Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

குளக்கரை


[stextbox id=”info” caption=”மக்களின் தேடல்”]

டானல்டு டிரம்ப் ஒரு ட்வீட் செய்தால் அது எவ்வளவு கவனம் பெறுகிறது என்பதை மேலே வரைபடம் ஆக்கியிருக்கிறார்கள். தூக்கம் வராத நள்ளிரவில் Covfefe என்று தட்டச்சி ட்வீட்டுகிறார். அதன் பிறகு அந்த ட்வீட்டை நீக்கவும் செய்கிறார். அது எவ்வளவு பெரிய கவனிப்பைப் பெறுகிறது என்பதை இங்கே பார்க்கலாம். அதே ஜனாதிபதி பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் குறித்தும் ட்வீட்டி இருக்கிறார். அதைக் குறித்த பொதுமக்களின் அக்கறை நீல நிலத்தில் மேலே மெல்லிய கோடாக உள்ளதைப் பார்த்தால் அது பொதுமக்களின் கவனம் பெறாததையும் அறியலாம். என்ன காரணமாக இருக்கும் என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்வது?

https://twitter.com/skoczela/status/869917424816140289
[/stextbox]


[stextbox id=”info” caption=”உலகம் உருண்டையானது”]

டானல்டு டிரம்ப் சவுதி அரேபியாவிற்குச் சென்ற போது, அங்கே ஒரு உருளை கோளத்தின் மேல் சவூதி மன்னரும் அமெரிக்க ஜனாதிபதியும் கை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதைக் கண்ட இணையம் சும்மா இருக்குமா? ஹாஷ் டாக் போட்டு புரட்சிக்கு வித்திட்டது. #OrbChallenge என இட்டு உங்களின் இன்ஸ்டாகிராம் நிழற்படங்களைப் பகிருமாறு கோரியது. கீழே டென்மார்க், ஸ்வீடன், ஐஸ்லாந்து, நார்வே, ஃபின்லாந்து நாட்டின் பிரதம மந்திரிகள் கிண்டலடித்து பங்கு பெற்றிருக்கிறார்கள். [இத்தனை தலைவர்களிடம் மதிப்பு ஏதுமில்லாத ஒரு அதிபரை வைத்துக் கொண்டு அமெரிக்கா என்ன சாதிக்கப் போகிறது?]

https://twitter.com/gilbertjasono/status/869537151045840896
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஓட்டை”]

”குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் றொழில்” என்கிறார் வள்ளூவர். ரகசியமாகப் பாதுகாக்க வேண்டிய தகவல்களை தன்னுள்ளேயே வைத்துக் கொள்வது தலைவரின் கடமை. அதை காற்றில் பறக்கவிட்டு மற்றவர்களிடம் தகவல்களைக் கசிய விடுவதை டானல்டு டிரம்ப் சிரமேற்கொண்டு செய்து வருகிறார். ருஷியாவிடம் சிரியாவின் தாக்குதல்களைப் பற்றி உளறியது, இஸ்ரேல் சொன்ன அத்யந்த விஷயங்களை பொதுவில் போட்டு உடைத்தது என இந்தப் பட்டியல் நீளூகிறது. இப்படிப்பட்ட திறமையின்மை, தன்னை பதவியை விட்டுக் கீழே தள்ள வைக்குமா என்னும் கேள்வியை அவரே இங்கே வினவுகிறார்.

https://twitter.com/BraddJaffy/status/864283926390550528
[/stextbox]


[stextbox id=”info” caption=”இதற்குத்தானே ஆசைப்பட்டாய்?”]

”என்னுடைய முந்தைய வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் பல விஷயங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது முந்தைய பிஸினெஸைக் காட்டிலும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி வாழ்வு கொஞ்சம் சுளுவாக இருக்கும் என்று நினைத்தேன். ஏதோவொரு கூண்டில், பட்டுப்பூச்சியின் கூட்டினுள் அடைபட்ட மாதிரி உணர்வு கிடைக்கிறது. எனக்கு காரோட்டப் பிடிக்கும். அது முடியவில்லை. எனக்கு மேற்சென்று சாதிக்கப் பிடிக்கும். அதுவும் இடைஞ்சலாக இருக்கிறது.” என்கிறார் டிரம்ப்

https://www.theguardian.com/us-news/2017/apr/28/i-thought-being-president-would-be-easier-trumps-reuters-interview-highlights
[/stextbox]

Exit mobile version