irrigation schedule?

அவன் type செய்தான்:

Historical recharge capacity.

ஒரு விநாடி யோசித்துவிட்டு இன்னொரு வரி சேர்த்தான்.

And trust.

உடனே பதில் வந்தது.

“Trust” is not a recognized agronomic parameter.

ஆதவன் சிரித்தான்.

“2127 update-ல சேர்த்துக்கோ.”

அன்று இரவு மழை பெய்தது.

பெரிய மழை இல்லை.

நிலத்துக்குத் தேவையான அளவு.

மறுநாள் காலையிலும் water restriction இருந்தது.

ஆனால் irrigation தேவைப்படவில்லை.

நிலா மழைநீர் தேங்கியிருந்த சிறிய பள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“Appa…”

“ம்?”

“2126ல இவ்வளவு technology இருக்கு. ஆனா water-க்கு இன்னும் problem ஏன்?”

ஆதவன் அவளைப் பார்த்தான்.

“Technology தண்ணியை சுத்தம் பண்ணலாம். சேமிக்கலாம். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு போகலாம். எவ்வளவு இருக்குன்னு கணக்குப் போட்டு வீணாகாமலும் பார்த்துக்கலாம்.”

“அப்ப?”

“ஆனா நிலத்தடி தண்ணீரே குறைஞ்சுட்டா, எந்த technology-யாலும் எல்லாருக்கும் தேவையான அளவு கொடுக்க முடியாது.”

அவனுக்கே அந்தப் பதில் சற்றுக் கனமாகத் தோன்றியது.

உடனே சேர்த்தான்.

“Maths teacher மட்டும் முயற்சி பண்ணலாம்.”

நிலா சிரித்தாள்.

அன்று மாலை family archive-ல் புதிய photograph ஒன்று சேர்ந்தது.

2126 harvest.

பின்னால் autonomous machines.

Agrivoltaic panels.

முன்னால் ஆதவன், நிலா.

System automatic caption போட்டது:

Fourth-generation managed agricultural continuity.

ஆதவன் அதை வாசித்தான்.

Delete செய்தான்.

இரண்டு வார்த்தைகள் மட்டும் type செய்தான்.

அதே நிலம்.

Save.

“சார்…”

யாரோ தோளைத் தொட்டார்கள்.

கண் திறந்தேன்.

Harvester driver.

அதே வயல்.

அதே வெயில்.

Mobile-ல் 11.30.

“சார், machine கிளம்புது. நான் வரட்டுமா?”

சில விநாடிகள் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சரி.”

அவர் போனார்.

கொஞ்ச நேரத்தில் இப்படி ஒரு பகல் கனவா ?? விக்கித்தேன்.

Solar pump இன்னும் ஓடிக்கொண்டிருந்தது.

Pipe-ல் தண்ணீர் வேகமாக வந்துகொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும் ஏதோ சங்கடமாக இருந்தது.

Pump அருகே சென்றேன்.

Switch off செய்தேன்.

திடீரென்று அமைதி.

அருகில் இருந்தவர் கேட்டார்.

“ஏன் சார்? இன்னும் கொஞ்ச நேரம் ஓடட்டுமே?”

“வேண்டாம். இன்னைக்கு போதும்.”

நிலத்தின் வடகிழக்கு மூலையைப் பார்த்தேன்.

கனவில் பார்த்த இடம் அதுதான்.

Mobile எடுத்தேன்.

ஒருவரை அழைத்தேன்.

“ஒரு நாள் நேரம் கிடைக்கும்போது நிலத்துக்கு வாங்க.”

“எதுக்கு சார்?”

“Rainwater recharge pit எங்கே போடலாம் பார்க்கணும்.”

மறுமுனையில் சிறிய இடைவெளி.

“திடீர்னு என்ன சார்?”

நான் சிரித்தேன்.

“திடீர்னு இல்லை.”

Phone-ஐ வைத்தேன்.

Solar panel மேல் வெயில் இன்னும் விழுந்துகொண்டிருந்தது.

மின்சாரம் வேண்டிய அளவுக்கு இருந்தது.

நிலமும் அங்கேயே இருந்தது.

நூறு வருடங்களுக்குப் பிறகு யார் அதில் நிற்பார்கள் என்று தெரியவில்லை.

திரும்பி pump-ஐ ஒருமுறை பார்த்தேன்.

வெயில் நாளைக்கும் வரும்.

தண்ணீர் வருமா என்பதுதான் கேள்வி.

Exit mobile version