Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

சூரியக்கிண்ணம்

உள்ளங்கைக்குள்ளே சூரியனை பிடித்து,
யாரும் பார்க்காமல்
வீடுவரை கொண்டு சேர்த்து,
என் இருளின் அடர்த்திக்குத் தீனியிடுகிறேன்…!
இருள் சிறிதும் குறையவில்லை…?!
வெளிச்சத்தை குடித்து குடித்து
கொழுத்துத் திரிந்தது இருள்,
ஒளி இருளை போக்குமே,
அப்படியென்ன இந்த இருளுக்கு
அடங்கா பசி…?!
பிறகொருநாள் புரிந்தது,
கைகளில் வளைந்தோடும்
என் விதியின் விரிசலில் –
சூரியக்கதிரின் கசிவு…!
அவ்வகையில் என் வீதியெல்லாம்
பிரகாசித்துக் கிடக்க,
தினமொருமுறை என்னை நானே
என் இருளுக்கு இரையாக்கி
இறந்திருக்கிறேன்…!!!

Exit mobile version