Site icon சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

எண் சாண் உடம்பிற்கு

ஒளவையார் தன் ஞானக்குறளில் நாடி, நரம்புகளைப் பற்றி சொல்கிறார்:

எழுபத்தீராயிர நாடி அவற்றுள் முழு பத்து நாடி முதல்.
நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா முறம் பெறு நாடி யொன்றுண்டு
காலோடு கையினடுவிடத் தாமரை நூல் போலு நாடி நுழைந்து.

நமது மூளையில் உள்ள மெல்லிய நரம்பு இழைகள்1,61,000 கீ மீ நீண்டு உடல் முழுவதையும் இணைக்கின்றன. சராசரியாக  70,000 விஷயங்களை நாள் ஒன்றிற்கு சிந்திக்கிறோம். கிட்டத்தட்ட,மணிக்கு 418 கிலோ மீட்டர் வேகத்தில் தகவல் பரிமாறப்படுகிறது. மூளை, தனது செயல்பாடுகளுக்கு, ஒரு இலட்சம் வேதியியல் விளைவுகளைச் சந்திக்கிறது.

இத்தகைய மூளையின் செயல்கள் சேதம் அடைந்தால்?

நம்முடைய இயற்கையான நரம்பு இழைகளை ஆய்வாளர்கள் முப்பரிமாண அச்சில் உருவாக்கியுள்ளார்கள். நரம்புகளில் ஏற்படும் நோய் மருத்துவத்தில் இந்தக் கண்டுபிடிப்பு மகத்தான ஒன்றாகும்.

முப்பரிமாண அச்சில் உருவாகும்  இவை, கிடைமட்டத்தில் அடுக் கப்பட்டு, மிருதுவான உயிர் மையின் மூலம், நரம்பு அணுக்களைப் பிணைக்கிறது. இதனால், நரம்பு வலைத்தொடர், மனிதவலைத் தொடரைப் போலவே செயல்பட முடிகிறது.

இழைகளின் வகைகள், அவற்றின் அமைப்பு போன்றவைகளை துல்லியமாகக் கட்டுப்படுத்த இந்த முப்பரிமாணத்தில்  முடிவதால், ஈடு இணையற்ற வகையில். மூளை செயல்படும் விதத்தையும், அதில் ஏற்படும் கோளாறுகளையும் அறிய முடியும். முதுமறதி மற்றும் நடுக்குவாத நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும்.

இந்த முப்பரிமாண அச்சு மூளைத் திசுக்கள், வலைத் தொடர்புகளை அமைத்துக் கொள்ளும்: மனித மூளை எவ்விதம் செய்யுமோ, அவ்விதமே நரம்புகள் செய்திகளைக் கடத்தும்.

UW Madison’s Waisman Center நரம்பியல்துறை பேராசிரியரான Su Chun Zhang இது வலிமையுள்ள மாதிரியாகச் செயல்பட்டு, மூளை அணுக்கள், இதுவரை மூளையுடன் எப்படி உரையாடுகின்றன என்ற புரிதலை தரும் எனச் சொல்கிறார். நோய் தோன்றும் முறைகள், மன நலக் குறைபாடுகள், ஸ்டெம் திசுயியல் போன்ற துறைகளில் இது நமக்கு உதவும். இதுவரை எவரும் இந்த அச்சு முறையை பயன்படுத்தவில்லையா என்ற கேள்வியும் இருக்கிறதல்லவா? Zhang&YuanweiYan இருவரும் அச்சு முறையை மாற்றியதே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்கிறார்கள். முன்னர் நெடு மட்டத்தில் அடுக்கப்பட்ட வகைகள், இப்போது கிடைமட்டத்தில் அடுக்கப்பட்டன.

மேஜையின் மீது ஒன்றின் அருகே ஒன்றாக அடுக்கப்பட்ட எழுதுகோள்களை மனதில் நினைத்துக் கொண்டால் நமக்கு இந்த கிடைமட்ட அடுக்குகள் புரியும். தூண்டப்பட்ட pluripotent திசுக்களில், மென்மையான உயிர் மையைக் கொண்டு,அதில், மூளை அணுக்களை வளர்த்து, கிடைமட்ட அடுக்குகளில் பொதிந்து, மூளை அணுக்கள் மற்றும் தொடர்புகள் இவற்றை வெற்றிகரமாக இந்த இழைகளில் செய்திருக்கிறார்கள். இந்த இழைகளில் இணைந்திருப்பதற்குத் தேவையான போதுமான வடிவமும் அத்துடன் சேர்ந்து அணுக்கள் வளர்ந்து ஒன்றும் பலவுமாகப் பெருகுவதையும், தம்முள் உரையாடுவதையும் கவனிக்க முடிந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் இவர்களின் சேர்க்கை திசுக்கள் மெல்லியதாக இருப்பதால், அணுக்களுக்கு தேவையான ஊட்டச்சத்தும், உயிர்வாயுவும் கிடைப்பது எளிதாக இருந்திருக்கிறது.

பெருமூளைப் புற ணியை அச்சில் வடித்தார்கள். மூளையின் பல்வேறு பகுதிகளுக்கான பல்வேறு திசுக்களை அச்சிட்டு இணைத்த போதும் அவை அனைத்துமே ஒன்றுடன் ஒன்று சிறப்பாகவும் குறிப்பாகவும் உரையாடியதை கவனிக்க முடிந்திருப்பது ஒரு நல்ல திருப்பமாகும்.

இவர்களின் ஆய்வகத்தில் ஒரு சிறப்பு உள்ளது. எத்தகைய நரம்பு அணுக்களையும், எந்த நேரத்திலும் இந்த ஆய்வகத்தில் அச்சிட முடியும். அதுமட்டுமல்ல, அவற்றை வெவ்வேறு வகைகளில் இணைப்பதும் சாத்தியமான ஒன்றென்று இவர் சொல்கிறார். அதனால் உற்பத்தி முறை நெ கழ்வுத்  தன்மையுடன் அமைகிறது.

நம் மூளையே வலைத்தொடர்களால் தான் இயங்குகிறது. திசுக்கள் தானியங்கி இல்லை. செய்தி பெறவும் செய்தி தரவும் ஒரு வலைத் தொடர் அமைப்பு தேவையாக இருக்கிறது. மூலக்கூறு இயல், மூ ளை வளர்ச்சி அல்லது குறை வளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி என பல் வேறு துறைகளில் இந்த நுட்பம் உதவும்.

இந்த அச்சு பல ஆய்வகங்களில் பயனாகும். திசுக்களை பாதுகாக்க சிறப்பு முறைகள் தேவையில்லை.

அறிவியலும்,தொழில் நுட்பமும் இணைந்து மனிதனுக்கு மன நலம், உடல் நலம் தர இதைப்போன்ற முயற்சிகள், வெற்றிகள் தேவை.

இந்திய முன்னோர்கள் உடல் நலத்திற்கு உழைப்பையும், மன நலத்திற்கு யோகா,முச்சுப்பயிற்சியும் செய்தார்கள். இன்று அறிவியல் போகும் வேகத்தை, அது காட்டும் நிரூபணங்களை நாமும் பெற வேண்டும் என்றால் செல்ல வேண்டிய தூரம் அதிகம் எனத் தோன்றுகிறது.

உசாத்துணை: https://neurosciencenews.com/3d-printed-brain-tissue-25554/ 

Exit mobile version