Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

காற்றில் உறை மனிதன்

மூலம் : ஆனா ஸ்டீவன்சன்

தமிழாக்கம் : ஆர் . ரமணன்

நம் இரவு உறக்கத்தை கலைக்கும்
இந்த காற்று மனிதன்
சந்து பொந்துகளில் ஒளிந்திருக்கும்
கருப்பு பூதமல்ல;
அல்லது
தெரு விளக்கில்
தன் பேச்சுக் குரலுக்கே அஞ்சிடும்
வெளுத்த முகத்தினனும் அல்ல;
அல்லது
சித்திரவதை செய்து விசாரிக்கப்படும்
கைதியின் குரல்
மேளதாளங்களுக்கு மேல் கசிந்தோடும்
வேளையில்
மழை நனைத்த சின்ன தெருக்களில்
மாறி மாறி அடிக்கும்
காற்றின் பெரும் கரமுமல்ல.

கேள்.
அவன் மனதை இசைக்கும் சினமே
அவன் கனவுக் காற்று.
அவன் சருமமே
அதன் ஆடை.
காற்று மொழிவது அவன் அழுகையல்ல
அவன் வாழ்ந்திருக்கும் அச்சத்தை.
பேய் காற்றாய் இருப்பதாலோ
கரையில்லா கடலலையின்
முழக்கம், முடிவில்லா முழக்கம் போலவோ
தடுக்க ஒரு நிலமோ மேடோ
இல்லாமல்
வெள்ளத்தின் மேல் கரு வெள்ளமாய் பொழிவதாய்
சீறுவதாலோ
காற்று ஒன்றும்
மனிதத்திற்கு குறைவானதல்ல.

இப்போது அது
பணிவான நம் தீவை மூழ்கடிக்கிறது.
விளக்குகள் ஒளிரும் சிறு துறைமுகங்கள்
கப்பல்கள், அடுக்ககங்கள், மின்தூக்கிகள்,
ஊசிக் கோபுரங்கள், அஸ்திவாரங்கள்
நிறைந்த சொத்தை வான்வெளி
எல்லாவற்றையும்
அவனது இறுதி தொடுவானத்தோடு
ஒரு மாசில்லா முடிவிற்கு அடித்து சென்றது.
யாராலும் உருவாகாத இந்த இரவின்
ஒரே முடிவிற்கு இழுத்து சென்றது.
அங்கே காற்று காற்றாக மட்டுமே.
தூக்கம் தளர்த்திய அவனால்
அதன் விசையில்
பொருளோ இருப்போ இல்லாமல் போகிறது.
தொடக்கத்திற்கு முன்னே தொடங்கிய
அந்த அலை
முடிவின்போதும் முடியாது.

                               ***************

The Man in the Wind

Anne Stevenson

The man in the wind
who keeps us awake tonight
is not the black monk of the wind
cowering in corners and crevices,
or the white face under the streetlight
stricken with the guilt of his noise,
or the great slapping hand of the wind
beating and beating the rainy alleyways
while the torturer proceeds with the interrogation
and the prisoner’s risen voice
bleeds over cymbals and timpani.

Listen.
His dream of the wind
is the anger that tunes his mind
and wears his skin.
His cry is not what the wind says
but the fear he lives in.
Nor is the wind less human for being wilder,
or being, as now, a roar, a continuous roar
as of waves where there is no shore,
none, and no inland or headland to hinder
the pour of dark water over still more water.

And now it is drowning our polite island,
the little free ports with their spylights alerted,
ships, towerblocks, cranes, steeples, pylons
the carious skyline gone with his last horizon
to a clean pure end,
to the only end in this night of the uncreated
where the wind’s wind, loosened by his sleep
to the force of itself,
moves without meaning or being —
a wave that began before beginning,
that will not end after the end.

ஆனா  ஸ்டீவன்சன் (1933-2020) விருதுகள் பெற்ற கவிஞர். விமர்சகர். பிரிட்டனில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து மீண்டும் பிரிட்டனில் குடியேறியவர். ‘காற்றில் உறை மனிதன்’ கவிதை அவருடைய 1982ஆம் ஆண்டு வெளியான கவிதை தொகுதியான  ‘Minute by Glass Minute’ இல் இடம் பெற்றுள்ளது. அவரது காலத்திற்குப் பிறகு வெளிவந்த அவருடைய தொகுக்கப்பட்ட கவிதைகள்(Bloodaxe Books in 2023) புத்தகத்திலும்  உள்ளது. பனிரெண்டுக்கும்  மேற்பட்ட கவிதை தொகுதிகள், கட்டுரை மற்றும் விமர்சன புத்தகங்கள் எழுதியுள்ளார். இளமைக் பருவத்தில் செவித்திறனை இழந்தவர். தனது அந்த அனுபவத்தையே சில கவிதைகளில் எழுதியுள்ளாராம். அவர் எழுதிய அமெரிக்க கவிஞர் சில்வியா பிளாத்தின் சுய சரிதை விவாதத்திற்குள்ளானது. 

இந்தப் பாடல் முகநூலில் வந்தது( the guardian.com

Exit mobile version