Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

வாழ்த்துகளும் அறிவிப்புகளும்

சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை: சிறந்த எழுத்தாளர், தமிழ் நூலுக்கு இலக்கிய விருது

சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை இந்த ஆண்டு முதல் இரண்டு இலக்கிய விருதுகளை வழங்க உள்ளது. அந்த வகையில், தமிழ் எழுத்துலகுக்கு சிறந்த படைப்புகளை வழங்கிய எழுத்தாளர் ஒருவருக்கு ‘சூர்ய விருது’ வழங்கப்படும்.

இது ரூ.3 லட்சம் பரிசுத் தொகை கொண்டது. கடந்த 5 ஆண்டுகளில் வெளியான சிறந்த நூலின் ஆசிரியருக்கு ‘அக் ஷர விருது’ வழங்கப்படும். இது ரூ.2 லட்சம் பரிசு தொகை கொண்டது. விருதாளர்களுக்கு இலச்சினை, பாராட்டிதழ் வழங்கப்படும்.

Ambai (C.S. Lakshmi) | Photo Credit: Illustration: Sreejith R. Kumar

இந்த ஆண்டில், எழுத்தாளர் அம்பைக்கு படைப்பாளுமைக்கான சூர்ய விருதும், நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘சைக்கோன் – புதுச்சேரி’ என்ற நூலுக்கு அக் ஷர விருதும் வழங்கப்பட உள்ளன.

ஆளுநர் பங்கேற்பு: சென்னையில் அக்டோபர் மாதம் நடைபெறஉள்ள பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சாகித்ய அகாடமி செயலர் டாக்டர் சீனிவாச ராவ், டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் கலந்துகொண்டு, விருதாளர்களுக்கு விருது, பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளனர்.


இரா. முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது

2024 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் இரா.முருகனுக்கு வழங்கப்படுகிறது. விஷ்ணுபுரம் விருதினைப் பெறும் எழுத்தாளர் இரா.முருகனுக்கு வாசிப்போம் சொல்வனம் சார்பாகவும் வாசகர்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகள்


படைப்புகள் அனுப்புவோர் கவனத்திற்கு

சொல்வனம் இதழ்கள் பிரதி மாதம் இரண்டாவது/ நான்காவது ஞாயிறுகளில் வெளியிடப்படுகின்றன. 

பிரசுர தினத்துக்கு ஆறு நாட்கள் முன்பு எங்களை வந்தடையும் படைப்புகளை மட்டுமே உடனடி இதழுக்குப் பரிசீலிக்கிறோம். அந்த நாளுக்குப் பிறகு எங்களை வந்தடைவன அடுத்த இதழுக்கு ஒத்தி வைக்கப்படும். 

படைப்புகளை அனுப்புவோர் இதைக் கவனித்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

படைப்புகளை வோர்ட் அல்லது கூகிள் டாக்ஸ் வடிவமைப்பில் ஒரு கோப்பாக ஆக்கி அந்தக் கோப்பை ஒரு இணைப்பாக உங்கள் மின்னஞ்சலோடு சேர்த்து அனுப்பவும். 

பிடிஎஃப் கோப்புகளை அனுப்பவேண்டாம், எங்களால் அவற்றைப் பயன்படுத்தவியலாது. 

Exit mobile version