Site icon சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

ரதநிலைதனை தருவாயே!

ஆழ்கடலின் சமநிலைக்கு
அருகில் துள்ளும்
மீன் நான்!
மேற்பரப்பில் எழும்
அலையின் அலைக்கழிப்பில்
பிடிமானக் கயிற்றின்
ஒரு முனைத்
தொக்கி நிற்கிறது!
அலைகளுக்கோ ஓய்வில்லை!
மூழ்கி முத்தெடுக்கும்
தன்முனைப்பும்
குறைவதாய்த் தோன்றவில்லை
கொஞ்சேமேனும்
கருணை காட்டுங்கள்
அலைகளே!
பேராழியின் பேரமைதியை
ஒருமுறையேனும்
தொட்டுவிட்டு
வந்து விடுகிறேன் !

Exit mobile version